புது பென்சன் ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. ஓய்வூதிய பேங்க் அக்கவுண்ட்டிற்கு வரும் முக்கிய மாற்றம்.. இனிமேல்?
2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இபிஎஸ் (EPS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (Employees Pension Scheme) முக்கியமான மாற்றம் ஒன்று அமலுக்கு வரும் என்றும், இதனால் ஓய்வூதியதாரர்களுக்கு 3 பலன்கள் கிடைக்கும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் 1995 இன் கீழ் ஓய்வூதியம் பெறுவோர், இந்தியா முழுவதும் உள்ள எந்த வங்கியிலும், எந்த கிளையிலும் தங்களுடைய ஓய்வூதியத்தை பெற முடியும். அதாவது ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய இருப்பிடம் அல்லது வங்கியை பொருட்படுத்தாமல் அவர்களால் தங்களுடை ஓய்வூதியத்தை மிகவும் எளிமையாக பெற முடியும்.

78 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பயனடையும் நோக்கத்தின் கீழ் இந்த புதிய இபிஎஸ் விதிகள் (New EPS Rules) அறிவிக்கப்பட்டு உள்ளன. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவால் (Union Minister Mansukh Mandaviya) அங்கீகரிக்கப்பட்ட, புதிய மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கட்டண முறை (Centralised Pension Payment System - CPPS) அறிமுகம் செய்யப்பட்டதின் விளைவாகவே பென்சன் தொடர்பான இந்த முக்கிய மாற்றம் அமலுக்கு வர உள்ளன.
புதிய சிபிபிஎஸ் (CPPS) இன் கீழ், ஓய்வூதியம் பெறுவோர் வங்கிகளை மாற்றும் போது, இனிமேல் ஓய்வூதிய கொடுப்பனவு ஆணைகளை (Pension Payment Orders - PPOs) டிரான்ஸ்பர் செய்ய வேண்டியதில்லை. இது ஓய்வூதியம் பெறுபவர்கள் நீண்ட காலமாக சந்தித்து வந்த ஒரு பெரிய சிக்கலாகும். தற்போது அதற்கு முடிவுகட்ட பட்டுள்ளது.
புதிய இபிஎஸ் ஓய்வூதிய விதிகளின் 3 முக்கிய நன்மைகள்: முன்னரே குறிப்பிட்டபடி, ஓய்வூதியம் பெறுவோர் இந்தியாவில் உள்ள எந்த வங்கி அல்லது எந்த கிளையிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத்தை பெறலாம். மேலும் ஓய்வூதியம் பெறுவோர் வங்கிகளை இடமாற்றம் செய்யும் போது அல்லது மாற்றும் போது பிபிஓ-வை டிரான்ஸ்பர் வேண்டியதில்லை. கடைசியாக ஓய்வூதியங்கள் வெளியிடப்பட்டவுடன் உடனடியாக வரவு வைக்கப்படும், சரிபார்ப்புக்காக கிளைகளுக்கு வருகை தர தேவையில்லை.
இந்த புதிய அமைப்பு இபிஎப்ஓ-வின் மையப்படுத்தப்பட்ட ஐடி எனேபிள்டு இயக்கப்பட்ட அமைப்பின் (Centralized IT Enabled System - CITES 2.01) ஒரு பகுதியாகும். இது ஒரு சில வங்கிகளுடன் மட்டுமே தனித்தனி ஒப்பந்தங்களை கொண்டிருந்த தற்போதைய பரவலாக்கப்பட்ட அமைப்பிலிருந்து வெளியேறி, மாற்றத்தை காண்கிறது.
இந்த மாற்றத்தை தொடர்ந்து ஏபிபிஎஸ் (ABPS) என்று அழைக்கப்படும் ஆதார் அடிப்படையிலான கட்டண முறைக்கான (Aadhaar-based payment system) மாற்றம் அடுத்தடுத்த கட்டத்தில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற, அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்களும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதிக்குள், ஜீவன் பிரமான் பத்ரா (Jeevan Pramaan Patra) என்று அழைக்கப்படும் தங்கள் லைஃப் சர்டிஃபிகேட்டை (Life certificates) சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுருந்தது.
ஏனென்றால் வாழ்க்கை சான்றிதழ் ஆனது கடைசியாக சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் மட்டுமே செல்லுபடியாகும். அப்படியாக இந்த 2024 ஆம் ஆண்டிற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆம் தேதியோடு முடிந்தது. 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அக்டோபர் 1, 2024 முதலே லைஃப் சர்டிஃபிகேட்டை சமர்ப்பிக்கத் தொடங்கலாம், மற்றவர்களுக்கு ஜீவன் பிரமான் பத்ராவை சமர்ப்பிக்கும் செயல்முறை நவம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
அரசாங்கத்தால் நீட்டிக்கப்படாத பட்சத்தில், சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 2024 நவம்பர் 30 ஆகும். ஒருவேளை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் உங்கள் லைஃப் சர்டிஃபிகேட்டை சமர்ப்பிக்கவில்லை என்றால் உங்கள் ஓய்வூதியம் நிறுத்தப்படலாம். லைஃப் சர்டிஃபிகேட் ஆனது மத்திய ஓய்வூதியச் செயலாக்க மையங்களுக்கு (Central Pension Processing Centers - CPPC) வந்தவுடன் மட்டுமே பணம் ரிலீஸ் செய்யப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








