வேவு பார்க்கும் பேஸ்புக்.. யூசர் பார்க்கும் ஒவ்வொரு Link-கும் கணக்கு.. லிங்க் ஹிஸ்டரி தெரியாம இத பண்ணாதீங்க!
பேஸ்புக்கில் (Facebook) நாம் கிளிக் செய்யும் ஒவ்வொரு லிங்க்கையும் சேமித்து வைக்கும் லிங்க் ஹிஸ்டரி (Link History) பீச்சரை அந்த நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இந்த பீச்சர் மூலம் அதுதொடர்பான விளம்பரங்களை நமக்கே கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதனால், சில வில்லங்கமான லிங்க்குகளும் இடம்பெறலாம்.
ஆகவே, இந்த பீச்சரை எப்படி ஆப் செய்வது? இதனால் பேஸ்புக்கில் என்னென்ன நடக்கும்? இது நல்லதா அல்லது கெட்டதா? உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். மெட்டா (Meta) நிறுவனத்தின் பேஸ்புக் பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது கிடையாது.

உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சோஷியல் மீடியா ஆப்களில் பேஸ்புக் டாப்பில் இருக்கிறது. அதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. இங்கும் கோடிக்கணக்கான மக்கள் நாள்தோறும் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். சொல்லப்போனால், காலையில் எழுந்தவுடன் பேஸ்புக் பார்க்கும் பழக்கும் கூட மக்களிடையே இருக்கிறது.
ஒருகாலத்தில் போட்டோக்களை பகிர மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த பேஸ்புக்கில், இப்போது விளம்பரம் செய்வது முதல் வீடியோக்களை பதிவிட்டு பணம் சம்பாதிப்பது வரையில் செய்து கொள்ள முடிகிறது. அதிலும் விளம்பரம் செய்வதன் காரணமாக வெப்சைட் லிங்க்குகள் (Website Links) அடிக்கடி வர தொடங்கிவிட்டன.
அதில், சில தேவையான லிங்க்குகளும் இருக்கின்றன. அதேவேளையில் தேவையற்ற லிங்க்குகளும் வருகின்றன. இதை தெரிந்தோ அல்லது தெரியாமலோ கிளிக் செய்துவிட்டு, பின்பு பேஸ்புக்கை விட்டே வெளியே வந்துவிடுவோம். ஆனால், அது கண்காணிக்கப்படுகிறது என்றால், எப்படி இருக்கும்? அப்படிவொரு பீச்சரை பேஸ்புக் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.
இதற்கு லிங்க் ஹிஸ்டரி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பீச்சர் மூலம் யூசர்கள் கிளிக் செய்யும் லிங்க்குகள், வெப்சைட் விவரங்கள் அல்லது அதுதொடர்பான டேட்டாக்கள் சேமிக்கப்படும். அதன்பின்பு அதுதொடர்பான விளம்பரங்களும், செய்திகளும் உங்களது பார்வைக்கு மீண்டும் மீண்டும்படும்படி கொடுக்கப்படும்.
சொல்லப்போனால், யூசர்கள் அதிகம் விரும்பும் லிங்க்குகளை அவர்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க பேஸ்புக் நிறுவனம் இதை பயன்படுத்துகிறது. ஆகவே, இந்த பீச்சரை யூசர்களே ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம். இது தெரியாமல், நாம் பார்த்த விளம்பரங்கள் அடிக்கடி வருகிறதே என்று கவலைப்பட வேண்டியதில்லை.

இந்த லிங்க் ஹிஸ்டரி ஆன் செய்யப்பட்டிருந்தால் எப்படி ஆப் செய்வது? முதலில் பேஸ்புக் ஆப்பை நீண்ட நாட்களாக அப்டேட் செய்யவில்லை என்றால், கூகுள் பிளே ஸ்டோர் சென்று அப்டேட் செய்து கொள்ளுங்கள். அதன்பின்பு வழக்கம் போல ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
இப்போது, உங்களது பீட் (Feed) பக்கத்தில் தோன்றும் எதாவது ஒரு லிங்க்கை கிளிக் செய்துகொள்ளுங்கள். இப்போது, அந்த லிங்க் பேஸ்புக் மொபைல் பிரவுசர் (Facebook Mobile Browser) என்னும் பக்கத்துக்கு சென்றுவிடும். அதாவது, நேரடியாக அந்த வெப்சைட்டுக்கு செல்லாமல், பேஸ்புக் ஆப் மூலம் வரும் பிரவுசரில் அந்த தகவல்கள் காண்பிக்கப்படும்.
இப்போது, நீங்கள் டிஸ்பிளேவின் வலது புறத்தின் மேலே தோன்றும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யுங்கள். அதன்பின்பு தோன்றும் மெனுவின் கடைசியில் செட்டிங்ஸ் (Settings) டேப் இடம் பெற்றிருக்கும். அதை கிளிக் செய்தால், அலோவ் லிங்க் ஹிஸ்டரி (Allow Link History) டேப் தோன்றும். அதன் மூலம் ஆன் அல்லது ஆப் செய்து கொள்ளலாம்.
ஒருவேளை இதற்கு முன் சேமிக்கப்பட்ட வெப்சைட் ஹிஸ்டரி டெலிட் செய்ய வேண்டுமானால், அதற்கு கீழே இருக்கும் கிளியர் ஹிஸ்டரி ஆப்சனை பயன்படுத்துங்கள். இந்த லிங்க் ஹிஸ்டரியில் கடந்த 30 நாட்களில் நீங்கள் கிளிக் செய்த வெப்சைட் விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








