புது ரூல்ஸ்.. ஏப்.1 அமலுக்கு வந்தது.. பேங்க் கஸ்டமர்கள்.. "இது தெரியாம" எதும் பண்ணாதீங்க.. என்னென்ன மாறுது?
2024-25ஆம் நிதியாண்டு தொடங்கிவிட்டாதால், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) வங்கிகளுக்கு உத்தரவிட்ட புதிய விதிமுறைகள் இரவோடு இரவாக அமலுக்கு வந்துவிட்டன. எஸ்பிஐ (SBI), ஐசிஐசிஐ (ICICI), ஆக்சிஸ் (Axis), யெஸ் (Yes) கஸ்மடர்களுக்கு நேரடியாக மாற்றமிருக்கும்.
இந்த நிதியாண்டில் ஏகப்பட்ட புதிய விதிகளை சாமானிய மக்கள் முதல் வருமான வரி கட்டும் மக்கள் வரையில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. அதில் சில விதிகள் நேரடி தாக்கத்தையும், சில விதிகள் பழைய நடைமுறைகளை அடியோடு நிறுத்தியும் இருக்கின்றன. இவற்றில் பேங்க் மினிமம் பேலன்ஸ், கிரெடிட் கார்டு லிமிட் விதிகள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால், கோடிக்கணக்கான கஸ்டமர்களை வைத்திருக்கும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State bank of India), ஐசிஐசி பேங்க் (ICICI Bank), ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) போன்ற முக்கிய வங்கிகள் இதில் ஒட்டுமொத்தமாக சம்பந்தப்பட்டுள்ளன. முதலில் புதிய கிரெடிட் கார்டு விதிகளில் இருந்து பார்ப்போம்.
புதிய கிரெடிட் கார்டு விதிகள் (New Credit Card Rules): இந்த விதிகளில் 2 மாற்றங்கள் இருக்கின்றன. ஒன்று அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டிய கிரெடிட் கார்டு விதிகள் மற்றொன்று குறிப்பிட்ட வங்கிகள் பின்பற்ற வேண்டிய விதிகளாக இருக்கின்றன. முதலில் அனைத்து வங்கிகளின் கிரெடிட் கார்டுகளின் பில்லிங் சைக்கிள் (Billing Cycle) மாற்றப்பட்டுவிட்டன.
கிரெடிட் கார்டு பில்லிங் சைக்கிளை பொறுத்தவரையில், மாதத்தின் 7ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதத்தில் 6ஆம் தேதி வரையில் கணக்கிடப்படும். இந்த நாட்களில் ஒட்டுமொத்த கிரெடிட் கார்டு டிரான்ஸாக்ஷன் விவரங்களும் அடங்கும். 27 நாட்கள் முதல் 31 நாட்கள் வரையில் இந்த பில்லிங் சைக்கிளின் நாட்கள் இருக்கலாம்.

ஆனால், இந்த பில்லிங் சைக்கிள் விதியானது, வங்கிகள் அல்லது கிரெடிட் கார்டு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டவை. ஆகவே, அவர்கள் சொல்லும் தேதியில் பில்லிங் சைக்கிள் இருப்பதால், கஸ்டமர்கள் சில தேதிகளில் மிகவும் சிரமத்தை சந்திக்க நேரிட்டது. இப்போது, அந்த நடைமுறை ஒட்டுமொத்தமாக மாறப்போகிறது.
இப்போது, பில்லிங் சைக்கிளை அந்தந்த கிரெடிட் கார்டு கஸ்டமர்களே தங்களது வசதிக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம். இதன் மூலம் பில்லிங்கில் தாமதம் ஏற்படுவது, அவசர அவசரமாக பணத்தை புரட்டுவது போன்ற நடைமுறை சிக்கல் தேதிக்கு ஏற்றாற் போல சமாளிக்கப்படும். இருப்பினும், குறித்த தேதியில் கிரெடிட் கார்டு பில்களை செலுத்தி விடுவது நல்லது.
இப்போது, வங்கிகள் தனித்தனியே கிரெடிட் கார்டு விதிகளில் எந்தெந்த மாற்றங்களை கொண்டுவந்துள்ளன என்பதை பார்ப்போம். எஸ்பிஐ கிரெடிட் கார்டு விதிகளில் (SBI Credit Card Rules) ஏப்ரல் 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு வாடகை செலுத்தும் பரிவர்த்தனைகளில் (Rent Payment Transactions) ரிவார்டு பாயிண்ட்கள் பெறுவது நிறுத்தப்படுகிறது.
இதில், எஸ்பிஐ கார்ட் எலைட், எஸ்பிஐ எலைட் அட்வான்டேஜ், எஸ்பிஐ கார்டு பல்ஸ் போன்ற பல்வேறு கார்டுகள் இடம்பெற்றுள்ளன. யெஸ் பேங்க் கிரெடிட் கார்டு மாற்றங்களை பொறுத்தவரையில், காலண்டர் காலாண்டில் ரூ.10,000 அல்லது அதற்கு மேல் செலவழிக்கும் காடுகளுக்கு மட்டும் இலவச உள்நாட்டு லவுஞ்ச் அணுகல் கிடைக்கும்.
ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு விதிகளை பார்க்கையில் காலண்டர் காலாண்டில் ரூ.35,000 செலவழிக்கும் கார்டுகளுக்கு காம்லிமென்டரி ஏர்போர்ட் லவுஞ்ச் அணுகல் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஏப்ரல்-மே-ஜூன் காலாண்டில் இலவச லவுஞ்ச் அணுகலுக்கு தகுதிபெற, ஜனவரி-பிப்ரவரி-மார்ச் 2024 காலாண்டில் ரூ.35,000 செலவழித்திருக்க வேண்டும்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளில் எரிபொருள், காப்பீடு மற்றும் தங்கம்/நகைகள் போன்ற செலவுகள் மூலம் பேசிக் அல்லது எட்ஜ் ரிவார்டு பாய்ட்களுக்கு தகுதி பெற முடியாது. இறுதியாக ஆர்பிஐயின் பேங்க் மினிமம் பேலன்ஸ் விதிகளின்படி 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணப் பரிவர்த்தனை செய்யப்படாத அக்கவுண்ட்கள் செயலற்ற கணக்குகளாக மாறிவிடும்.
இந்த கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் அபராதம் கிடையாது. அதேபோல இந்த கணக்குகளை மீண்டும் தொடங்க வங்கிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. ஆகவே, 2 ஆண்டுகளுக்கு உள்ளாக கட்டண வேண்டிய மினிமம் பேலன்ஸ் அபாரதம் மட்டுமே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கஸ்டமர்களுக்கு விதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








