Home
News

மகாபிரபு நீங்க இங்கயும் வந்துடீங்களா.. Netflix சேவையில் நுழைந்த ChatGPT.. இனி என்னென்ன செய்யலாம்?

மகாபிரபு நீங்க இங்கயும் வந்துடீங்களா என்று கேட்கும்படியாக.. சாட்ஜிபிடி (ChatGPT) ஆனது நெட்பிளிக்ஸ் (Netflix) சேவைக்குள் நுழைகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், அதாவது ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் சாட்பாட் ஆக அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சாட்ஜிபிடி ஆனது செய்தி தலைப்புகளில் சிக்காத நாட்களே இல்லை எனலாம்.

கிப்லி ஸ்டைல் இமேஜ் ஜெனரேஷன் (Ghibli Style Image Generation) என்கிற புயலில் சிக்கி தப்பித்த கையோடு, சாட்ஜிபிடி ஆனது இப்போது நெட்பிளிக்ஸ் சேவைக்குள் காலடி எடுத்தி வைக்கிறது. ப்ளூம்பெர்க்கின் (Bloomberg) சமீபத்திய அறிக்கையின்படி, நெட்பிளிக்ஸ் அதன் ஓடிடி ஆப்பில் சாட்ஜிபிடி அடிப்படையிலான சேர்ச் எஞ்சினை (ChatGPT powered search engine) கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

Netflix சேவையில் நுழைந்த ChatGPT.. இனி என்னென்ன செய்யலாம்?

கடந்த 2021 ஆம் ஆண்டில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'பிளே சம்திங்' (Play Something) என்கிற பட்டன் அறிமுகமானது. இது குறிப்பிட்ட அக்கவுண்டில், அதிகமாக பார்க்கப்பட்ட வியூவிங் ஹிஸ்டரி மற்றும் கன்டென்ட் வகையின் அடிப்படையில் ஒரு டிவி சீரீஸ் அல்லது திரைப்படத்தை பரிந்துரைக்கும். தற்போது இது ​​புதிய ஏஐ அடிப்படையிலான சேர்ச் டெக்னாலஜியை பெறும் என்பது போல் தெரிகிறது

இதன்கீழ் நடிகர், டைட்டில் அல்லது கன்டென்ட் வகை ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கமான கன்டென்ட் பரிந்துரையை விட இன்னும் சிறப்பான பரிந்துரைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன்கீழ் பயனரின் மனநிலையை பொறுத்து சரியான திரைப்படம் அல்லது டிவி சீரிஸ் தொடர்பான பரிந்துரைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த புதிய சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சினின் கீழ், பயனர்கள் தாங்கள் பார்க்க விரும்புவதை டைப் செய்யலாம் அல்லது இரண்டு நபர்களுக்கு இடையேயான இயல்பான உரையாடலை போல நெட்பிளிக்ஸ்-ன் கஸ்டம் பில்ட் சாட்ஜிபிடி சாட்போட் உடன் பேசலாம். தற்போது இந்த புதிய சாட்ஜிபிடி அடிப்படையிலான ஏஐ சேர்ச் எஞ்சின் ஆனது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஓஎஸ் டிவைஸ்களில் சோதிக்கப்படுகிறது.

முன்னதாக சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் மானிட்டர்களை கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் தற்போது எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) ஃபார்மெட்டின் கீழ், நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்க்கலாம் என்று சாம்சங் நிறுவனம் அறிவிக்கப்பட்டு இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவுடன் உடன், சாம்சங் மற்றும் மானிட்டர் வாடிக்கையாளர்கள் அதிக காண்ட்ராஸ்ட், ஆழமான கலர்கள் மற்றும் ஈர்க்கக்கூடிய விஷூவல் டெப்த்-ஐ காண முடியும் என்று சாம்சங் தெரிவித்து உள்ளது.

நெட்பிளிக்ஸ் கன்டென்ட்டிற்க்கான எச்டிஆர் 10 பிளஸ் வியூவிங் ஃபார்மெட் ஆனது 2025 சாம்சங் நியோ க்யூஎல்இடி (Samsung Neo QLED), ஓஎல்இடி (OLED) மற்றும் லைஃப்ஸ்டைல் (Lifestyle) மாடல்களிலும், 2024 மற்றும் 2025 மானிட்டர் மாடல்களிலு அணுக கிடைக்கும் என்றும், வரவிருக்கும் டிவி மாடல்களும் இதை ஆதரிக்கும் என்றும் சாம்சங் உறுதிப்படுத்தி உள்ளது.

நெட்பிளிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் எச்டிஆர் 10 பிளஸ் ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கும் மற்றும் ஏவி1-ஐ பயன்படுத்தும் டிவைஸ்களை கொண்ட அனைத்து பிரீமியம் சந்தாதாரர்களுக்கும் எச்டிஆர் 10 பிளஸ்-ஐ செயல்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனமானது, இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து எச்டிஆர் கன்டென்ட்டிற்கும் எச்டிஆர் 10 பிளஸ் விருப்பங்களை வழங்க திட்டமிட்டுள்ளது.

எச்டிஆர் 10 பிளஸ் என்பது ராயல்டி இல்லாத ஹை டைனமிக் ரேஞ்ச் (HDR) தொழில்நுட்பமாகும், இது சாம்சங் நிறுவனத்தால் அமேசான் வீடியோ (Amazon Video) உடன் இணைந்து உருவாக்கப்பட்டது. நெட்பிளிக்ஸ் தவிர, அமேசான் ப்ரைம் வீடியோ, யூட்யூப் (YouTube) மற்றும் கூகுள் பிளே மூவீஸ் அண்ட் டிவி (Google Play Movies and TV) ஆகியவற்றிலும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரிக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Change in Netflix OTT App ChatGPT Powered Search Engine To Give Better Content recommendations
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X