Home
News

புது பிஎஃப் ரூல்ஸ்.. கம்பெனி மாத்துனா.. பேலன்ஸ் மாறும்.. "இதை" உறுதி பண்ணிடுங்க.. அமலுக்கு வந்தாச்சு!

பிஎஃப் பணம் பெறும்‌ ஒவ்வொருவரும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கொண்டு வந்துள்ள இந்த புதிய விதியை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது இந்த விதிக்கு உட்பட வேண்டியிருக்கும்.

ஈபிஎஃப் என்றழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (Employee Provident Fund Organisation), பிஎஃப் பணம் வரவு வைக்கப்படும் அனைத்து தொழிலாளர்களுக்கும் புதிய விதியை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. முன்பெல்லாம், ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது, பழைய நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட பிஃஎப் பேலன்ஸ் (PF Balance) தொகையை இணைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

புது பிஎஃப் ரூல்ஸ்.. கம்பெனி மாத்துனா.. பேலன்ஸ் மாறும்.. அமலாகியாச்சு!

ஆனால், இனிமேல் உங்களது பழைய பிஎஃப் பேலன்ஸ் (Old PF Balance) தொகையை புதிய நிறுவனத்தின் கணக்கில் இணைக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்பர் சிஸ்டம் (Automatic Transfer System) மூலம் இந்தத் தொகைகள் தானாகவே இணைக்கப்பட்டுவிடும். ஆகவே, இதற்காக தனியாக விண்ணப்பம் கோர வேண்டியதில்லை.

இப்படி அடுத்தடுத்த நிறுவனங்களுக்கு மாறும் பொழுது, உங்களது யுஏஎன் அக்கவுண்டில் (UAN Account) பழைய நிறுவனங்களின் பேலன்ஸ் தொகைகள் புதிய நிறுவங்களுக்கு மாற்றி வரவு வைக்கப்பட்டுவிடும். இதற்கு ஏற்ப வட்டியும் உங்களுக்கு கிடைக்கும். பிஎஃப் பயனர்களின் சிரமத்தை குறைக்க தொழிலாளர் வருங்கால வைப்பு அமைப்பானது, இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

ஏப்ரல் 1ஆம் தேதி முதலே இந்த புதிய விதி அமலுக்கு வந்து விட்டதால், இனி வரும் காலங்களில் நிறுவனங்களை மாற்றினால், உங்களது யுஏஎன் அக்கவுண்ட்டை லாகின் செய்து, பழைய நிறுவனத்தின் பேலன்ஸ் புதிய நிறுவனத்தின் அக்கவுண்டோடு இணைக்கப்பட்டு விட்டதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

புது பிஎஃப் ரூல்ஸ்.. கம்பெனி மாத்துனா.. பேலன்ஸ் மாறும்.. அமலாகியாச்சு!

இதற்கு பிஎஃப் பயனார்களின் யுஏஎன் நம்பரை புதிய நிறுவனத்தில் கொடுத்து, அந்த நிறுவனத்துக்கான அக்கவுண்ட்டை ஓப்பன் செய்திருக்க வேண்டும். இது வழக்கமாக அனைத்து நிறுவனங்களிலும் பின்பற்றப்படுகிறது. முன்னதாக, புதிய நிறுவனத்தில் சேர்ந்த பிறகு பழைய நிறுவனத்தின் பிஎஃப் பணத்தை எடுக்க முடிவதில்லை. இரண்டு நிறுவனங்களின் பேலன்ஸை இணைத்த பிறகே எடுக்க முடிந்தது.

இதற்கு விண்ணப்பித்துவிட்ட வார கணக்கில் காத்திருக்கும் சூழல் நீடித்த நிலையில், பிஎஃப் பயனாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இப்படிப்பட்ட நேரத்திலேயே 2024-25ஆம் நிதியாண்டின் தொடக்கத்திலேயே மத்திய அரசின் கீழ் செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, இப்படியொரு ஒரு தீர்வை கொண்டு வந்துள்ளது.

இந்த புது விதி மட்டுமல்லாமல், 2024-25ஆம் நிதியாண்டில் பல்வேறு விதிகள் அமலுக்கு வந்திருக்கின்றன. அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள் மூலம் கிரெடிட் கார்டுகளின் பில்லிங் சைக்கிள் (Billing Cycle) மாற்றப்பட்டுள்ளன.

இப்போது, பில்லிங் சைக்கிளை கிரெடிட் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களே அவர்களது வசதிக்கு ஏற்ப மாற்றி கொள்ள முடியும். அதேபோல இந்த நிதியாண்டில் இன்சூரன்ஸ் பாலிசிகள் (Insurance Policies) டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வழங்கப்பட இருக்கின்றன. அனைத்து இன்சூரன்ஸ் பாலிசிகளிகளையும் டிஜிட்டல் முறையில் பெற்று கொள்ளும் வசதி வந்திருக்கிறது.

மேலும், என்பிஎஸ் லாகின் விதிகளின் (NPS Login Rules) கீழ் 2 கட்ட வெரிபிகேஷன் (Aadhaar-based Two Step Verification) சேர்க்கப்பட்டுள்ளது. வருமான வரிவிதிப்பு விதிகளின் (Income Tax Rules) கீழ் ரூ.3 லட்சத்துக்கும் கீழ் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி வசூலிக்கப்படாது. ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையில் 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
New EPFO Rule 2024 Automatic Transfer System Ensure Old PF Account Balance To New Employer Balance
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X