புதிய கெடு.. Fastag, UPI முதல் Wallet வரை.. மார்ச் 15-க்குள் ஒவ்வொரு Paytm யூசரும் என்னென்ன செய்ய வேண்டும்?
இந்திய ரிசர்வ் வங்கியானது, பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுக்கான காலக்கெடுவை மார்ச் 15, 2024 வரை நீட்டித்துள்ளது. கூடவே ஃபாஸ்டேக் முதல் பேங்க் வேலட் வரை ஒவ்வொரு பேடிஎம் வாடிக்கையாளருக்கு என்னென்ன செய்ய வேண்டும்? மார்ச் 15-க்கு பின் என்ன நடக்கும்? என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளது.
பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் வேலட் (Paytm Payments Bank Wallet): மார்ச் 15, 2024 க்கு பிறகு, பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் வேலட் பயனர்கள் பணத்தை நிரப்பவோ, பணப் பரிமாற்றம் செய்யவோ அல்லது பணப் பரிவர்த்தனைகளை தவிர வேறு எந்த கிரெடிட்களையும் பெற முடியாது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகள் (Bank accounts with Paytm Payments Bank): பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்பு அல்லது நடப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், மார்ச் 15 க்குப் பிறகு, தங்கள் கணக்கிலிருக்கும் பணத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம், திரும்பப் பெறலாம் அல்லது மாற்றலாம்.
அதேபோல, அக்கவுண்டில் பேலன்ஸ் இருக்கும் வரை அவர்கள் தங்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கவோ அல்லது பணத்தை மாற்றவோ முடியும். மார்ச் 15 க்கு பிறகு பேடிஎம் பேமெண்ட்ஸின் சேமிப்பு அல்லது நடப்பு கணக்குகளில் தங்கள் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது.

யுபிஐ / ஐஎம்பிஎஸ் மூலம் பணப் பரிமாற்றம் (Money transfer through UPI/ IMPS): மார்ச் 15, 2024 க்கு பிறகு, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பேடிஎம் பேங்க் மூலம் தங்கள் கணக்கில் பணத்தை மாற்ற முடியாது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கிலிருந்து, பேலன்ஸ் இருக்கும் வரை யுபிஐ / ஐஎம்பிஎஸ் மூலம் உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கலாம்.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வழங்கிய ஃபாஸ்டேக் (FASTag issued by Paytm Payments Bank): பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் வழங்கிய ஃபாஸ்டேக் கொண்ட வாடிக்கையாளர்கள், ஃபாஸ்டேக்-ஐ பயன்படுத்தி, நிலுவைத் தொகை வரை கட்டணம் செலுத்த முடியும். எவ்வாறாயினும், மார்ச் 15, 2024 க்கு பிறகு ஃபாஸ்டேக் வங்கி வழங்கும் ஃபாஸ்டேக்-இல் கூடுதல் நிதி அல்லது டாப்-அப்கள் அனுமதிக்கப்படாது. மேலும் மார்ச் 15, 2024க்குப் பிறகு பேலன்ஸ் மற்றும் ரீசார்ஜ்ஜூம் செய்ய முடியாது.

எந்தவொரு சிரமத்தையும் தவிர்க்க மார்ச் 15, 2024 க்கு முன் மற்றொரு வங்கியால் வழங்கப்பட்ட புதிய ஃபாஸ்டேக்-ஐ வாங்க வேண்டும். ஃபாஸ்டேக் தயாரிப்பில் கிரெடிட் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் அம்சம் இல்லாததால், வாடிக்கையாளர்கள் வங்கியால் வழங்கப்பட்ட பழைய ஃபாஸ்டேக்கை க்ளோஸ் செய்துவிட்டு, பணத்தை திரும்பப்பெற வங்கியிடம் கோர வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பழைய ஃபாஸ்டேக்கை க்ளோஸ் அல்லது டி ஆக்டிவேட் செய்வது எப்படி? உங்கள் யூசர் ஐடி, வாலட் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி ஃபாஸ்டேக் பேடிஎம் போர்ட்டலில் லாக்-இன் செய்யவும். பின்னர் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக உங்கள் ஃபாஸ்டேக் எண் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் போன்ற அத்தியாவசிய தகவல்களை உள்ளிடவும். பின்னர் கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்து ஹெல்ப் & சப்போர்ட் விருப்பத்தைக் கண்டறியவும்.
அங்கே கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து 'நான்-ஆர்டர் தொடர்புடைய வினவல்களுக்கு உதவி தேவையா? (Need Help With Non-Order Related Queries?) என்பதை தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஃபாஸ்டேக் ப்ரொபைலை புதுப்பிப்பது தொடர்பான வினவல்கள்' (Queries Related to Updating FASTag Profile) என லேபிளிடப்பட்ட விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
கடைசியாக நான் எனது ஃபாஸ்டேக்கை மூட விரும்புகிறேன் (I Want to Close My FASTag) என்பதை தேர்வுசெய்து, டிஆக்டிவேட் செயல்முறையை முடிக்க வழங்கப்படும் அடுத்தடுத்த வழிமுறைகளை பின்பற்றவும்; அவ்வளவு தான். புதிய ஃபாஸ்டேக்கிற்கான மாற்று வழங்குநர்களை பொறுத்தவரை எச்டிஎப்சி (HDFC) அல்லது ஐசிஐசிஐ (ICICI) வங்கி போன்ற மாற்று ஃபாஸ்டேக் வழங்குநர்களை தொடர்புகொள்ளவும்.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியால் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க முடியுமா? மார்ச் 11, 2022 அன்று அறிவிக்கப்பட்ட வணிக கட்டுப்பாடானது, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி அந்த அதன் எந்தவொரு சேவைக்கும் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பது தடை செய்யப்பட்டு, அது தொடர்ந்து அமலில் இருப்பதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications