Home
News

உங்க வீட்டுல Samsung ஸ்மார்ட் TV இருக்கா.. சைலன்ட் ஆக கொண்டு வரப்பட்ட Netflix வசதி!

சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் மானிட்டர்களை கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் தற்போது எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) ஃபார்மெட்டின் கீழ், நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்க்கலாம் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவுடன் உடன், சாம்சங் மற்றும் மானிட்டர் வாடிக்கையாளர்கள் அதிக காண்ட்ராஸ்ட் (richer contrast), ஆழமான கலர்கள் (deeper colours) மற்றும் ஈர்க்கக்கூடிய விஷூவல் டெப்த்-ஐ (impressive visual depth) காண முடியும் என்று சாம்சங் தெரிவித்து உள்ளது.

Samsung ஸ்மார்ட் TV இருக்கா.. சைலன்ட் ஆக கொண்டு வரப்பட்ட Netflix வசதி!

நெட்பிளிக்ஸ் கன்டென்ட்டிற்க்கான எச்டிஆர் 10 பிளஸ் வியூவிங் ஃபார்மெட் ஆனது 2025 சாம்சங் நியோ க்யூஎல்இடி (Samsung Neo QLED), ஓஎல்இடி (OLED) மற்றும் லைஃப்ஸ்டைல் (Lifestyle) மாடல்களிலும், 2024 மற்றும் 2025 மானிட்டர் மாடல்களிலு அணுக கிடைக்கும் என்றும், வரவிருக்கும் டிவி மாடல்களும் இதை ஆதரிக்கும் என்றும் சாம்சங் உறுதிப்படுத்தி உள்ளது.

நெட்பிளிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் எச்டிஆர் 10 பிளஸ் ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கும் மற்றும் ஏவி1-ஐ பயன்படுத்தும் டிவைஸ்களை கொண்ட அனைத்து பிரீமியம் சந்தாதாரர்களுக்கும் எச்டிஆர் 10 பிளஸ்-ஐ செயல்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனமானது, இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து எச்டிஆர் கன்டென்ட்டிற்கும் எச்டிஆர் 10 பிளஸ் விருப்பங்களை வழங்க திட்டமிட்டுள்ளது.

எச்டிஆர் 10 பிளஸ் என்பது ராயல்டி இல்லாத ஹை டைனமிக் ரேஞ்ச் (HDR) தொழில்நுட்பமாகும், இது சாம்சங் நிறுவனத்தால் அமேசான் வீடியோ (Amazon Video) உடன் இணைந்து உருவாக்கப்பட்டது. நெட்பிளிக்ஸ் தவிர, அமேசான் ப்ரைம் வீடியோ, யூட்யூப் (YouTube) மற்றும் கூகுள் பிளே மூவீஸ் அண்ட் டிவி (Google Play Movies and TV) ஆகியவற்றிலும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரிக்கப்படுகிறது.

எச்டிஆர் 10 பிளஸ் ஆனது மற்ற எச்டிஆர் ஃபார்மெட்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? எச்டிஆர் 10 பிளஸ் ஆனது எச்டிஆர் 10 மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) போன்ற பிற எச்டிஆர் ஃபார்மெட்களிலிருந்து வேறுபட்டது, ஏனெனில் இது டைனமிக் மெட்டாடேட்டாவை பயன்படுத்துகிறது, இது ப்ரைட்னஸ், கான்டராஸ்ட் மற்றும் கலர்-ஐ காட்சிக்கு காட்சி அல்லது பிரேமுக்கு பிரேம் கூட மாற்ற அனுமதிக்கிறது. இது நிலையான மெட்டாடேட்டாவை நம்பியிருக்கும் எச்டிஆர் 10-ஐ விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

டால்பி விஷனுடன் ஒப்பிடும்போது, எச்டிஆர் 10 பிளஸ் இதேபோன்ற டைனமிக் மெட்டாடேட்டா திறன்களை வழங்குகிறது, ஆனால் சில வழிகளில் வேறுபடுகிறது. டால்பி விஷன் 12-பிட் கலர் டெப்த்-ஐ ஆதரிக்கிறது. இது பரந்த அளவிலான வண்ணங்கள் மற்றும் மென்மையான சாய்வுகளை அனுமதிக்கிறது. அதேசமயம் எச்டிஆர் 10 பிளஸ் ஆனது 10-பிட்டிலேயே உள்ளது. இருப்பினும், டால்பி விஷன் ஆனது லைசன்ஸ் கட்டணங்கள் தேவைப்படும் ஒரு தனியுரிம வடிவமாகும். ஆனால் எச்டிஆர் 10 பிளஸ் என்பது லைசன்ஸ் செலவுகள் இல்லாத ஓப்பன் ஸ்டாண்டர்ட் ஆகும்.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், டபுள்யூடபிள்யூஇ (WWE) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வேர்ல்ட் விரெஸ்லிங் எண்டர்டெயின்மெண்ட்-க்கான (World Wrestling Entertainment) பிரத்யேக ஸ்ட்ரீமிங் தளம் (Exclusive streaming platform) ஆக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் செயல்பட்டு வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதன்கீழ் டபுள்யூடபிள்யூ-வின் வாராந்திர முதன்மை நிகழ்ச்சிகளான ரா (Raw), என்எக்ஸ்டி (NXT) மற்றும் ஸ்மாக்டவுன் (SmackDown) ஆகியவைகளுடன் சேர்த்து விரெஸ்மேனியா (WrestleMania), சம்மர்ஸ்லாம் (Summer Slam), ராயல் ரம்பிள் (Royal Rumble) மற்றும் மணி இன் தி பேங்க் (Money in the Bank) உள்ளிட்ட பிரீமியம் நேரடி நிகழ்வுகளையும் நெட்பிளிக்ஸ் வழியாக பார்க்கலாம். இதன்கீழ் லைவ் இந்தி வர்ணனையும் கிடைக்கும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில் லைவ் ஸ்போர்ட்ஸ் எண்டர்டெயின்மெண்ட்-க்குள் நெட்பிளிக்ஸ் நிறுவனம் காலடி எடுத்து வைத்து உள்ளது. இந்தியாவில் டபுள்யூடபிள்யூஇ-க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், ரூ.199 முதல் தொடங்கும் நெட்பிளிக்ஸ் சேவையின் கீழ் மேலும் பல புதிய வாடிக்கையாளர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New Change in Samsung Smart TVs Now Its Support Netflix shows and films in HDR 10 Plus
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X