AC வேண்டாம்.. மின்சாரம் வேண்டாம்.. வீடே கூலிங்காக்கும் புது கூல் ரூப் டெக்னாலஜி.. அரசே இதை தான் செய்யுது..
இந்தியாவில் சூரியனின் வெப்பம் நாளுக்கு நாள் கடுமையாகிக் கொண்டே இருக்கிறது. இன்னும் அக்னி நட்சத்திரம் (agni natchathiram 2025) ஆரம்பமாக 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூல் ரூப் டெக்னாலஜி (Cool Roof Technology) தொழில்நுட்பத்தை பயன்படுத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, டெல்லியில் உள்ள பேருந்து நிலையங்கள் துவங்கி, அனைத்து அரசு கட்டிடங்களிலும், இந்த புதிய கூல் ரூப் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம், கடுமையான வெப்பத்திலும் கட்டிடங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இதை நாம் நம்முடைய வீடுகளிலும் பயன்படுத்தலாம்.
இந்த வருட அக்னி நட்சத்திர வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீங்கள் ஆசைப்பட்டால், உடனே உங்கள் வீட்டிற்கு இந்த கூல் ரூப் தொழில்நுட்பத்தை (Cool Roof Technology) பயன்படுத்தலாம். இது உங்கள் இருப்பிடத்தை குளுமைப்படுத்த அனுமதிப்பதோடு, நீங்கள் நீண்ட காலம் பயன்படுத்தும் ஏசி மின்சார செலவு (AC electricity expenses), கூலிங் ஃபேன் செலவு (cooling fan eb charges), ஏர் கூலர் (Air cooler) போன்ற மின்சார செலவுகளை குறைக்கலாம்.

AC வேண்டாம்.. மின்சாரம் வேண்டாம்.. வீடே கூலிங்காக்கும் புது கூல் ரூப் டெக்னாலஜி:
ஒரு முறை செலவு செய்து, Cool Roof Technology பயன்படுத்தினால், அடுத்து வரும் 15 முதல் 30 வருடங்களில் நீங்கள் எவ்வளவு பணத்தை சேமிக்க முடியும் என்று யோசித்து பார்த்தால், இந்த புதிய கூல் ரூப் டெக்னாலஜி உண்மையில் உங்கள் பணத்தை மிச்சம் பிடிக்க உதவும் ஒரு சிக்கனமான மாற்று வழியாக இருக்கிறது. இதனால், தான் இப்போது இந்த கூல் ரூப் தொழில்நுட்பம் இந்தியாவில் பிரபலமடைந்து (cool roof tech getting famous in India) வருகிறது.
இந்த கூல் ரூப் தொழில்நுட்பம் நம்பும் படியாக வேலை செய்வதனால், இதை இப்போது டெல்லி அரசாங்கம் (Delhi government) அதன் அரசு கட்டிடங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. மக்கள் அதிகமாக கூடும் அரசு அலுவலகங்கள் (Government buildings), பேருந்து நிலையங்கள் (bus terminals) மற்றும் ரயில் நிலையங்கள் (railway stations) என்று ஒவ்வொரு இடமாக டெல்லி அரசு இந்த புதிய கூல் ரூப் டெக்னாலஜியை விரிவுபடுத்தி வருகிறது.
டெல்லி அரசு இந்த புதிய கூல் ரூப் டெக்னாலஜியை எங்கு பயன்படுத்தியுள்ளது தெரியுமா?
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அவர்கள் அதிக வெப்பத்தை உணர்வதால், அதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் ஆண்டுகளில் கூட, இந்தியாவின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அரசு இந்த புதிய கூல் ரூப் டெக்னாலஜியை ஒரு தீர்வாக கையில் (cool roof tech is the new solution for escaping heat) எடுத்துள்ளது. இப்போது டெல்லியில் இந்த தொழில்நுட்பம் எங்கெல்லாம் நடைமுறைக்கு வருகிறது என்று பார்க்கலாம்.
இந்தப் புதுமையான அணுகுமுறை, கோடை வெயிலின் போதும், பயணிகள் மற்றும் ஊழியர்கள் புத்துணர்ச்சியூட்டும் சூழலை அனுபவிக்க அனுமதிக்கும் என்று நம்பப்படுகிறது. முதற்கட்டமாக விவேகானந்தா பேருந்து முனையம், ஆனந்த் விஹார் பேருந்து முனையம், காஷ்மீரி கேட்டில் உள்ள மகாராணா பிரதாப் பேருந்து முனையம் மற்றும் டெல்லி செயலகத்தில் குளிர் கூரை தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூல் ரூப் டெக்னாலஜி எப்படி செயல்படுகிறது? (how cool roof technology works):
புதிய கூல் ரூப் டெக்னாலஜி எப்படி செயல்படுகிறது? (how cool roof technology works) என்று பார்க்கையில், இந்த நுட்பம் சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதா (UV - ultraviolet rays) கதிர்களை பிரதிபலிக்கும் சிறப்புப் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கூல் ரூப் தொழில்நுட்பம் உங்கள் வீட்டின் ரூப்பில் அமைக்கப்பட வேண்டும். இது வெப்பத்தை பிரதிபலிப்பதில் மிகவும் திறமையானவை, கட்டிடத்தில் உறிஞ்சப்பட்ட வெப்பத்தை வளிமண்டலத்தில் விரைவாக வெளியிடுகின்றன. இது நிலையான ரூப்களை காட்டிலும் சிறந்தவை.
கூல் ரூப் பயன்படுத்தப்படும் இருப்பிடம் அருமையான குளிர்ச்சியுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை உங்கள் வீட்டின் குறைகள், மொட்டை மாடிகளில் பயன்படுத்தி, உங்கள் வீட்டில் வெப்பம் தங்காமல் தடுக்க முடியும். ஒரு முறை செலவு செய்து, உங்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்குள் நுழையும் வெப்பத்தின் அளவைக் குறைப்பதன் மூலம், ஏர் கண்டிஷனிங்கை (Air conditioning) நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. இதன் மூலம் கணிசமான மின்சார செலவை குறைக்க (reduce electric bill) முடியும் மக்களே.


Click it and Unblock the Notifications








