புது EPFO ரூல்ஸ்.. சம்பளத்திற்கு வரும் சிக்கல்.. ISF எச்சரிக்கை!
சமீபத்தில் இபிஎப்ஓ (EPFO) ஆனது யுஏஎன் (UAN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் உருவாக்கம் தொடர்பான புதிய விதிமுறைகளை அறிவித்து இருந்தது. இது ஊதியத்தில் (Payroll) இடையூறு மற்றும் ஆட்சேர்ப்பில் (Hiring) தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
135 நிறுவனங்களில் பணிபுரியும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான ஒப்பந்த பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐஎஸ்எப் (ISF) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் ஸ்டாஃபிங் பெடெரேஷன் (Indian Staffing Federation) ஆனது இபிஎப்ஓ-வின் தலைவர் ஆன ரமேஷ் கிருஷ்ணமூர்த்திக்கு அளித்த பிரதிநிதித்துவத்தில், இபிஎப்ஓ கொண்டு வந்துள்ள புதிய யுஏஎன் விதிகளில் உள்ள முக்கிய பிரச்னை ஒன்றை சுட்டிக்காட்டி உள்ளது.

ஐஎஸ்எப்-வின் கூற்றுப்படி, பல உறுப்பினர்கள் தங்கள் மொபைல் எண்கள் (Mobile Number) அவர்களின் ஆதார் அட்டைகளுடன் (Aadhaar Card ) இணைக்கவில்லை, இது எப்ஏடி-ஆல் அங்கீகரிக்கப்பட்ட யுஏஎன்-ஐ உருவாக்குவதில் (FAT-recognised UAN generation) சவால்களை ஏற்படுத்துகிறது. அறியாதோர்க்ளுக்கு எப்ஏடி என்றால் பேஸ் ஆதென்டிகேஷன் டெக்னாலஜி (Face authentication technology) ஆகும்.
மெம்பர்களின் முகங்கள் ஆப்பிற்கு அருகில் இருக்க வேண்டுமா அல்லது தொலைவில் இருக்க வேண்டுமா, அல்லது வெவ்வேறு ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் பல்வேறு செட்டிங்ஸ் இருக்காது போன்ற சிக்கல்கள் வரும்போது எப்ஏடி (பேஸ் ஆதென்டிகேஷன் டெக்னாலஜி) ஆனது எவ்வாறு செயல்படுகிறது என்பது வேட்பாளர்களுக்கு தெரியாது என்றும் ஐஎஸ்எப் கூறியுள்ளது.
யுஏஎன் உருவாக்கத்தில், இபிஎப்ஓ அப்படி என்ன புதிய விதியை கொண்டு வந்துள்ளது? ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) ஆனது இனி யுமாங் (UMANG) ஆப்பில், ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார தொழில்நுட்பம் (Aadhaar-based Face Authentication Technology) மூலம் மட்டுமே யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் ஒதுக்கீடு மற்றும் உருவாக்கம் (Allotment and generation) செய்யப்படும் என்று இபிஎப்ஓ அறிவித்துள்ளது.
இந்த புதிய விதி சத்தம் இல்லாமல் கடந்த ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வந்தது. இருப்பினும், சர்வதேச தொழிலாளர்கள் (International workers) மற்றும் நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்கள் (Citizens of Nepal and Bhutan) போன்ற விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், எம்பிளாயர் மூலம் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை உருவாக்கும் (Generating UAN through the employer) தற்போதைய செயல்முறை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள குறைகளை தான் ஐஎஸ்எப் சுட்டிக்காட்டி உள்ளது. ஐஎஸ்எப்-வின் கூற்றுப்படி, பணியாளர்களின் நிலையற்ற தன்மையால், பல இடங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு எப்ஏடி-ஐ ஒருங்கிணைப்பது தளவாட ரீதியாக சவால் ஆனதாகவும் மற்றும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் ஒரு செயல்முறையா ஆகவும் உள்ளது.
மேலும், பல ஊழியர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் அல்லது நிலையான இண்டர்நெட் கனெக்ஷன் கூட இல்லாததால், யுஏஎன் தொடர்பான இந்த புதிய கட்டாய விதியானது இணக்கத்தை மேலும் சிக்கலாக்குகிறது. யுஏஎன்-கள் இல்லாமல், சம்பள செயலாக்கம் மற்றும் பிஎப் பங்களிப்புகளும் தாமதமாகின்றன என்றும் ஐஎஸ்எப் கூறி உள்ளது.
கட்டாய கட்டுப்பாடுகள் காரணமாக யுஏஎன்-களை உருவாக்க முடியாததால், பணியமர்த்தும் செயல்முறையும் கூட பெரிதும் பாதிக்கக்கூடும். இந்த பிரச்சினைக்கு நீண்டகால தீர்வு தேவை. எப்ஏடி மூலம் டிஜிட்டல் ஆன்போர்டிங் செய்வதற்கான இணக்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் ஐஎஸ்எப் பரிந்துரைத்துள்ளது.
இதோடு ஜூலை 30, 2025 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கை வழியாக முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யுமாங் ஆப்பில் ஊழியர்கள் / உறுப்பினர்களுக்கான மூன்று இபிஎப்ஓ வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. யுஏஎன் ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்தல், ஏற்கனவே உள்ள யுஏஎன்-களுக்கான யுஏஎன் செயல்படுத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள செயல்படுத்தப்பட்ட யுஏஎன்-களுக்கான முக அங்கீகார சேவை.


Click it and Unblock the Notifications








