விமானத்தில் பறக்க புது Digi Yatra ஆப்ஸ்.. பழசு இனி செல்லாது.. பாஸ்போர்ட்.. ஆதார் தேவையில்லை.. புது லாகின் தேவை
தமிழகம் மற்றும் இந்திய விமான பயணிகளுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விமான பயணிகள் இதுவரை பயன்படுத்தி வந்த டிஜியாத்ரா (Digi Yatra) ஆப்ஸ் இனி வேலை செய்யாது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக புது மொபைல் ஆப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.
ஆம் மக்களே, இனி நீங்கள் விமானத்தில் பயணிக்க விரும்பினால், உங்களுடைய பழைய டிஜியாத்ரா ஆப்ஸ் மற்றும் அதன் கீழ் பதிவு செய்யப்பட்ட எந்த தகவலையும் நீங்கள் விமான நிலையங்களில் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், மத்திய விமான நிலைய ஆணையம் (Ministry of Civil Aviation India) புது டிஜியாத்ரா மொபைல் ஆப்ஸை (New Digi Yatra Mobile Apps) வெளியிட்டுள்ளது.

புது டிஜியாத்ரா மொபைல் ஆப்ஸை (New Digi Yatra Mobile Apps):
விமான பயணிகள் (flight passengers) அனைவரும் அவர்களின் மொபைலில் உள்ள பழைய டிஜியாத்ரா ஆப்ஸை அன்இன்ஸ்டால் (uninstall old digi yatra apps) செய்யும் படி அறிவுரைக்கப்பட்டுள்ளது. அதாவது, நிரந்தரமாக பழைய டிஜியாத்ரா ஆப்ஸை டெலீட் செய்துவிட அறிவுரைக்கப்பட்டுள்ளது. பழைய டிஜியாத்ரா ஆப்ஸை நீக்கம் செய்த பிறகு, உடனே அதே கையோடு புதிய டிஜியாத்ரா ஆப்ஸை டவுன்லோட் செய்து லாகின் செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
புதிய டிஜியாத்ரா ஆப்ஸை எப்படி டவுன்லோடு (How to Download New Digi Yatra Apps) செய்வது? அதில் எப்படி லாகின் செய்து (How to Log-in New Digi Yatra Apps), உங்கள் விபரங்களை பதிவிடுவது? என்பது போன்ற முழுமையான தகவலை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இதற்கு முன், தெரியாதவர்களுக்காக டிஜியாத்ரா (Digi Yatra) சேவை என்றால் என்ன என்பதை சுருக்கமாக விலக்கிவிட்டு நேரடியாக தகவலுக்கு செல்லலாம்.
விமான பயணிகளின் பயணத்தை சுலபமானதாக மாற்றவும், மொத்த பயணமுறையையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த டிஜியாத்ரா திட்டம். பாஸ்போர்ட் (Passport), ஆதார் அட்டை (Aadhaar Card) போன்ற எந்தவித ஆவணங்களின் தேவையும் இல்லாமல், காகிதமற்ற (Paperless) முழுமையான டிஜிட்டல் (Digitalized) சேவையை ஆதரிக்கும் சேவை தான் இந்த டிஜியாத்ரா சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய டிஜியாத்ரா ஆப்ஸை எப்படி டவுன்லோடு செய்து லாகின் செய்வது? (How to Download and Log-in in New Digi Yatra Apps):
பாஸ்போர்ட், ஆதார் எதுவும் இல்லாமல் எப்படி விமான நிலையங்களில் செக்-இன் செய்வது? போர்டிங் செய்வது? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். டிஜியாத்ரா சேவை உங்கள் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் விபரங்களை டிஜியாத்ரா ஆப்ஸ் மூலம் பதிவு செய்துகொள்கிறது. இத்துடன் உங்கள் முக அங்கீகாரத்தையும் டிஜியாத்ரா பதிவு செய்துகொள்கிறது. இதன் காரணமாக நீங்கள் விமான நிலையத்தில் உங்கள் முகத்தை மட்டும் காண்பித்தால் போதுமானது.
தனியாக எந்த ஆவணத்தையும் கையுடன் எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் உள்ள பல விமான நிலையங்களில் டிஜியாத்ரா என்ட்ரி கேட்கள் வைக்கப்பட்டுள்ளன, சமீபத்தில் சென்னை விமான நிலையமும் டிஜியாத்ரா சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகைய சேவையை சரியாக பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று இப்போது பார்க்கலாம்.
புதிய டிஜியாத்ரா ஆப்ஸ் இப்போது ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) ஆகிய இரண்டு தளங்களிலும் கிடைக்கிறது. புதிய டிஜியாத்ரா ஆப்ஸின் QR கோட் விபரங்கள் X பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதை இந்த பதிவுடன் இணைக்கிறோம். முதலில் பழைய டிஜியாத்ரா ஆப்ஸை டெலீட் செய்யவும். பிறகு, புதிய டிஜியாத்ரா ஆப்ஸை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்.
உங்கள் தகவலை உள்ளிட்டு புதிய டிஜியாத்ராவில் லாகின் செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
- உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் விபரங்களை உள்ளிடவும்.
- டிஜிலாக்கர் (DigiLocker) அல்லது ஆதார் மூலம் பதிவு செய்யவும்.
- உங்கள் செல்பி புகைப்படத்தை சமர்ப்பித்து, கிரெடேன்ட்ஷியல் (credentials) தகவலை உள்ளிடவும்.
- உங்கள் பயண விபரங்களை உள்ளிடவும்.
- மைய விமான நிலையத்துடன் இந்த தகவலை இணைத்து அப்லோட் செய்யவும்.
அவ்வளவு தான் வேலை முடிந்தது. இனி நீங்கள் விமான நிலையத்திற்குள் உங்கள் முகத்தை மட்டும் காண்பித்து பயணிக்க துவங்கலாம்.


Click it and Unblock the Notifications