இனி மது அருந்தினால் இரு சக்கர வாகனம் இயங்காது: சென்னை மாணவர்கள் புதிய கருவி உருவாக்கி சாதனை.!

மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த சாதனத்தின் தனி சிறப்பு என்னவென்றால் இருசக்கர வாகனத்தில் இந்தகருவி பொருத்தி இருக்கும் போது விபத்து ஏற்பட்டால் ஆம்புலன்ஸ்கு உடனடியாக தகவல் சென்றுவிடும்.

|

இந்தியாவில் அதிகளவு இருசக்கர வாகனம் மற்றும் கார் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. பெரும்பாலும் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டுபவர்களால் மிக அதிகமாக விபத்துகள் ஏற்படுகின்றன என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இனி மது அருந்தினால் இரு சக்கர வாகனம் இயங்காது: சென்னை மாணவர்கள் சாதனை.

இந்நிலையில் மது அருந்தவிட்டு வாகனத்தை இயக்கினால் வாகனம் தானாக நிற்கும் புதிய கருவியை சென்னையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். கண்டிப்பாக மாணவர்கள் உருவாக்கிய இந்த கருவி மிகப் பெரிய
வெற்றியைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம்

தமிழகம்

மேலும் இந்தியா அளவில் விபத்துகளில் நம் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன, இது போன்ற அதிக விபத்துகள் ஏற்பட காரணம் சீரற்ற சாலைகள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

சென்னை மாணவர்கள்

சென்னை மாணவர்கள்

இருந்தபோதிலும் மது போதையில் ஏற்படும் விபத்துகள் சற்று அதிகமாக தான் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னையை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் எழிலரசன்,பிரவின் ஷர்மா, சுபாஷ், ஹரிஷ் ஆகிய நான்கு மாணவர்கள் தான் இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளனர்.

கருவி எப்படி செயல்படும்?

கருவி எப்படி செயல்படும்?

மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த கருவி இரு சக்கர வாகனம் அல்லது 4 சக்கர வானத்தில் பொருத்தினால் அந்த வாகனத்தை ஓட்டுபவர் மது அருந்தி இருந்தால் வாகனம் கண்டிப்பாக துவங்காது, அதேபோல் இருசக்கர
வானத்தில் ஹெல்மேட் அணியாமல் ஓட்டினாலும் வாகனம் துவங்காது.

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

மேலும் மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த சாதனத்தின் தனி சிறப்பு என்னவென்றால் இருசக்கர வாகனத்தில் இந்த கருவி பொருத்தி இருக்கும் போது விபத்து ஏற்பட்டால் ஆம்புலன்ஸ்கு உடனடியாக தகவல் சென்றுவிடும்.

ஜிபிஎஸ்

ஜிபிஎஸ்

பின்பு உங்கள் வாகனம் திருடு போனாலும் எங்கு உள்ளது என்பதை அதில் உள்ள ஜிபிஎஸ் வைத்து கண்டு பிடித்து விடலாம். இந்த கண்டுபிடிப்பை தங்களது வாகனத்தில் பொருத்தி மாணவர்கள் அசத்தியுள்ளனர். மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த புதிய கண்டுபிடிப்பு விபத்துகளை தடுக்க பெரும் உதவியாய் இருக்கும்.

Best Mobiles in India

English summary
new-equipment-to-stop-drunk-and-drive-found-by-chennai-students: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X