Tata Play சேவையில் திடீர் மாற்றம்.. பழைய ரூ.300 திட்டத்தில்.. புதிதாக 200 சேனல்கள் சேர்ப்பு.. கஸ்டமர்கள் குஷி!
வெறும் ரூ.99 க்கு டாடா ப்ளே 4கே (Tata Play 4K) என்கிற புதிய சேவையை அறிமுகம் செய்த கையோடு.. டாடா ப்ளே நிறுவனமானது, ரூ.300 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் அதன் திட்டமொன்றில் 200 க்கும் மேற்பட்ட புதிய சேனல்களை சேர்த்துள்ளது.
டாடா ப்ளே நிறுவனம் அதன் பிங்கே (Binge) சேவையின் கீழ் டிஸ்ட்ரோடிவி (DistroTV) என்கிற ஸ்ட்ரீமிங் டிவி தளத்தை சேர்த்துள்ளது. பிங்கே என்பது டாடா பிளே நிறுவனத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட ஓடிடி சேவையாகும். இது ஒரு ஒரே லாக்-இன் வழியாக 20 க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு தளங்களை வழங்குகிறது.

தற்போது இந்த சேவையின் கீழ் டிஸ்ட்ரோடிவியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேர்க்கையின் வழியாக டாடா ப்ளே பிங்கே வாடிக்கையாளர்களுக்கு, 200 க்கும் மேற்பட்ட பிரீமியம் ஸ்ட்ரீமிங் சேனல்கள் கூடுதலாக அணுக கிடைக்கும். ஐந்தில் 9எக்ஸ்எம், ஒய்ஆர்எஃப் மியூசிக், நியூஸ்18 சேனல்கள், டிவி9 நெட்வொர்க், ஏபிபி நெட்வொர்க் மற்றும் பல சேனல்களும் அடங்கும்.
டாடா ப்ளே பிங்கே சேவையின் கீழ் ஏற்கனவே என்னென்ன ஓடிடி தளங்கள் அணுக கிடைக்கிறது? டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, எம்எக்ஸ் பிளேயர், ஆஹா, ஹாங்கமா பிளே, ஷீமாரோமீ, எபிக் ஆன், டாக்குபை, ஷார்ட்ஸ் டிவி, டிராவல் எக்ஸ்பி, மனோரமா மேக்ஸ், ஐஸ்ட்ரீம், உள்ளிட்ட பல தளங்கள் அணுக கிடைக்கிறது. இவைகள் எல்லாமே டாடா ப்ளே பிங்கே சேவையின் சூப்பர் பிளானின் கீழ் கிடைக்கும் ஓடிடி தலங்களாகும்.

மெகா பிளானின் கீழ் மேலும் சில பிரீமியம் ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும். சூப்பர் பிளானின் விலை மாதத்திற்கு ரூ.299 ஆகும். இதையே காலாண்டு அல்லது 1 ஆண்டுக்கு தேர்வு செய்தால்.. முறையே ரூ.849 மற்றும் ரூ.3199 ஆகும். இதேபோல மெகா பிளானின் 1 மாதம், 3 மாதங்கள் மற்றும் 1 ஆண்டு சந்தாவிற்கு முறையே ரூ.399, ரூ.1119 மற்றும் ரூ.4199 செலவாகும்.
ரூ.99 க்கு அறிமுகமான டாடா ப்ளே 4கே சேவையின் கீழ் என்ன கிடைக்கும்? பெயர் குறிப்பிடுவது போலவே டாடா ப்ளே 4கே என்பது சூப்பர் ஹை ரெசல்யூஷனில் (Super-high resolution) கன்டென்ட்-ஐ பார்க்க உதவும் ஒரு சேவையாகும். தற்போது இந்த புதிய டாடா ப்ளே 4கே சேவையானது, மாதத்திற்கு ரூ.99 என்கிற அறிமுக விலையில் அணுக கிடைக்கிறது.

ஐபிஎல் (IPL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இந்த நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்த சேவை பல எண்ணிக்கையிலான டாடா பிளே வாடிக்கையாளர்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் டாடா ப்ளே நிறுவனத்தின் வருவாயும் அதிகரிக்கலாம்.
ரூ.99-ஐ போலவே டாடா ப்ளே சேவையின்கீழ் ரூ.199 மதிப்பிலான இன்னொரு வேல்யூ ஆடட் சேவையும் அணுக கிடைக்கிறது. அது டாடா ப்ளே ரெக்கார்ட் பிரீமியம் (Tata Play Record Premium) என்று அழைக்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே இது, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பதிவு (Record) செய்ய உதவும் ஒரு சேவையாகும்.

இந்த சேவையின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இது ஒரே நேரத்தில் பல சேனல்களில் இருந்து கன்டென்ட்-ஐ பதிவு செய்ய அனுமதிக்கிறது. அதாவது நீங்கள் வேறொரு சேனலில் எதையாவது பார்த்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், பின்னர் பார்க்க வேண்டிய மற்றொரு டிவி நிகழ்ச்சியை பதிவு செய்து வைக்க முடியும்.
இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்.. டாடா ப்ளே ரெக்கார்ட் பிரீமியம் சேவையை ரூ.199 க்கு அணுகும் வாடிக்கையாளர்களுக்கு நேரத்தட்டுப்பாடு காரணமாக ஏதோவொரு நிகழ்ச்சியை தவறவிடுவது அல்லது ஒரே நேரத்தில் 2 முக்கியமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் போது, அதில் ஒன்றை தவறவிடுவது போன்ற சிக்கல்களே ஏற்பாடாது!


Click it and Unblock the Notifications








