Home
News

சுந்தர் சோலி முடிஞ்சது.. மே 13-க்கு அப்புறம் Google Search-க்கு என்ன ஆகும்? இனி எல்லாமே ChatGPT Search தான்!

இந்த வாரத்தில் அறிமுகமாகி.. சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் (Google) நிறுவனத்தை ஆட்டம் காண வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின் (ChatGPT Search Engine) ஆனது அடுத்த வாரம் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

சாட்ஜிபிடி-ஐ ஒரு ஏஐ ஜெனரேட்டிவ் டூல் ஆக தெரியும். அதென்னது சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின்? இது எப்படி வேலை செய்யும்? இதனால் கூகுள் சேர்ச் எஞ்சினுக்கு என்ன சிக்கல் வரும்? அடுத்த வாரம் அறிமுகமாகும் என்றால்.. சரியாக எந்த தேதியில் வரும்? இதோ விவரங்கள்:

மே 13-க்கு அப்புறம் Google Search-க்கு என்ன ஆகும்?

சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின் என்றால் என்ன? பெயர் பெயர் குறிப்பிடுவது போலவே இது கூகுளுக்கான மாற்றாக இருக்கும். அதாவது கூகுள் சேர்ச்சிற்கான மிகவும் பலமான ஆல்டர்நேட்டிவ் (Google Search Alternative) ஆக இருக்கும். இதற்காக ஓப்பன் ஏஐ நிறுவனமானது சேர்ச்.சாட்ஜிபிடி.காம் (search.chatgpt.com) என்கிற புதிய டொமைன் பெயரையும் பதிவு செய்துள்ளது.

இதன் மூலம் சாட்ஜிபிடி-பவர்டு சேர்ச் எஞ்சின் (ChatGPT-Powered Search Engine) ஆனது உடனடி வெளியீட்டை காணும் என்பதை வெளிப்படையாகவே அறிந்துகொள்ள முடிகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆதரவுடைய ஓப்பன்ஏஐ நிறுவனமானது கூகுளுடன் போட்டியிட ஒரு சேர்ச் ப்ராடெக்ட்டில் வேலை செய்வதாக (கடந்த பல நாட்களாகவே) தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

இப்போது அந்த சேர்ச் ப்ராடெக்ட்டின் வெளியீட்டு தேதி குறித்த தகவலே கிடைத்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது வருடாந்திர ஐ/ஓ மாநாட்டை வருகிற மே 14 ஆம் தேதி முதல் நடத்த உள்ளது. அந்த நிகழ்வை "கெடுக்கும்" வண்ணம் ஓப்பன் ஏஐ நிறுவனமானது அதன் சாட்ஜிபிடி-பவர்டு சேர்ச் எஞ்சினை மே 13 ஆம் தேதி அன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு ஷாக்கிங் நியூஸ் என்னவென்றால் (இந்த வார தொடக்கத்தில் வெளியான ஒரு ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி), ஓப்பன் ஏஐ நிறுவனமானது அதன் புதிய சேர்ச் எஞ்சின் தளத்தை உருவாக்குவதற்காக.. கூகுள் நிறுவனத்தின் சேர்ச் குழுவில் பணிபுரியும் ஊழியர்களை தனது நிறுவனத்தின்கீழ் வேலைக்கு சேர்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் வெற்றிகரமாக பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் சரியான எண்ணிக்கை பற்றி தெரியவில்லை.

சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின் ஆனது கூகுள் சேர்ச்சை விட சற்றே வித்தியாசமாக செயல்படலாம். அதாவது இது கூகுளை போன்ற சேர்ச்-லைக் ப்ராடெக்ட் ஆக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் அதே வேளையில் இது சாட்ஜிபிடி-யின் ஜெனெரேட்டிவ் ஏஐ திறன்களையும் ஒருங்கிணைக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.

இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால்.. ஒரு பயனர், ஒரு கேள்வியை கேட்கும் போது அல்லது அந்த வினவலை முன்வைக்கும் போது சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின் ஆனது பெர்ப்ளேக்ஸிட்டி ஏஐ (Perplexity AI) போன்ற தொடர்புடைய வெப்சைட்களில் ஏஐ-ஜெனெரேட்டட் கன்டென்ட்டை உள்ளடக்கிய முடிவை வழங்கும்.

அதாவது ஒரு பயனர் இணையத்தில் கிடைக்கும் அனைத்து தொடர்புடைய தகவல்களின் ஏஐ சுருக்கத்தை பெறுவது மட்டுமல்லாமல், அந்த சுருக்கத்தை விட சற்று கூடுதல் தகவல் தேவைப்படுபவர்களுக்கான நேரடி ஆதாரங்களையும் வழங்கும். இப்படியாக சாட்ஜிபிடி சேர்ச் ஆனது கூகுள் சர்ச்சை வீழ்த்துமா என்று கேட்டால்.. தற்போது சேர்ச் எஞ்சின் வணிகத்தில் 90 சதவீத சந்தை பங்கை கொண்டு வலுவான நிலையில் உள்ளது.

கூகுள் சேர்ச்சிற்கு அடுத்தபடியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சேர்ச் எஞ்சின் (Microsoft Bing Search Engine) இரண்டாவது இடத்தில் உள்ளது. போதாக்குறைக்கு கூகுள் நிறுவனமும் அதன் கூகுள் சேர்ச்சில் ஏஐ அம்சங்களை பரிசோதித்து வருகிறது. ஆக எப்படி பார்த்தாலும் ஒரே இரவில் கூகுள் நிறுவனத்தை பின்தள்ளிவிட முடியாது.

இருப்பினும் சாட்ஜிபிடி போன்ற ஜெனெரேட்டிவ் ஏஐ-பவர்டு சாட்போட் உடனான ஒரு சேர்ச் எஞ்சின் ஆனது விளம்பரங்களோடு இணையும் போது ஓப்பன் ஏஐ நிறுவனத்திற்கு புதிய வருவாய் உருவாகும். இதன் மூலம் ஓப்பன் ஏஐ நிறுவனத்தால் ஒரு நல்ல இடத்தை அடைய முடியும். அதாவது சேர்ச் எஞ்சின் வணிகத்தில் தனக்கான சந்தை பங்கை மெல்ல மெல்ல அதிகரிக்க முடியும்.

மேலும் நீங்கள் பயன்படுத்தும் டிவைஸை பொறுத்து சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சினின் யூஸர் இன்டர்பேஸ் ஆனது மாறுபடலாம். அதாவது டெஸ்க்டாப்பில், இண்டர்நெட் முடிவுகள் மற்றும் ஏஐ சுருக்கம் ஆகியவைகள் அருகருகே தோன்றும். அதே சமயம் ஸ்மார்ட்போனில் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றும். ஒட்டுமொத்தமாக சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின் எப்படி இருக்கும் என்பதற்கு மற்றொரு சிறந்த உதாரணம் மைக்ரோசாப்டின் கோபைலட் (Copilot) ஆகும், இது ஜிபிடி-4 மற்றும் பிங் சேர்ச் எஞ்சினால் இயக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New ChatGPT Search Engine Launching on May 13 What Happen to Google Search After May 13
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X