Home
News

Google Search கதை முடிஞ்சது.. மே 9 முதல் மொத்தமும் மாறுது.. சுந்தர் பிச்சை தலையில் இடியை இறக்கிய OpenAI!

ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) தொடர்பான விஷயங்களில் மட்டுமே.. கூகுள் (Google) நிறுவனத்திற்கு கடும் போட்டியாக இருக்கும் என்று நினைக்கப்பட்ட ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனமானது.. கூகுளின் அஸ்திவாரத்தையே ஆட்டும்படியான வேலை ஒன்றை செய்ய போகிறது.

அதென்ன வேலை? ஓப்பன்ஏஐ நிறுவனமானது கூகுளுக்கான மாற்றை.. அதாவது கூகுள் ஆல்டர்நேட்டிவ்வை (Google alternative) உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. அது சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின் (ChatGPT Search Engine) என அழைக்கப்படலாம். ஒய் காம்பினேட்டரின் ஹேக்கர் நியூஸ் சொசைட்டி வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படி, ஓப்பன் ஏஐ நிறுவனம் ஒரு புதிய டொமைன் பெயரை பதிவு செய்துள்ளது.

Google Search கதை முடிஞ்சது.. மே 9 முதல் மொத்தமும் மாறுது!

அந்த டொமைன் பெயர் என்ன? அது சேர்ச்.சாட்ஜிபிடி.காம் (search.chatgpt.com) ஆகும். இந்த பெயர் சாட்ஜிபிடி-பவர்டு சேர்ச் எஞ்சினின் (ChatGPT-Powered Search Engine) உடனடி வெளியீட்டை குறிக்கிறது. இருப்பினும், தற்போது வரையிலாக இந்த யூஆர்எல்-ஐ அணுகும்போது "​​நாட் ஃபவுண்ட்" (Not Found) என்கிற ரிசல்ட்டையே காட்டுகிறது.

சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின் எப்போது அறிமுகமாகும்? சரியான வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால் இது மே 9 அன்று தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல், இன்னும் சில நாட்களில் (அல்லது சில மணி நேரங்களில்) வெளிவரலாம்.

Google Search கதை முடிஞ்சது.. மே 9 முதல் மொத்தமும் மாறுது!

சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின் எப்படி வேலை செய்யும்? சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின் ஆனது கூகுளை போன்ற சேர்ச்-லைக் ப்ராடெக்ட் ஆக இருக்கும் அதே வேளையில் சாட்ஜிபிடி-யின் ஜெனெரேட்டிவ் ஏஐ திறன்களையும் ஒருங்கிணைக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. அதாவது ஒரு பயனர், ஒரு கேள்வியை கேட்கும் போது அல்லது அந்த வினவலை முன்வைக்கும் போது..

சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின் ஆனது பெர்ப்ளேக்ஸிட்டி ஏஐ (Perplexity AI) போன்ற தொடர்புடைய வெப்சைட்களில் ஏஐ-ஜெனெரேட்டட் கன்டென்ட்டை உள்ளடக்கிய முடிவை வழங்கும். இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால்.. ஒரு பயனர் இணையத்தில் கிடைக்கும் அனைத்து தொடர்புடைய தகவல்களின் ஏஐ சுருக்கத்தை பெறுவது மட்டுமல்லாமல், அந்த சுருக்கத்தை விட சற்று கூடுதல் தகவல் தேவைப்படுபவர்களுக்கான நேரடி ஆதாரங்களையும் வழங்கும்.

Google Search கதை முடிஞ்சது.. மே 9 முதல் மொத்தமும் மாறுது!

இது கூகுளை காலி செய்யுமா? கூகுள் தற்போது சேர்ச் எஞ்சின் வணிகத்தில் 90 சதவீத சந்தை பங்கை கொண்டு வலுவான நிலையில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சேர்ச் எஞ்சினின் (Microsoft Bing) இரண்டாவது இடத்தில் உள்ளது. போதாக்குறைக்கு கூகுள் நிறுவனமும் ஏஐ அம்சங்களை பரிசோதித்து வருகிறது. ஆக எப்படி பார்த்தாலும் ஒரே இரவில் கூகுள் நிறுவனத்தை பின்தள்ளிவிட முடியாது.

ஆனாலும் கூட.. சாட்ஜிபிடி போன்ற ஜெனெரேட்டிவ் ஏஐ-பவர்டு சாட்போட் உடனான ஒரு சேர்ச் எஞ்சின் ஆனது விளம்பரங்களோடு இணையும் போது, இது ஓப்பன் ஏஐ நிறுவனத்திற்கு புதிய வருவாயை உருவாக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதன் மூலம் ஓப்பன் ஏஐ நிறுவனத்தால்.. மெல்ல மெல்ல சேர்ச் எஞ்சின் வணிகத்தின் சதவீத சந்தை பங்கை பெற முடியும்.

மேலும் நீங்கள் பயன்படுத்தும் டிவைஸை பொறுத்து சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சினின் யூஸர் இன்டர்பேஸ் ஆனது மாறுபடலாம். அதாவது டெஸ்க்டாப்பில், இண்டர்நெட் முடிவுகள் மற்றும் ஏஐ சுருக்கம் ஆகியவைகள் அருகருகே தோன்றும். அதே சமயம் ஸ்மார்ட்போனில் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றும். ஒட்டுமொத்தமாக சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின் எப்படி இருக்கும் என்பதற்கு மற்றொரு சிறந்த உதாரணம் மைக்ரோசாப்டின் கோபைலட் (Copilot) ஆகும், இது ஜிபிடி-4 மற்றும் பிங் சேர்ச் எஞ்சினால் இயக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Competitor for Google Search OpenAI Company to Launch ChatGPT Search Engine Very Soon May 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X