இனி Jio, Airtel SIM இல்லாமல் UPI வழியாக பணம் அனுப்பலாம்.. NPCI, RBI அமல்படுத்திய முக்கிய மாற்றம்.. யாரெல்லாம்?
ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) மற்றும் ஐடிஎப்சி பர்ஸ்ட் (IDFC First) போன்ற தனியார் வங்கிகள் கூட்டு சேர்ந்து யுபிஐ (UPI) சேவையில் முக்கியான மாற்றம் ஒன்றை அமல்படுத்தியுள்ளன.
என்ஆர்ஐ-கள் (NRI) இப்போது தங்கள் சர்வதேச மொபைல் எண்களை (International Mobile Number) பயன்படுத்தி, இந்தியாவில் யுபிஐ சேவை வழியாக பணம் செலுத்தலாம் என்றும் இனி அவர்களுக்கு யுபிஐ சேவையை பயன்படுத்த இந்திய சிம் கார்டு (Indian SIM Card) தேவை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது இப்போது என்ஆர்ஐ-க்கள் கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhonePe) போன்ற பயன்பாடுகளை பயன்படுத்தி இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு இந்தியரையும் போலவும் பணம் அனுப்பலாம்.

கடந்த ஜனவரி 2023 இல், சர்வதேச மொபைல் எண்களுடன் இணைக்கப்பட்ட என்ஆர்இ (NRE) அல்லது என்ஆர்ஓ (NRO) அக்கவுண்ட்களை வைத்திருக்கும் என்ஆர்ஐ-களுக்கு ஆர்பிஐ ஆனது யுபிஐ அணுகலை (RBI Allows UPI Access) அனுமதித்தது. அதனை தொடர்ந்து - இந்த கொள்கை வங்கிகள் மற்றும் பேமண்ட் ஆப்களால் செயல்படுத்தப்பட்டது. இந்த அம்சத்தை முழுமையாக அறிமுகப்படுத்திய முதல் தனியார் வங்கி - ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் (IDFC First Bank) ஆகும்.
ஜூன் 25, 2025 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த என்ஆர்ஐ வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் வெளிநாட்டு மொபைல் எண்களை பயன்படுத்தி தங்கள் அக்கவுண்ட்களை யுபிஐ ஆப்களுடன் இணைக்க முடியும் (NRI Accounts can Link With UPI Aps) என்பதை ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் உறுதிப்படுத்தியது.
இந்திய சிம் கார்டு இல்லாமலேயே யுபிஐ வழியாக பணம் அனுப்ப யாரெல்லாம் தகுதியானவர்கள்? ஒரு என்ஆர்ஐ ஆக யுபிஐ சேவையை செயல்படுத்த, நீங்கள் ஒரு இந்திய வங்கியில் என்ஆர்இ (NRE - Non-Resident External) அல்லது என்ஆர்ஓ (NRO - Non-Resident Ordinary) அக்கவுண்ட்டை வைத்திருக்க வேண்டும்.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஒரு நாட்டின் குறியீட்டை கொண்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்த வேண்டும் (எடுத்துக்காட்டிற்கு அமெரிக்காவிற்கு +1, யுஏஇ-க்கு +971). கடைசியாக மேலும் உங்கள் வங்கி மற்றும் யுபிஐ ஆப் ஆனது இன்டர்நேஷனல் நம்பர் ஆன்போர்டிங்கை (International number onboarding Support) ஆதரிக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

எந்த யுபிஐ ஆப்கள் என்ஆர்ஐ அக்கவுண்ட்களை ஆதரிக்கின்றன? என்பிசிஐ தரவுகளின்படி, பின்வரும் பேமண்ட் ஆப்கள் தற்போது சர்வதேச எண்களுக்கான யுபிஐ ஆன்போர்டிங்கை ஆதரிக்கின்றன:
- போன்பே (PhonePe)
- கூகுள் பே இந்தியா வெர்ஷன் (Google Pay - India Version)
- பீம் (BHIM)
- பேடிஎம் (Paytm - தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளுக்கு)
- அமேசான் பே (Amazon Pay - வரையறுக்கப்பட்ட வெளியீட்டில்)
எந்த நாடுகளில் யுபிஐ சேவை ஆதரிக்கப்படுகின்றன? பின்வரும் நாடுகளைச் சேர்ந்த என்ஆர்ஐ-க்கள் தங்கள் சர்வதேச எண்களுடன் யுபிஐ சேவையை பயன்படுத்தலாம்: அமெரிக்கா (USA), இங்கிலாந்து (UK), ஆஸ்திரேலியா (Australia), கனடா (Canada), சிங்கப்பூர் (Singapore), ஹாங்காங் (Hong Kong), கத்தார் (Qatar), மலேசியா (Malasiya), சவுதி அரேபியா (Saudi Arabia), பிரான்ஸ் (France), ஓமன் (Oman), யுஏஇ (UAE). இந்திய வங்கிகள் இதற்கான ஆதரவை விரிவுபடுத்தும்போது காலப்போக்கில் மேலும் பல நாடுகள் இந்த பட்டியலில் சேரலாம்.


Click it and Unblock the Notifications








