இனி மொத்த குடும்பத்துக்கும் ஒரே ரீசார்ஜ்.. Vodafone Idea-வின் புது Family Plan.. 4G, 5G டேட்டா, வாய்ஸ், SMS!
விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கான புதிய பேமிலி ரீசார்ஜ் பிளான் (New Family Recharge Plan) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் சமமான நன்மைகளை வழங்குகிறது. என்ன திட்டம்? என்ன விலை? என்னென்ன நன்மைகள்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:
என்ன திட்டம்? என்ன விலை? வோடாபோன் ஐடியாவானது ரூ.1,601 மதிப்புள்ள ரெட்எக்ஸ் பேமிலி பிளானை அறிமுகம் செய்துள்ளது. விஐ நிறுவனத்தின் கூற்றுப்படி - இது வரம்பற்ற 4ஜி மற்றும் 5ஜி டேட்டா, சர்வதேச ரோமிங் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏராளமான எண்டர்டெயின்மெண்ட் (பொழுதுபோக்கு), டிராவல் (பயணம்) மற்றும் லைஃப்ஸ்டைல் (வாழ்க்கை முறை) சலுகைகளை வழங்கும் "இந்தியாவின் ஒரே ஒரு பேமிலி போஸ்ட்பெய்டு திட்டம்" ஆகும்!

என்னென்ன நன்மைகள்? 2 மெம்பர்களுக்கு மாதத்திற்கு ரூ.1,601 என்கிற விலையில் வழங்கப்படும் இந்த திட்டம், ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதத்திற்கு வரம்பற்ற டேட்டா (4ஜி / 5ஜி), வாய்ஸ் கால்கள் மற்றும் 3000 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. ஒவ்வொரு பயனருக்கும் ஒரே மாதிரியான முக்கிய நன்மைகளை வழங்கும் இந்த திட்டத்தில் தலா ரூ.299 க்கு கூடுதல் உறுப்பினர்களையும் சேர்க்கலாம்.
என்டர்டெயிமென்ட் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.1601 மதிப்புள்ள ரெட்எக்ஸ் பேமிலி திட்டத்தில் நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் ப்ரைம் (Amazon Prime),ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் சோனி லைவ் (SonyLIV) போன்ற ஓடிடி (OTT) தளங்களுக்கான அணுகல்களும் கிடைக்கும். அதாவது இந்த திட்டம் வழக்கமான நண்மைகளுடன் ஒரு விரிவான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.
டிராவல் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.1601 ரெட்எக்ஸ் பேமிலி திட்டத்தின் பயனர்கள் வருடத்திற்கு நான்கு இலவச விமான நிலைய லவுஞ்ச் வருகைகள், ஆண்டுக்கு ரூ.2,999 மதிப்புள்ள 7 நாள் சர்வதேச ரோமிங் பேக் மற்றும் இரண்டாவது ரோமிங் பேக்கில் 25 சதவீத தள்ளுபடி (ரூ.750 வரை) ஆகிய நன்மைகளை பெறுவார்கள், இதை குடும்பத்தின் எந்த உறுப்பினரும் பயன்படுத்தலாம்.
லைஃப்ஸ்டைல் நன்மைகளை பொறுத்தவரை, 6 மாத ஸ்விக்கிஒன் (Swiggy One) சந்தா மற்றும் ஒரு வருட நார்டன் (Norton) டிவைஸ் ப்ரொடெக்ஷன் ஆகிய நன்மைகள் கிடைக்கும். மேலும் விஐ ப்ரையாரிட்டி (Vi Priority) சேவையின் கீழ் ரெட்எக்ஸ் வாடிக்கையாளர்கள் 24/7 அர்ப்பணிப்புள்ள கஸ்டமர் கேர், ஸ்டோர்களில் முன்னுரிமை மற்றும் மூத்த குடிமக்களுக்கான வீட்டு வாசலில் சிம் டெலிவரி உள்ளிட்ட பிரத்யேக சலுகைகளை அனுபவிக்க முடியும்.
"ரெட்எக்ஸ் பேமிலி திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், விஐ நிறுவனம் ஆனது இந்தியாவில் போஸ்ட்பெய்டுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது. நாட்டின் மிகப்பெரிய போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர் தளத்தை கொண்ட ஒரு பிராண்டாக, விஐ போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுவருகிறது" என்று விஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஐ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செலவின்றி 5ஜி சேவையை (Vi Free 5G Service) வழங்கி வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்களுமே கையாளும் அதே "அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர்" (Unlimited 5G Data Offer) உத்தியாகும். விஐ நிறுவனம் அதன் 5ஜி அறிமுகமான பகுதிகளில் குறைந்தபட்சம் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குகிறது.
டெலிகாம் டால்க்கின் (TelecomTalk) அறிக்கையின்படி, வோடபோன் ஐடியா அதன் 5ஜி திட்டங்களுடன் 300ஜிபி எப்யுபி (300GB FUP), அதாவது நியாயமான பயன்பாட்டுக் கொள்கையின் (Fair Usage Policy) கீழ் 300ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த டேட்டா ஒவ்வொரு மாதமும் ரீசெட் (Reset) செய்யப்படும். விஐ நிறுவனம் ஆனது மைசூர், மும்பை, பாட்னா, டெல்லி, சண்டிகர் மற்றும் பல இடங்களில் தனது 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








