UPI ஆதரவுடன் ரூ.399 க்கு ChatGPT Go திட்டம் அறிமுகம்.. இனி சாட்ஜிபிடி இலவசமாக கிடைக்காதா?
ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனமானது சாட்ஜிபிடி கோ (ChatGPT Go) என்கிற புதிய சந்தா திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் விலை நிர்ணயம் என்ன? வேலிடிட்டி என்ன, அதாவது செல்லுபடியாகும் காலம் எவ்வளவு? என்னென்ன நன்மைகள், அம்சங்கள் கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
சாட்ஜிபிடி கோ திட்டத்தின் விலை மற்றும் வேலிடிட்டி: சாட்ஜிபிடி கோ சந்தா திட்டத்தின் விலை ரூ.399 ஆகும். இது 1 மாதத்திற்கான விலை ஆகும். அதாவது ரூ.399 கட்டணம் செலுத்தினால் சாட்ஜிபிடி கோ சந்தாவை 30 நாட்களுக்கு அணுக முடியும்.

சாட்ஜிபிடி கோ திட்டத்தின் நன்மைகள் மற்றும் அம்சங்கள்: சாட்ஜிபிடி கோ திட்டமானது இந்திய பயனர்களுக்கு அதிக பயன்பாட்டு வரம்புகள், இமேஜ் ஜெனெரஷன், ஃபைல் டவுன்லோட்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட ஸ்டோரேஜ் போன்ற பிரபலமான அம்சங்களை அதிக அளவில் அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சாட்ஜிபிடி கோ மூலம், பயனர்கள் பத்து மடங்கு அதிக மெசேஜ் லிமிட்கள், பத்து மடங்கு அதிக இமேஜ் ஜெனரேஷன்கள், பத்து மடங்கு அதிக ஃபைல் பதிவேற்றங்கள் மற்றும் இலவச திட்டத்துடன் ஒப்பிடும்போது இரட்டிப்பு ஸ்டோரேஜ் ஆகிய நன்மைகளை, அம்சங்களை பெறுவார்கள்.
ஆக சாட்ஜிபிடி-யின் கீழ் தற்போது நான்கு அடுக்குகளான சந்தாக்கள் / திட்டங்கள் அணுக கிடைக்கிறது: வரையறுக்கப்பட்ட பயன்பாட்டுடன் கூடிய இலவச திட்டம், ரூ.399 விலையில் புதிய சாட்ஜிபிடி கோ திட்டம், ரூ.1,999 விலையில் சாட்ஜிபிடி பிளஸ் திட்டம் மற்றும் ரூ.19,999 விலையில் சாட்ஜிபிடி ப்ரோ திட்டம்.
இந்த புதிய சாட்ஜிபிடி கோ திட்டமானது - சாட்ஜிபிடி பிளஸ் அல்லது ப்ரோவின் கீழ் வழங்கப்படும் முழு அம்சங்களும் தேவைப்படாத, அதே சமயம் கட்டுபாடுகள் கொண்ட இலவச சாட்ஜிபிடி சேவை ஆனது போதுமானதாக இல்லை என்று கருதும் மாணவர்கள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் நிபுணர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய சாட்ஜிபிடி கோ திட்டமானது - இலவசமாக கிடைக்கும் சாட்ஜிபிடி அணுகலுக்கும், சாட்ஜிபிடி பிளஸ் திட்டத்திற்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் குறைந்த செலவில் தினசரி பயன்பாட்டை விட இன்னும் அதிகமாக பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த திட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சந்தா கட்டணம் செலுத்தும் போது, இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களும் இப்போது விலைகளை இந்திய ரூபாயில் காண்பார்கள். இதனால் நாணய மாற்றங்கள் குறித்த குழப்பம் நீங்கும்.
முதல் முறையாக, இந்தியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் கட்டண முறையான யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்த ஓப்பன்ஏஐ அனுமதிக்கிறது. இந்த நடவடிக்கை - சாட்ஜிபிடி சேவையின் கட்டண திட்டத்திற்கு அப்கிரேட் ஆக விரும்புபவர்ளுக்கு, அந்த செயல்முறையை எளிமையாக்குகிறது மற்றும் அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் எளிமையாக அணுகக்கூடியதாக ஆக்குகிறது.
இந்தியாவிற்கான ரூ.399 திட்டம் - நெகிழ்வான மற்றும் உள்ளூர் ரீதியாக பொருத்தமான விருப்பங்களை வழங்குவதன் மூலம் செலவு உணர்திறன் கொண்ட சந்தைகளில் ஏஐ ஏற்றுக்கொள்ளலை விரிவுபடுத்துவதற்கான ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் உத்தியை எடுத்துக்காட்டுகிறது.
ரூ.399 திட்டமானது - நிறுவனங்கள் மற்றும் பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமல்லாமல், கற்றல், படைப்பாற்றால் மற்றும் பணிக்காக சாட்ஜிபிடி-அது பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் தனிநபர்களுக்கும், ஜெனரேட்டிவ் ஏஐ டூல்களை மேலும் அணுக கூடியதாக மாற்றும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
குறிப்பாக அன்றாட பயனர்களுக்கு, இந்த திட்டம் - பயன்பாட்டு வரம்புகள், மென்மையான பணிப்பாய்வுகள் மற்றும் அதிக படைப்பு சுதந்திரம் இல்லாமை போன்ற குறுக்கீடுகளை காணாமல் போக செய்யும். நீளமான டாக்குமெண்ட், இன்னும் ஆழமான படங்களை உருவாக்குவது அல்லது பகுப்பாய்விற்கான கோப்புகளை பதிவேற்றுவது என எதுவாக இருந்தாலும், சாட்ஜிபிடி கோ திட்டமானது அதிக செலவு இல்லாமல் நிஜ உலக உற்பத்தித்திறனுக்கு போதுமான திறனை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








