4 வீரர்களுடன் விண்ணுக்கு பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்: இது ஒரு புதிய சகாப்தம்- பாராட்டும் தலைவர்கள்

|

தனியார் நிறுவனம் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா முதன்முறையாக கடந்த மே மாதம் சோதனை செய்தது. இதில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் விண்ணுக்கு சென்றனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் கேப்சூல் மூலம் பூமிக்கு திரும்பினர்.

தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கும்

தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கும்

சரியாக 9 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் இருந்து முதன் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் விண்ணுக்கு சென்றது. தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மூலம் இந்த திட்டம் வெற்றிப்பெற்றதையடுத்து வரும்காலங்களில் பல தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா அமைப்பு நம்பிக்கை தெரிவித்தது.

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ்

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ்

முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் என்றும் பெருமையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றது. முன்னதாக ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிறுவனம் ஒரு இருக்கைக்கு சுமார் ரூ.600 கோடி கட்டணம் வசூலித்தது. இந்த செலவை குறைக்கும் பொருட்டு நாசா தனியார் நிறுவனம் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டது.

பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்கலம் ஏவப்பட்டது

பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்கலம் ஏவப்பட்டது

இந்த நிலையில் க்ரூ 1 மிஷன் மூலம் 4 வீரர்களை விண்வெளிக்கு நாசா அனுப்பியுள்ளது. பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டது. நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பாலகன் 9 ராக்கெட் ஏவப்பட்டது. விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்ராக்கெட்டின் மூலம் சுற்றுவட்டப்பாதையை அடைந்தனர்.

விண்வெளிக்கு பயணிக்கும் 4 வீரர்கள்

விண்வெளிக்கு பயணிக்கும் 4 வீரர்கள்

விண்வெளிக்கு பயணிக்கும் 4 வீரர்கள் குறித்து பார்க்கையில் 44 வயதான விக்டர் க்ளோவர், 51 வயதான கமாண்டர் மைக்கேல் ஹாப்கின்ஸ் இரண்டாவது பயணத்தை மேற்கொள்கிறார். ஹூஸ்டனை சேர்ந்த 55 வயதான ஷானர் வாக்கர் இரண்டாவது விண்வெளி பயணத்தை மேற்கொள்கிறார். 55 வயதான சோச்சி நோகுச்சி குழுவினரிடையே அதிக விண்வெளி அனுபவத்தை பெற்றவர்.

ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் கிளின் ஷாட்வெல்

ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் கிளின் ஷாட்வெல்

க்ரூ1 மிஷன் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சியின் ஒரு மைல்கல்லை வெளிப்படுத்துகிறது. கேபின் வெப்பநிலை கட்டுப்பாட்டில் சிறு சிக்கல் ஏற்பட்டது இருப்பினும் அது உடனடியாக நீக்கப்பட்டது. விண்கலம் நன்றாக செயல்படுகிறது என ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் கிளின் ஷாட்வெல் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினர்.

விண்வெளி வீரர்கள் புகைப்படத்தை பகிர்ந்த ஸ்பேஸ்எக்ஸ்

விண்வெளி வீரர்கள் புகைப்படத்தை பகிர்ந்த ஸ்பேஸ்எக்ஸ்

விண்வெளி வீரர்கள் தங்கள் கேப்ஸ்யூல்க்குள் இருக்கும்படியான புகைப்படத்தை ஸ்பேஸ் எக்ஸ் பகிர்ந்துள்ளது. அதோடு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய நான்கு வீரர்களும் சரியான சுற்றுப்பாதையில் இருப்பதை ஸ்பேஸ்எக்ஸ் உறுதி செய்தது.

மனித விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சகாப்தம்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், அதிபர் டொனால்ட் டிரம்ப் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த வெளியீட்டில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட துணை அதிபர் மைக்பென்ஸ், இது அமெரிக்காவின் மனித விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சகாப்தம் என தெரிவித்தார்.

Pic Courtesy: Socialmedia

Best Mobiles in India

English summary
New Era in HumanSpace Exploration: SpaceX Launches 4 Astronauts to Space in Crew-1 Mission

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X