Home
News

சுத்தி சுத்தி விழும் அடி.. உங்க Google சேர்ச்ல AI Mode ஆப்ஷன் தெரியுதா.. அதுக்கு இப்போ வேட்டு வச்சாச்சு!

ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி (ChatGPT) கொடுத்த மண்டை குடைச்சலின் விளைவாக கூகுள் (Google) நிறுவனம் அதன் கூகுள் சேர்ச் பாரில் ஏஐ மோட் (AI Mode) என்கிற புதிய ஆப்ஷனை சேர்த்தது. தற்போது அந்த கூகுள் ஏஐ மோட் ஆப்ஷனுக்கும் சுடச்சுட ஒரு சிக்கல் வந்துள்ளது.

கூகுளின் ஏஐ மோட் ஆப்ஷனுக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆனது அதன் எட்ஜ் ப்ரவுஸரில் கோபைலட் மோட் (Copilot Mode in Microsoft Edge Browser) என்கிற ஆப்ஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்துள்ள கோபைலட் மோட் என்றால் என்ன? யாருக்கெல்லாம் இலவசமாக கிடைக்கும்? இந்த புதிய கோபைலட் மோட்-ஐ இயக்குவது எப்படி?

Google சேர்ச்ல AI Mode ஆப்ஷன்.. அதுக்கு இப்போ வேட்டு வச்சாச்சு!

மைக்ரோசாப்ட் எட்ஜ் ப்ரவுஸருக்கு வந்துள்ள கோபைலட் மோட் என்றால் என்ன (What is Copilot mode in Microsoft Edge)? கோபய்லட் மோட் என்பது சிங்கிள் இன்புட் ஃபீட்டின் கீழ் ஒரு புதிய டேப்-ஐ (Clean new tab page with a Single input field) திறக்கலாம். அதில் வாய்ஸ் கமாண்ட்கள் (Voice commands) உட்பட இயல்பான மொழியை பயன்படுத்தி கேள்விகளை கேட்பது, சாட் செய்வது அல்லது ஒரு வலைத்தளத்தை திறப்பது போன்ற வேலைகளை செய்யலாம்.

மேலும் இந்த கோபைலட் மோட் ஆனது நீங்கள் அனுமதிக்கும் பட்சத்தில், ஓப்பன் ஆக உள்ள உங்களுடைய அனைத்து டேப்களையும் பார்க்கும் மற்றும் உங்களுக்கு விரிவான ஒப்பீட்டையும் (Detailed comparison) வழங்கும். அதாவது இது முடிவெடுப்பதை விரைவுபடுத்தும் அதே வேளையில், வெவ்வேறு டேப்களுக்கு இடையில் முன்னும் பின்னுமாக செல்ல வேண்டிய அவசியத்தை குறைக்கும்.

டேப்களை திறப்பது, வெவ்வேறு வலைத்தளங்களிலிருந்து தகவல்களை கண்டறிவது, கன்டென்ட்டை சுருக்கமாக கூறுவது, மொழிபெயர்ப்பது மற்றும் உங்கள் ப்ரவுஸரில் இருந்து நேரடியாக முன்பதிவுகளை நிர்வகிப்பது போன்ற செயல்களையும் கோபைலட் வழியாக செய்ய முடியும். கோபைலட் ஆனது எப்போதும் ஒரு டைனமிக் சைட் பேனலில் (Dynamic Side Panel) அணுகக்கூடியதாக இருப்பதால், இது நீங்கள் இருக்கும் வலைப்பக்கத்தில் உங்களுக்கான இடத்தை இழக்காமலேயே கன்டென்ட்டை சுருக்குவது, அளவீடுகளை மாற்றுவது போன்ற சிறிய பணிகளையும் செய்ய உதவும்

மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்துள்ள இந்த கோபைலட் மோட் ஆனது முற்றிலும் ஒரு விருப்ப அம்சமாகும் (Opt-in feature). அதாவது தேவைப்படுவோர்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம் மற்றும் ப்ரவுஸர் செட்டிங்ஸ் (Browser Settings) வழியாக கோபைலட் மோட் அம்சத்தை நீங்கள் எந்த நேரத்திலும் எளிதாக முடக்கலாம். மேலும் இது பயனரின் அனுமதியுடன் (User Permission) மட்டுமே ப்ரவுஸர் டேட்டாவை (Browser Data) அணுகும்.

கோபைலட் மோட் யாருக்கெல்லாம் கிடைக்கும் (Edge Copilot mode availability)? விண்டோஸ் (Windows) மற்றும் மேக் (Mac) வழியாக எட்ஜ் ப்ரவுஸரை பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் கோபைலட் மோட் அம்சமானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச பயன்பாட்டிற்கு சில அம்சங்கள் மட்டுப்படுத்தப்படலாம்; எதிர்காலத்தில் கோபைலட் மோட் அம்சத்தின் கிடைக்கும் தன்மையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விரிவுபடுத்தலாம் அல்லது மாற்றலாம்.

மைக்ரோசாஃப்ட் எட்ஜில் கோபைலட் மோட்-ஐ இயக்குவது எப்படி (How to enable Copilot mode on Edge)? இந்த அம்சத்தை இயக்க விரும்பும் பயனர்கள் எட்ஜ் கோபைலட் அம்சத்தின் பக்கத்திற்கு (Edge Copilot feature page) செல்ல வேண்டும். பின்னர் கோபைலட் மோட்-ஐ இயக்கி அதன் திறன்களை ஆராயலாம். முன்னரே குறிப்பிட்டபடி, கோபைலட் மோட்-ஐ தேர்வுசெய்த பிறகு, அதை எந்த நேரத்திலும் ப்ரவுஸர் செட்டிங்ஸில் இருந்து எளிதாக இயக்கலாம் (ON) மற்றும் முடக்கலாம் (OFF).

More from GizBot

Best Mobiles in India

English summary
New Copilot Mode introduced in Microsoft Edge Browser Uses Availability How to Enable
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X