Home
News

ரசிகர்களை அலறவிட்ட (தி கான்ஜூரிங்க்- 3) "தி நன்": வி.ஆர் 360 வீடியோ-திக் திக் அனுபவம்.!

தற்பொழுது "தி நன்" திரைப்படத்தின் புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி(VR) 360 டிகிரி வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

By Sharath

ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பிருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட், ஜுராசிக் பார்க் போன்ற படங்களுக்கென தனி ரசிகர் படலம் இருப்பது போல பேய் படங்களுக்கென வெறித்தனமான ரசிகர் படலம் இருக்கிறது என்பதே உண்மை.

பேய் மற்றும் அது சார்ந்த அமானுஷ்ய கதைகள் நமக்குக் கொடுக்கும் திகில் அனுபவத்திற்காகவே பேய் படங்கள் நல்ல வசூலை அள்ளிக்குவிக்கிறது. உலகளவில் பேய் பட ரசிகர்களின் கூட்டம் மிகப் பெரியது.

ஹாரர் படங்களின் வசூல்

ஹாரர் படங்களின் வசூல்

ஹாலிவுட்டில் வெளியான பல ஹாரர் படங்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று அட்டகாசமான வசூல் சாதனைபடைத்தது "தி கான்ஜூரிங்", "தி கான்ஜூரிங்க்- 2" மற்றும் "அனேபெல்" போன்ற படங்கள் தான்.

"தி நன்" திரைப்படம்

இந்தப் படங்களை தொடர்ந்து வரும் செப்டம்பர் 7 இல் வெளியாகவிருக்கும் ஹாலிவுட் பேய் படம் தான் "தி நன்" திரைப்படம். "தி கான்ஜூரிங்", "அனேபெல்" படங்களின் காலகட்டத்திற்கு முன்னதாக நடைபெறும் கதைக்களத்தில் "தி நன்" திரைப்படம் படைக்கப்பட்டுள்ளது.

விர்ச்சுவல் ரியாலிட்டி(VR) 360 டிகிரி வீடியோ

விர்ச்சுவல் ரியாலிட்டி(VR) 360 டிகிரி வீடியோ

தற்பொழுது "தி நன்" திரைப்படத்தின் புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி(VR) 360 டிகிரி வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படத்தின் மார்க்கெட்டிங் மதிப்பைக் கூட்டுவதற்கு இந்த புதிய விடியோவை வெளியிட்டு ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. விர்ச்சுவல் ரியாலிட்டி(VR) 360 டிகிரி வீடியோ மூலம் பார்வையாளர்களை படத்தின் உலகத்திற்குள் அழைத்துச்சென்று நேரடி திகில் அனுபவத்தை வழங்கியுள்ளது.

செப்டம்பர் 7ம் தேதி உலகளவில்

டெமினியின் பிச்சீர், டைசா ஃபிராமிகா, ஜோனஸ் ப்ளோகெட், சார்லெட் ஹோப் போன்ற பலர் நடித்துள்ள இந்தப் படத்தை காரின் ஹார்டி என்பவர் இயக்கியுள்ளார். செப்டம்பர் 7ம் தேதி வெளிவரும் "தி நன்" திரைப்படம் "தி கான்ஜூரிங்" , "தி கான்ஜூரிங்க்- 2" மற்றும் "அனேபெல்" படங்கள் வரிசையில் இதுவும் நல்ல வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New Escape The Abbey VR Experience Released For Upcoming Horror Film, The Nun : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X