புதிய EPFO விதி.. இனி ஆதார் ஃபேஸ் ஐடி இல்லாமல் UAN இல்லை.. அமைதியாக அமலுக்கு வந்தது!
இபிஎப்ஓ (EPFO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation) ஆனது யுஏஎன் (UAN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (Universal Account Number) தொடர்பான புதிய விதி ஒன்றை அமைதியாக அமல்படுத்தி உள்ளது.
இனி யுமாங் (UMANG) ஆப்பில், ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார தொழில்நுட்பம் (Aadhaar-based Face Authentication Technology) மூலம் மட்டுமே யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் ஒதுக்கீடு மற்றும் உருவாக்கம் (Allotment and generation) செய்யப்படும் என்று இபிஎப்ஓ அறிவித்துள்ளது. இந்த புதிய விதி ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வந்தது.

இருப்பினும், சர்வதேச தொழிலாளர்கள் (International workers) மற்றும் நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்கள் (Citizens of Nepal and Bhutan) போன்ற விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், எம்பிளாயர் மூலம் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை உருவாக்கும் (Generating UAN through the employer) தற்போதைய செயல்முறை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 30, 2025 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கை, ஏப்ரல் 8, 2025 தேதியிட்ட முந்தைய இபிஎப்ஓ சுற்றறிக்கையை செயல்படுத்தியதாக கூறுகிறது. மேலும் அந்த அறிக்கையின்படி முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யுமாங் ஆப்பில் ஊழியர்கள் / உறுப்பினர்களுக்கான மூன்று இபிஎப்ஓ வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அதென்ன மூன்று சேவைகள்?
1. யுஏஎன் ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்தல்
2. ஏற்கனவே உள்ள யுஏஎன்-களுக்கான யுஏஎன் செயல்படுத்தல்
3. ஏற்கனவே உள்ள செயல்படுத்தப்பட்ட யுஏஎன்-களுக்கான முக அங்கீகார சேவை
முன்னதாக இபிஎப்ஓ ஆனது ஊழியர் வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறும் விதிகளை (EPF Withdrawal Rules) திருத்தி இருந்தும் இங்கே குறிப்பிடத்தக்கது. 1952 ஆம் ஆண்டு இபிஎப் திட்டத்தின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாரா 68-பிடி இன் (Para 68-BD of the EPF Scheme) கீழ், இபிஎப்ஓ மெம்பர்கள் இப்போது ஒரு குடியிருப்பு சொத்தை வாங்குதல், கட்டுமானம் அல்லது இஎம்ஐ செலுத்துதலுக்காக தங்கள் பிஎப் கார்பஸில் இருந்து 90% வரை திரும்ப பெறலாம்.
மேலும் இந்த நடவடிக்கை - அக்கவுண்ட் திறக்கப்பட்ட தேதியிலிருந்து 5 ஆண்டுகள் என்கிற தகுதி காலத்தை 3 ஆண்டுகளாகவும் குறைக்கிறது. முன்னதாக, வீட்டுவசதிக்கான "பிஎப் வித்டிராவல்" செயல்முறை (Housing withdrawal Process) ஆனது 36 மாத மதிப்புள்ள பணியாளர் மற்றும் முதலாளி பங்களிப்புகள் மற்றும் வட்டியுடன் (எது குறைவாக உள்ளதோ அது) மற்றும் 5 ஆண்டுகள் தொடர்ச்சியான இபிஎப் உறுப்பினர் பதவிக்கு பிறகு மட்டுமே நிகழ்த்தப்படும் என்று வரையறுக்கப்பட்டது.
இப்போது அவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் முந்தைய விதிகள், வீட்டுவசதி திட்டங்களில் ஏற்கனவே சேர்ந்த உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தின. ஆனால் புதிய விதிகள் ஆனது இப்போது சந்தாதாரர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. அதேசமயம் இந்த ஹவுசிங் வித்ட்ராவலை பெறுதவதை வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என்கிற கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளன.
இபிஎ திரும்பப் பெறுதலில் அமலுக்கு வந்துள்ள மற்ற முக்கிய மாற்றங்கள் (Additional Major Changes to EPF Withdrawal): ஹவுசிங் வித்ட்ராவலுடன் சேர்த்து இபிஎப்ஓ ஆனது பிஎப் திரும்பப் பெறுதலை ஒழுங்குபடுத்தவும், விரைவுபடுத்தவும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிவித்து உள்ளது:
1. யுபிஐ (UPI) மற்றும் ஏடிஎம் (ATM) மூலம் உடனடி வித்ட்ராவல்கள்: ஜூன் 2025 முதல், அவசரத் தேவைகளுக்காக உறுப்பினர்கள் உடனடியாக ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்.
2. ஆட்டோ செட்டில்மென்ட் லிமிட் (Auto Settlement Limit) உயர்த்தப்பட்டது: ஆட்டோ செட்டில்மென்ட் லிமிட் ஆனது ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது
3. எளிமைப்படுத்தப்பட்ட க்ளைம் செயல்முறை (Claim Process): சரிபார்ப்பு அளவுருக்களின் எண்ணிக்கை 27 இல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது 95% உரிமைகோரல்கள் 3 - 4 நாட்களுக்குள் தீர்க்கப்படுகின்றன.
4. வாழ்க்கைத் தேவைகளுக்கான எளிதான வித்ட்ராவல்கள் (Easier Withdrawals for Life Needs): கல்வி, திருமணம் மற்றும் மருத்துவம் தொடர்பான பணம் எடுப்பதற்கான செயல்முறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன, இது ஊழியர்களுக்கு நிதி பணப்புழக்கத்தை அதிகரிக்கிறது.


Click it and Unblock the Notifications








