Home
News

புது Post Office ரூல்ஸ்.. இனி Slip-ஓ Form-ஓ கிடையாது.. Aadhaar கொண்டு வரணும்.. நாடு முழுவதும் அமல்!

நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் புதிய செயல்முறை ஒன்று அமலுக்கு வந்துள்ள்து. இனிமேல் வாடிக்கையாளர்கள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் இ-கேஒய்சி செயல்முறையை பயன்படுத்தி ஆர்டி (RD) எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் (Recurring deposit) மற்றும் பிபிஎப் (PPF) எப்படி பப்ளிக் ப்ரொவிடென்ட் ஃபண்ட (Public provident fund) அக்கவுண்ட்களை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய செயல்முறை ஆனது ஆர்டி மற்றும் பிபிஎப் அக்கவுண்ட் ஓப்பனிங்கை விரைவாகவும் காகிதமில்லாமலும் செய்ய வழிவகுக்கிறது. ஏற்கனவே இந்த வசதி - மாதாந்திர வருமான திட்டம் (Monthly Income Scheme), டைம் வைப்புத்தொகை (Time Deposit), கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra) மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate) ஆகியவற்றுக்கு கிடைத்தது.

புது Post Office ரூல்ஸ்.. Aadhaar கொண்டு வரணும்.. நாடு முழுவதும் அமல்!

தற்போது இந்த வசதி இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான இரண்டு சிறிய சேமிப்பு கணக்குகளான ஆர்டி மற்றும் பிபிஎப்-க்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயல்முறையின் கீழ் வாடிக்கையாளர்கள்: ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தி புதிய ஆர்டி மற்றும் பிபிஎப் அக்கவுண்ட்களை திறக்கலாம்.

மேலும் பே-இன் சீட்டுகளை பயன்படுத்தாமல் ஆர்டி மற்றும் பிபிஎப் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம். ஆர்டி மற்றும் பிபிஎப் லோன் கணக்குகளை திறந்து பயோமெட்ரிக் சரிபார்ப்பைப் பயன்படுத்தி கடன்களை திருப்பிச் செலுத்தலாம். மேலும் வரம்புகளைப் பொருட்படுத்தாமல், ஆதார் பயோமெட்ரிக்ஸ் மூலம் பிபிஎப் கணக்குகளிலிருந்து பகுதி அல்லது முழுமையாக பணம் எடுக்கலாம்.

ஆதார் உடன் இணைக்கப்பட்ட இந்த செயல்முறை ஆனது பணம் எடுக்கும் வவுச்சர்கள் மற்றும் பே-இன் சீட்டுகள் போன்ற பிஸிக்கல் ஃபார்ம்களின் தேவையை நீக்குகிறது. கூடவே இது பேப்பர் வொர்க் மற்றும் பரிவர்த்தனை நேரத்தையும் குறைக்கிறது. ஆர்டி அல்லது பிபிஎப் கணக்கை திறக்கும்போது, ​​வைப்புத்தொகையாளரின் பயோமெட்ரிக் இரண்டு முறை பதிவு செய்யப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முதல் பதிவு - ஆதார் விவரங்களை பயன்படுத்துவதற்கான ஒப்புதலைப் பெறுகிறது. இரண்டாவது பதிவு - ஸ்கேன் பரிவர்த்தனையை அங்கீகரிக்கிறது. இதை செய்த பின்னர் வாடிக்கையாளர்கள் தங்கள் தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளிலிருந்து பணத்தை திரும்ப பெறும் படிவங்களை சமர்ப்பிக்காமலேயே பணத்தை பெறலாம்.

மேலும் வாடிக்கையாளர்களின் தனியுரிமைக்காக, படிவங்களில் உள்ள ஆதார் எண்கள் மறைக்கப்பட்ட வடிவத்தில் தோன்றும் (எ.கா., xxxx-xxxxx-1234) என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை மறைக்கப்படாத ஆதார் ஏதேனும் ஆவணத்தில் தோன்றினால், முதல் எட்டு இலக்கங்களை கைமுறையாக மறைக்க தபால் அலுவலக தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோல ஐசிஐசிஐ வங்கியும் இந்த ஜூலை மாதத்தில் சில முக்கியமான புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவந்தது. முதலாவதாக ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன: ஐசிஐசிஐ வங்கி ஆனது அதன் ஏடிஎம் வழியிலான பணப்பரிவர்த்தனை ஒவ்வொரு மாதமும் முதல் ஐந்து நிதி பரிவர்த்தனைகள் இலவசமாகவே இருக்கும் என்றும்; ஐசிஐசிஐ வங்கியின் கீழ் நடக்கும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் அதன் பிறகு நடக்கும் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.23 வசூலிக்கப்படும்.

இதேப்பில ஐசிஐசிஐ வங்கி ஆனது ஐஎம்பிஎஸ் (IMPS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் உடனடி பணம் செலுத்தும் சேவை (Immediate Payment Service) பரிமாற்றங்களுக்கான கட்டணங்களையும் திருத்தி உள்ளது. புதிய ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் ஆனது பரிமாற்றப்பட்ட தொகையை பொறுத்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2.5 முதல் ரூ.15 வரை இருக்கும்.

மேலும் ஒரு மாதத்தில் ரூ.1 லட்சத்திற்கு மேல் ரொக்க வைப்புத்தொகைக்கு ரூ.150 அல்லது ரூ.1,000 க்கு ரூ.3.50 (எது அதிகமாக இருக்கிறதோ அது) கட்டணம் விதிக்கப்படும் என்றும் ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. மூன்றாம் தரப்பு ரொக்க வைப்புத்தொகைக்கான வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25,000 ஆகவே உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Change in Post Office RD PPF Account Opening Process Now Aadhaar e KYC is enough
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X