Home
News

புது CIBIL ரூல்ஸ்.. இனி 15 நாளுக்கு ஒருமுறை கட்டாயம்.. லோன் வாங்குறவங்க.. ஏற்கனவே வாங்குனவங்க உடனே கவனியுங்க..

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) இந்தியாவில் புது சிபில் ஸ்கோர் மதிப்பெண் விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. சிபில் ஸ்கோர் (CIBIL score) என்பது ஒரு தனிநபரின் கடன் தகுதியின் எண் பிரதிநிதித்துவமாகும். இது நிதி வாய்ப்புகள் மற்றும் கடன் விளைவுகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வருவாய் ஈட்டும் ஒவ்வொரு தனிநபருக்கு தனித்தனி சிபில் மதிப்பீடுகள், அவர்களின் நிதி கையாளும் பழக்கத்தை (credit habit) வைத்து வழங்கப்பட்டுள்ளது. கடன் பெறுவோர் மற்றும் கடன் வாங்கிய நபர்கள் என்று அனைவரும் அவர்கள் சீப்பில் மதிப்பெண்களை கண்காணிப்பது மிகவும் அவசியமானது.

இத்தகைய முக்கியமான CIBIL ஸ்கோர் மதிப்பெண் அப்டேட் (CIBIL score update rules) விஷயத்தில், இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டில், CIBIL மதிப்பெண் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ச்சியாக பல வலுவான வழிகாட்டுதல்களை செயல்படுத்தி வருகிறது. இப்போது மீண்டும் ஒரு புதிய விதிமுறையை CIBIL ஸ்கோர் தொடர்புடன் (new CIBIL rules) அறிமுகம் செய்துள்ளது.

புது CIBIL ரூல்ஸ்.. இனி 15 நாளுக்கு ஒருமுறை கட்டாயம்.. கவனியுங்க..

புது CIBIL ரூல்ஸ்.. இனி 15 நாளுக்கு ஒருமுறை கட்டாயம்.. மக்களே உடனே கவனியுங்க:

அந்த வரிசையில், CIBIL ஸ்கோர் தொடர்பான சில புதிய ரூல்ஸ்களை RBI இந்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தி (New CIBIL score rules by RBI), பின்பற்ற துவங்கியுள்ளது. இந்த புதிய ரூல்ஸ் மூலம் இனி CIBIL தகவல்கள் (CIBIL details) விரைவான அப்டேட்களை பெரும், CIBIL பயனர்களுக்கு உடனடி அறிவிப்புகள் மற்றும் அவர்களின் கடன் வரலாற்றை கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனிநபர்கள் அவர்களின் CIBIL தகவல் மீது கூடுதல் அதிகாரம் பெறுவதை RBI உறுதியளித்துள்ளது.

இந்த புதிய மாற்றங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், கடன் வாங்குபவர்கள் நன்கு அறிந்த நிதித் தேர்வுகளை செலக்ட் செய்யலாம் மற்றும் அவர்களின் கடன் ஆரோக்கியத்தில் அதிக கட்டுப்பாட்டைப் பயன்படுத்தலாம். சரி, RBI அறிமுகம் செய்துள்ள புதிய விதிமுறைகள் என்னென்ன (RBI new CIBIL rules) நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க.

RBI இன் சூப்பர் பாஸ்ட் சிபில் ஸ்கோர் அப்டேட் விதியை (RBI's super fast CIBIL score update rule):

RBI-ன் பழைய விதிமுறைப்படி, CIBIL மதிப்பெண்கள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே புதுப்பிக்கப்பட்டு அப்டேட் செய்யப்பட்டு வந்தது. இது பெரும்பாலும் நிதி நடவடிக்கைகளை பிரதிபலிப்பதில் தாமதத்திற்கு வழிவகுத்தது வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பல நேரங்களில் பொதுமக்கள் பல அவதிகளையும், சிக்கல்களையும் சந்திக்க நேரிட்டது. இந்த போக்கை மாற்ற RBI இப்போது சூப்பர் பாஸ்ட் சிபில் ஸ்கோர் அப்டேட் விதியை (RBI's super fast CIBIL score update rule) நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த புதிய விதிமுறைப்படி, இனி உங்கள் CIBIL ஸ்கோர் மதிப்பெண்கள், ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்யப்படும் (15 days update on CIBIL score details) என்று இந்திய ரிசர்வ் வங்கியான ஆர்பிஐ (RBI) தெரிவித்துள்ளது. இந்த புதிய ரூல்ஸ் மூலம் இனி பொதுமக்கள் அவர்களின் கடன் நடத்தை மற்றும் செயல்பாடுகளை குறுகிய காலத்திற்குள் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதை RBI உறுதி அளித்துள்ளது.

இனி ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை CIBIL அப்டேட்:

இந்த CIBIL ஃபாஸ்ட் அப்டேட் அமைப்பு (CIBIL fast update rules) கடன் வாங்குபவர்கள் தங்கள் நிதி செயல்திறனை கிட்டத்தட்ட நிகழ்நேரத்தில் கண்காணிக்க அனுமதிக்கிறது. அடுத்தபடியாக, RBI நடைமுறைப்படுத்தியுள்ள புது விதிமுறை, கடன் நிறுவனங்கள் இப்போது ஒவ்வொரு மாதமும் நுகர்வோரின் நிதி நடவடிக்கைகளை கடன் தகவல் நிறுவனங்களுடன் (CICs) பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிப்பட்டுள்ளது. இது கடன் அறிக்கைகள் துல்லியமாகவும் புதுப்பித்ததாகவும் இருப்பதை உறுதிசெய்கிறது.

இந்த இரண்டு முக்கியமான் புதிய விதிமுறைகளை பின்பற்றி, இனி மக்கள் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை அவர்களின் CIBIL மதிப்பெண் அப்டேட் தகவல்களை செக் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
New CIBIL Score Rules 2025 By RBI To Ensure Faster Updates On CIBIL Score For Every 15 Days Of Time
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X