இது என்ன "ஃப்ரிட்ஜ்"-க்கு வந்த சோதனை- ஜனவரி முதல் ரூ.6000 வரை விலை ஏற்றம்?

|

பொதுவாக குளிர்சாதன பெட்டி வாங்கும்போது அதன் அளவு, டோர் வசதி உள்ளிட்டவைகளை பார்ப்பதோடு எத்தனை ஸ்டார்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். தற்போது அதே ஸ்டார்களில் மாற்றம் செய்யப்பட்டதோடு, ஸ்டார்கள் அடிப்படையில் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 வேறு பேனல்கள் மாற்ற திட்டம்?

வேறு பேனல்கள் மாற்ற திட்டம்?

லேபிளிங் வழிகாட்டுதல்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஐந்து நட்சத்திர அளவிலான குளிர்சாதன பெட்டிகளுக்கான பாரம்பரிய முறையில் இருந்து வேறு பேனல்களுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை தொழில்துறைக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2020 முதல் அமலுக்கு வரும் திட்டம்

2020 முதல் அமலுக்கு வரும் திட்டம்

குளிர்சாதனப்பெட்டி தயாரிப்புகளுக்கான டோர் காற்றுச்சீரமைப்புகள் (ஆர்ஏசி) மற்றும் எரிசக்தி திறன் பணியகம் (பிஇஇ) ஆகியவைகள் இணைந்து குளிர்சாதன பெட்டிகள் ஆகியவற்றிற்கான ஸ்டார் ரேட்டிங் மற்றும் லேபிள்களை மாற்ற முடிவெடுத்தது. இந்த முறை ஜனவரி 2020 முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதில் இரண்டு ஸ்டார் குளிர்சாதன பெட்டிகள் ஒரு ஸ்டாராக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.100 முதல் திட்டங்கள்: ஏர்டெல்லின் பலே அறிவிப்பு..!ரூ.100 முதல் திட்டங்கள்: ஏர்டெல்லின் பலே அறிவிப்பு..!

சங்கத் தலைவர் கமல் நந்தி அறிவிப்பு

சங்கத் தலைவர் கமல் நந்தி அறிவிப்பு

மின்னணு பொருட்களில் ஒன்றான குளிர்சாதன பெட்டிகள் வருகிற 2020ஆம் ஆண்டு முதல் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை அதிகரிக்க உள்ளது. இதுகுறித்து நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கமல் நந்தி கூறுயிருக்கிறார்.

ரூ.5000 முதல் ரூ.6000 வரை விலையேற்றம்

ரூ.5000 முதல் ரூ.6000 வரை விலையேற்றம்

குளிர்சாதன பெட்டிகள் தொடர்பான புதிய விதிகள் வருகிற 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. அப்போது 5 நட்சத்திர குறியீடு கொண்ட குளிர்சாதன பெட்டிகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விலை உயரும் என தெரிவித்துள்ளார். இது வியாபாரிகள் முதல் வாடிக்கையாளர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என வருத்தம் தெரிவித்தார்.

குளிர்சாதன பெட்டி விற்பனை வளர்ச்சி

குளிர்சாதன பெட்டி விற்பனை வளர்ச்சி

2018-19 வரையிலான நடப்பாண்டில் மின்னணு பொருட்களின் விற்பனை உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான வெயில் காலமான 6 மாதத்தில் குளிர்சாதன பெட்டிகள், ஏசி உள்ளிட்டவைகள் விற்பனை 15 சதவீதம் வரை வளர்ச்சி கண்டிருந்தது. இந்த நிலையில் மின்னணு பொருட்கள் அடுத்துவரும் காலங்களில் கடுமையான விலையேற்றத்தை அடையவுள்ளன

Best Mobiles in India

English summary
New energy label norms: refrigerators to cost Rs 6,000 more

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X