Airtel ரீசார்ஜ் விலை உயர்வு.. மேலும் ஒரு பேஸிக் பிளான் நீக்கம்.. கஸ்டமர்கள் ஷாக்!
இந்திய டெலிகாம் துறையில் படிப்படியாக ரீசார்ஜ் கட்டண விலை உயர்வுகள் அமல்படுத்தப்படுவது போல் தெரிகிறது. சமீபத்தில் ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகிய இரண்டு டெலிகாம் நிறுவனங்களுமே ரூ.249 மதிப்புள்ள அதன் பேஸிக் ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியதை நாம் கண்டோம்.
அதை தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனம், அதன் சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைத்த இன்னொரு பேஸிக் பிளானையும் அமைதியாக நீக்கி உள்ளது. அது - ஏர்டெல்லின் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கான என்ட்ரி லெவல் இன்டர்நேஷனல் ரோமிங் பேக் (Entry Level International Roaming Pack) ஆகும்!

ஏர்டெல் நிறுவனம் அதன் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கான ரூ.648 மதிப்பிலான ஐஆர் பேக்கை (Airtel Rs.648 IR Pack) நீக்கியுள்ளது. இதன் மூலம் - 10 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ரூ.2,999 ஐஆர் பேக் ஆனது புதிய என்ட்ரி லெவல் இன்டர்நேஷனல் ரோமிங் பேக் ஆக மாறியுள்ளது
இது ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது; மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் தற்போதைய போக்கை கருத்தில் கொண்டால், வரும் மாதங்களில் ஏர்டெல் சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் சில முக்கியமான திட்டங்களும் கட்டண திருத்தங்களை காணும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.
நீக்கப்பட்ட ஏர்டெல் ரூ.648 ஐஆர் பேக்கின் நன்மைகள்: ரூ.648 ஐஆர் பேக் ஆனது 1ஜிபி டேட்டாவை வழங்கியது; 1ஜிபி தீர்ந்ததும் இந்த பிளானின் இண்டர்நெட் ஸ்பீட் 80 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இதோடு லோக்கல் நம்பர்கள் மற்றும் இந்தியாவிற்கு 100 நிமிட அவுட்கோயிங் மற்றும் இன்கம்மிங் கால்கள், 10 அவுட்கோயிங் எஸ்எம்எஸ்கள் மற்றும் நிமிடத்திற்கு ரூ.45 என்ற விலையில் சர்வதேச அழைப்புகள் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்
புதிய என்ட்ரி லெவல் ஐஆர் பேக் ஆன ஏர்டெல் ரூ.2999 திட்டத்தின் நன்மைகள்: முன்னரே குறிப்பிட்டபடி 1 நாள் ஐஆர் பேக் நீக்கப்பட்டுள்ளதால், போஸ்ட்பெய்டு பயனர்கள் இப்போது 10 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ரூ.2,999 ஐஆர் பேக்கை தான் என்ட்ரி லெவல் பிளான் ஆக ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்
இந்த திட்டத்தில் 10 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும், அது பயன்படுத்தப்பட்ட பிறகு இண்டர்நெட் ஸ்பீட் 80 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இதோடு 1 நாளைக்கு 100 நிமிட அவுட்கோயிங் மற்றும் இன்கம்மிங் கால்கள் (லோக்கல் மற்றும் இந்தியா), 20 அவுட்கோயிங் எஸ்எம்எஸ்கள் மற்றும் நிமிடத்திற்கு ரூ.45 என்ற விலையில் சர்வதேச அழைப்புகள் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்
ஏர்டெல் சேவையின் கீழ் கிடைக்கும் ஐஆர் டேட்டா டாப்-அப் பிளான்கள்: ரூ.648 நீக்கத்துடன் சேர்த்து, போஸ்ட்பெய்டு ஐஆர் டேட்டா டாப்-அப்களும் திருத்தப்பட்டுள்ளன. முன்பு பேஸிக் பேக்கின் வேலிடிட்டி உடன் 2ஜிபி அதிவேக டேட்டாவை வழங்கிய ரூ.699 டாப்-அப் பேக், இப்போது 5 நாட்கள் என்கிற வரையறுக்கப்பட்ட வேலிடிட்டியின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது
கூடுதலாக, ஏர்டெல் நிறுவனம் அதன் போஸ்ட்பெய்டு பயனர்களுக்காக இரண்டு புதிய ஹை-வேல்யூ டேட்டா டாப்-அப் பிளான்களும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று - 10 நாள் செல்லுபடியாகும் 8 ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.2,499 பேக்; இரண்டாவது - 30 நாள் செல்லுபடியாகும் 40 ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.15,000 பேக்.
பிஓஎப்ஏ செக்யூரிட்டீஸின் ஒரு சமீபத்திய அறிக்கை, இந்திய தொலைத்தொடர்பு துறையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பாரதி ஏர்டெல் ஆகியவைகள் "வசதியான" மற்றும் "குறைந்த போட்டி தன்மை கொண்ட சூழலில்" தொடர்ந்து வளரும் என்றும், ஆனாலும் எதிர்காலத்தில், இந்திய டெலிகாம் தொழில்துறையில் மேலும் 2 கட்டண உயர்வுகள் இருக்கும் என்று கணித்து இருந்ததையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.


Click it and Unblock the Notifications








