BSNL நெத்தியடி.. புதிய D2D சேவை.. SIM கார்டு இல்லாமல் போன் செய்யலாம், மெசேஜ் அனுப்பலாம்.. எப்படி?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது சிம் கார்டு இல்லாமலே மெசேஜ் அனுப்ப உதவும் மற்றும் ஆடியோ / வீடியோ கால் செய்ய உதவும் டி2டி (D2D) என்கிற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. டி2டி என்பது டைரக்ட் டு டிவைஸ் (Direct to Device) என்பதன் சுருக்கமாகும். இது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பிஎஸ்என்எல்-ன் 7 புதிய சேவைகளில் ஒன்றாகும்.
தற்போதைக்கு பிஎஸ்என்எல்-ன் இந்த டைரக்ட் டு டிவைஸ் சேவையானது ட்ரையல் பேஸிஸ்-ல் சோதிக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இது சிம் கார்டு அல்லது மொபைல் நெட்வொர்க் இல்லாமலேயே, வாடிக்கையாளர்களுக்கு போன்கால்களை செய்ய அனுமதிக்கும். பிஎஸ்என்எல்-ன் இந்த டி2டி தொழில்நுட்பம் எப்படி வேலை செய்யும்?

பிஎஸ்என்எல்-ன் இந்த சேவை, பாரம்பரியமான மொபைல் நெட்வொர்க்குகளின் தேவையை நீக்கி, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட டிவைஸ்களை இணைக்கிறது. இதற்காக வியாசாட் (Viasat) உடன் இணைந்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனமானது டி2டி சேவையின் சோதனைகளை வெற்றிகரமாக முடித்தும் உள்ளது.
இது தொடர்பான சோதனையின் போது, பிஎஸ்என்எல் நிறுவனமானது சுமார் 36,000 கிமீ தொலைவில் உள்ள வியாசாட்டின் செயற்கைக்கோள்களில் ஒன்றிற்கு, ஒரு மெசேஜை அனுப்ப, நிலப்பரப்பு அல்லாத நெட்வொர்க் (Non-terrestrial network - NTN) இணைப்பை கொண்ட வணிக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை (Commercial Android smartphone) பயன்படுத்தியது.
டி2டி தொழில்நுட்பம் ஆனது ஏற்கனவே உள்ள செல்லுலார் நெட்வொர்க்குகளை பயன்படுத்தி, விண்வெளியில் மிகப்பெரிய செல் டவர்களாக செயல்படும் சாட்டிலைட் கான்ஸ்டேல்லேஷன்களுடன் (Satellite constellations) தொடர்புகொள்வதற்கு, அவற்றை மறுபயன்பாடு (Repurposing ) செய்கிறது. குறைவான கனெக்டிவிட்டி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பயனர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஃபிளாக்ஷிப் ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் உள்ள சாட்டிலைட் கனெக்டிவிட்டியை போலவே தான், பிஎஸ்என்எல்-ன் டி2டி தொழில்நுட்பம் ஆனது நிலம், காற்று மற்றும் கடலில் வேலை செய்வதால், அவசரகால அல்லது இயற்கை பேரழிவுகளின் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அரசங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் தவிர, தனியார் டெலிகாம் நிறுவனங்களான பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவைகளும் கூட சாட்டிலைட் கனெக்டிவிட்டி சேவைகளில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இம்மூன்று நிறுவனங்களுமே எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவையின் விளைவாக கடும் போட்டி மற்றும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
அறியதோர்களுக்கு ஸ்டார்லிங்க் என்பது பூமியின் வளிமண்டலத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை பயன்படுத்து இண்டர்நெட் கனெக்டிவிட்டியை வழங்கும் ஒரு சேவையாகும். எலான் மஸ்க் தலைமையிலான இந்த சேவை ஏற்கனவே உலகின் பல்வேறு பகுதிகளில் இணைய இணைப்பை வழங்கி வருகிறது.
டி2டி உடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட மற்ற புதிய சேவைகளை பொறுத்தவரை, பிஎஸ்என்எல் நிறுவனமானது நிகழ்நேரத்தில் மோசடிகள் மற்றும் ஸ்பேம் காண்டாக்ட்களை அகற்ற்றும் கஸ்டம் ஸ்பேம் பிளாக்கிங் சொல்யூஷனை (Custom Spam Blocking Solution) அறிவித்துள்ளது. கூடவே வைஃபை ரோமிங் (WiFi Roaming) சேவையையும் அறிவித்துள்ளது. இது பயணம் செய்யும் போது, எந்தவொரு பிஎஸ்என்எல் எப்டிடிஎச் வைஃபை நெட்வொர்க்குடனும் (BSNL FTTH Wi-Fi network) கனெக்ட் ஆக அனுமதிக்கும்.
அடுத்ததாக இன்ட்ராநெட் லைவ் டிவியையும் (Intranet Live TV) அறிவித்துள்ளது. இதன்கீழ் பிஎஸ்என்எல்-ன் எப்டிடிஎச் பயனர்கள் ஃபைபர் அடிப்படையிலான (Fibre-based) இன்ட்ராநெட் லைவ் டிவி சேவையின் மூலம் 500 க்கும் மேற்பட்ட பிரீமியம் டிவி சேனல்களை அணுகலாம். இதோடு எனி டைம் சிம் (Any Time SIM) என்கிற சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஏடிஎஸ் என்கிற இந்த சேவையின் கீழ், தானியங்கி எனி டைம் சிம் கியோஸ்க்குகள் (Kiosks) வழியாக 24/7 அடிப்படையில், வாடிக்கையாளர்களுக்கு புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் வழங்கப்படும். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனமானது டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்டிற்கான (Disaster management) ஒன்-டைம் சொல்யூஷன் நெட்வொர்க்கையும், சுரங்கத் துறைக்கான பாதுகாப்பான 5ஜி நெட்வொர்க்கையும் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications