புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
இந்திய ரயில்வே துறையானது 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகான 100 நாள் திட்டத்தை வகுத்துள்ளது. அதாவது சரியாக ஜூன் 1 ஆம் தேதி முதல், இரயில் டிக்கெட் சேவையில் 2 முக்கிய மாற்றங்கள் உட்பட பல புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.
அப்படியாக.. தேர்தலுக்கு பிறகு இந்திய ரயில்வே துறையில் (Indian Railways) மற்றும் அதன் இரயில் டிக்கெட் (Train Ticket) சேவையில் என்னென்ன புதிய மாற்றங்கள் (New Changes) கொண்டு வரப்படவுள்ளது? இதனால் இந்திய மக்களுக்கு லாபமா அல்லது நேர விரயமா? இதோ விவரங்கள்:

தேர்தலுக்கு பிறகான 100 நாள் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் எல்லாமே மாற்றங்களுமே - சந்தேகத்திற்கு இடமின்றி - இந்திய மக்களுக்கு பெரிய அளவிலான நன்மைகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க போகிறது. குறிப்பாக இரயில் டிக்கெட் சேவையில் வரும் 2 மாற்றங்கள் ஆனது ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமான குட் நியூஸ் ஆக இருக்கும்!
முதல் மாற்றம்: இந்திய ரயில்வே துறையானது புதிய ரீஃபண்ட் திட்டத்தை (Refund Scheme) கொண்டுவரவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வெறும் 24 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரீஃபண்ட் தொகை திரும்பி கொடுக்கப்படும். இந்திய ரயில்வே துறையில் தற்போது இருக்கும் டிக்கெட் ரீஃபண்ட் செயல்முறையானது 3 நாட்கள் முதல் 1 வாரம் கழித்தே தொகையை திருப்பிக் கொடுக்கிறது என்பதையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.

இரண்டாவது மாற்றம்: இரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வது, டிக்கெட்டை கேன்சல் செய்வது, ரயில் எங்கே இருக்கிறது என்பதை கண்காணிக்கும் லைவ் ட்ரெயின் ட்ராக்கிங் (Live train tracking) மற்றும் இரயில் பயணத்தின் போதான உணவுகளை புக்கிங் (Food bookings onboard) செய்வது என பல்வேறு வகையான ரயில்வே தொடர்பான சேவைகளை வழங்கும் ஒரு விரிவான "சூப்பர் ஆப்பை" (Super App) இந்திய ரயில்வே துறை வெளியிட உள்ளது.
மேற்கண்ட 2 மாற்றங்களுமே இரயில் டிக்கெட் சேவைகளை இன்னும் எளிமையாக்கும் மற்றும் வசதியாக்கும் என்பதில் சந்தகமே வேண்டாம். இந்திய ரயில்வே துறையின், தேர்தலுக்கு பிறகான 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து ரயில் பயணிகளுக்கும் "பிஎம் ரயில் யாத்ரி பீமா யோஜனா" (PM Rail Yatri Bima Yojana) என்ற காப்பீட்டு திட்டமும் (Insurance Scheme) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறையின் இந்த "நவீனமயமாக்கல்" திட்டமானது, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 10 முதல் 12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில்.. நவீன, உலகத் தரம் வாய்ந்த வசதிகள் உடனான ரயில்வே அமைப்பை உருவாக்குவதை அல்லது மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
இதுமட்டுமின்றி வந்தே பாரத் ரயில்கள் மூன்று பிரிவுகளில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட உள்ளன: ஒன்று - 100 கிலோமீட்டருக்கு கீழ் உள்ள வழித்தடங்களுக்கு வந்தே மெட்ரோ (Vande Metro). இரண்டாவது - 100 முதல் 550 கிலோமீட்டர் வரையிலான வழித்தடங்களுக்கு வந்தே சேர் கார் (Vande Chair Car). மூன்றாவது - 550 கிலோமீட்டருக்கு மேல் உள்ள வழித்தடங்களுக்கு வந்தே ஸ்லீப்பர் (Vande Sleeper).
இதுதவிர்த்து தனியார் பங்களிப்பு மூலம் 1,300 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளன. இப்படியாக மேம்படுத்தப்பட்ட இரயில் நிலையங்களில்.. ஷாப்பிங் மால்கள் (Shopping Malls) இருக்கும் மற்றும் விமான நிலையங்களில் உள்ளதை போன்ற காத்திருப்பு ஓய்வறைகளும் (Waiting lounges) கட்டமைக்கப்படும். மேலும் ரேபிட் ரெயிலை (RAPID rail) போலவே அதிக அதிர்வெண் கொண்ட ரெயில்களை அறிமுகப்படுத்தவும் இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications