Home
News

திடீரென அமலுக்கு வந்த புதிய EPFO ரூல்.. க்ளைம் ப்ராசஸில் திடீர் மாற்றம்.. இனி ஆதார் அட்டைக்கு அவசியம் இல்லை!

இபிஎஃப்ஓ (EPFO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (Employees Provident Fund Organization) ஆனது க்ளைம் ப்ராசஸ் (Claim Process) தொடர்பான புதிய ரூல் ஒன்றை அறிவித்துள்ளது. அதென்ன ரூல்? இது யாருக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்? இதோ விவரங்கள்:

அது என்ன ரூல்? பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, ஒரு இபிஎஃப்ஓ உறுப்பினர் (EPFO Member) இறந்தால் அவரது ஆதார் அட்டை (Aadhaar Card) இல்லாமலே பிஸிக்கல் க்ளைம்களை செயலாக்குவதற்கான (Processing physical claims) புதிய சலுகையை அறிவித்து உள்ளது.

திடீரென அமலுக்கு வந்த புதிய EPFO ரூல்!

இந்த மாற்றமானது ஆதார் தரவுகளில் உள்ள பிழைகள் (Mistakes in Aadhaar), பழைய கேஸ்களுக்கான ஆதார் தகவல் கிடைக்காதது (Unavailability of Aadhaar information for older cases) மற்றும் யுஐடிஏஐ தரவுத்தளத்தில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் (Technical issues with UIDAI database) போன்ற கள அலுவலகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளும் நோக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் விளைவாக, ஆதார் சீடிங் (Aadhaar Seeding) இல்லாமலேயே பிஸிக்கல் க்ளைம்களின் செயலாக்கம் ஆனது இ-ஆபிஸ் ஃபைல் (e-Office File) மூலம் ஆபிஸர் இன் சார்ஜின் (Office in Charge - OIC) அனுமதியை பெறுவதை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று இபிஎஃப்ஓ ​​குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட ஃபைலில் இறந்து போன இபிஎஃப்ஓ உறுப்பினரின் விவரங்கள் (Deceased EFFO member's details) மற்றும் உரிமைகோருபவர்களின் சட்டபூர்வமான தன்மையை (Legitimacy of the claimants) அங்கீகரிக்க மேற்கொள்ளப்படும் சரிபார்ப்பு நடைமுறைகளும் (Verification procedures) ஆவணப்படுத்த வேண்டும் என்றும் இபிஎஃப்ஓ குறிப்பிட்டுள்ளது.

கூடுதலாக, இந்த புதிய நெறிமுறையில், மோசடியான வித்ட்ராவல்களின் (Fraudulent withdrawals) அபாயத்தை தடுக்க ஆபிஸர் இன் சார்ஜால் இயக்கப்பட்ட பிற கவனமான நடவடிக்கைகளுடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. யுஏஎன் (UAN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (Universal Account Number) ஆனது சரியாக இல்லை; ஆனால் ஆதார் தரவு சரியாக இருக்கிறது என்பது போன்ற சூழ்நிலைகளில் இந்த புதிய நடைமுறைகள் மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மார்ச் 26, 2024 தேதியிட்ட ஜேடி எஸ்ஓபி வெர்ஷன்-2 இன் பத்திகள் 6.9 மற்றும் 6.10 இல் விவரிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கள அலுவலகங்களுக்கு இபிஎஃப்ஓ ​​அறிவுறுத்தியுள்ளது. செப்டம்பர் 24, 2020 தேதியிட்ட முந்தைய சுற்றறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, யுஏஎன்-ல் உள்ள தரவை சரிசெய்தல் (Rectifying data in the UAN), சீடிங் (Seeding) மற்றும் ஆதாரை சரிபார்த்தல் / அங்கீகரித்தல் ஆகியவைகளும் இதில் அடங்கும்.

ஆதார் பதிவுகளில் உள்ள விவரங்களில் உள்ள தவறுகள், பழைய கேஸ்களுக்கான ஆதார் தகவல்கள் கிடைக்காதது, முடக்கப்பட்ட ஆதார் கணக்குகள் (Deactivated Aadhaar accounts) மற்றும் யுஐடிஏஐ தரவுத்தளத்தில் ஆதாரை சரிபார்ப்பதிலுள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் போன்ற சிக்கல்கள் கோரிக்கைகளை செயல்படுத்துவதிலும் பாதிக்கப்பட்ட உரிமைகோருபவர்களுக்கு உடனடியாக பணம் செலுத்துவதிலும் தாமதத்தை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து கொண்டுவரப்பட்டுள்ள இபிஎஃப்ஓ-வின் இந்த புதிய சலுகையானது, உரிமைகோரல் செயல்முறையை (Withdrawal Process) ஒழுங்குபடுத்துவதையும், உரிமை கோருபவர்களுக்கு சரியான நேரத்தில் பணம் கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமே வேண்டாம். இறந்த நபர்கள் சம்பந்தப்பட்ட கேஸ்களில் ஆதார் சீடிங் மற்றும் அங்கீகரிப்பதில் கள அலுவலகங்கள் சிரமங்களை எதிர்கொண்டதால் இந்த மாற்றங்கள் அவசியம் என்றும் இபிஎஃப்ஓ ​​குறிப்பிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New EPFO Rule on Member Death Here after without Aadhaar Rightful claimants Gets Timely Payments
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X