Home
News

Jio, Airtel, Vi சிம் இருக்கா.. மார்ச் 2026-க்கு கெடு.. சிம் கார்டுல உங்க பெயர் இருக்குல.. என்னென்ன வரப்போகுது?

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டு வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் வருகிற மார்ச் மாதத்தில் இருந்து மிகப்பெரிய மாற்றம் வர இருக்கிறது. தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunication) ஆனது சிஎன்ஏபி விதிகளை (CNAP Rules) அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இந்த விதிகளின்படி சிம் கார்டு வாங்கும்போது கொடுக்கப்பட்ட பெயர் முக்கியமாக மாறப் போகிறது. இது அமலுக்கு வந்த பிறகு கால் செய்யும்போது பெயர் வெரிபிகேஷன் இருக்கப் போகிறது.

சிஎன்ஏபி (CNAP) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இதை காலிங் நேம் பிரசன்டேஷன் (Calling Name Presentation) விதிகள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு அமல் செய்யப்பட இருக்கிறது. இந்த வருடத்துக்குள் அமல் செய்யப்பட இருந்தது. ஆனால், டெலிகாம் நிறுவனங்கள் காலஅவகாசம் கேட்டிருக்கின்றன.

Jio, Airtel, Vi சிம் இருக்கா.. மார்ச் 2026-க்கு கெடு.. சிம் கார்டுல?

ஆகவே, வருகிற 2026ஆம் ஆண்டு மார்ச் வரையில் கெடு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு டெலிகாம் சார்க்கிளில் இந்த விதிகளின்படி சேவையை வழங்கி 60 நாட்களுக்கு பைலட் பேஸ் போல தொடங்க டிராய் (TRAI) என்றழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) ஒப்புதலுடன் உத்தரவிட்ப்படுள்ளது.

சிஎன்ஏபி விதிகள் பெரிய சிக்கலானது கிடையாது. ட்ரூகாலர் போன்ற காலர் ஐடி ஆப்கள் ஒருவருக்கு வரும் கால்களின்போது, அது யாரிடம் இருந்து வருகிறது என்பதை பெயருடன் டிஸ்பிளேவில் காட்டுகின்றன. இதையே மூன்றாம்-தர ஆப்கள் இல்லாமல், ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் கொடுப்பதை இந்த சிஎன்ஏபி விதிகள் உறுதிப்படுத்துகிறது.

ஏனென்றால், சிம் கார்டு வாங்கும்போது, அந்தந்த டெலிகாம் நிறுவனங்களில் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை உறுதி செய்த பிறகே சேவையை கொடுக்கின்றன. ஆகவே, அதே நிறுவனங்களால் எளிதாக சிம் கார்டு உரிமையாளரின் பெயரை கால் செய்யும்போது டிஸ்பிளேவில் காட்ட முடியும். அதே நேரத்தில் சிம் கார்டு கஸ்டமர்களுக்கும் இது கூடுதல் பாதுகாப்பை கொடுக்கும்.

இதையே மார்ச் மாதத்தில் இருந்து அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல இது 4ஜி மற்றும் 5ஜி கஸ்டமர்களுக்கு முதலில் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 2ஜி மற்றும் 3ஜி கஸ்டமர்களுக்கு எப்போது அமல் செய்யப்படும் என்பது மார்ச் மாதத்துக்கு பிறகு தெரியவரும். இந்த காலிங் நேம் பிரசன்டேஷன் டெலிகாம் கஸ்டமர்களுக்கு ஆப்ஷன் போல கொடுக்கப்பட இருக்கிறது.

ஆகவே, தேவைப்பட்டால் ஆன் அல்லது ஆப் செய்து வைத்து கொள்ளலாம். பைலட் பேஸ் முடிந்தவுடன் ஆப் மூலம் கொடுக்கப்படுகிறதா அல்லது நம்பருடன் சேர்ந்து பெயராக டிஸ்பிளே செய்யப்படுமா என்பது தெரியவரும். மேலும், நவம்பர் 1ஆம் தேதி முதல் பல்வேறு விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதில் ஆதார் கார்டு விதிகளில் (Aadhaar Rules) பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன.

ஆதார் கார்டில் எதையாவது மாற்ற வேண்டுமானால், ஆதார் சென்டர்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். இனிமேல், ஆன்லைனில் அதை செய்து கொள்ளலாம். ஆனால். பயோமெட்ரிக் விவரங்களை செய்ய முடியும். இப்படி செய்யப்படும் மாற்றங்களுக்கு டிஜிட்டல் வெரிபிகேஷன் இருக்கும். அதேபோல அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் மட்டுமே வெரிபிகேஷனுக்கு எடுக்கப்படும்.

இதுபோக ஆதார் கார்டு (Aadhaar Card) மற்றும் பான் கார்டு (PAN Card) ஆகியவற்றை இணைக்கு காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த இணைப்பை செய்து முடிக்க வேண்டும். இல்லை என்றால், வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பான் கார்டு டீஆக்டிவ் செய்யப்பட்டுவிடும். ஆகவே, அந்த தேதிக்குள் இணைத்துவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New CNAP Rules From March 2026 For Jio Airtel Vodafone Idea To Implement Caller Name Presentation
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X