Home
News

Jio கஸ்டமர்கள் ஷாக்.. இனி ரூ.200 இல்ல ரூ.300.. பழைய பிளான் தானாகவே புதுசா மாறிடும்.. அம்பானி புது ஸ்கெட்ச்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது 2025 ஜனவரி 23 ஆம் தேதி முதல் புதிய மாற்றம் ஒன்றை அமலுக்கு கொண்டுவரும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 91மொபைல்ஸ் வழியாக கிடைத்த தகவலின்படி ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் இருக்கும் ஜியோ போஸ்ட்பெய்ட் பயனர்கள் தானாகவே ரூ.299 திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம் ரூ.199 திட்டமானது 30 நாட்கள் வேலிடிட்டியின் கீழ், வாய்ஸ் கால்கள் மற்றும் 4ஜி டேட்டா பலன்களை வழங்கும் மலிவான போஸ்ட்பெய்ட் பேக் ஆகும். இதற்கு மாற்றாக வரும் ரூ.299 போஸ்ட்பெய்ட் திட்டமானது பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒவ்வொரு நாளும் 100 இலவ எஸ்எம்எஸ்கள் மற்றும் மாதத்திற்கு 25ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

Jio கஸ்டமர்கள் ஷாக்.. இனி ரூ.200 இல்ல ரூ.300.. அம்பானி புது ஸ்கெட்ச்!

டேட்டா லிமிட்டை மீறிய பின்னர், கூடுதல் டேட்டாவிற்கு, ஒரு ஜிபிக்கு ரூ.10 வசூலிக்கப்படும். ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் பயனர்களை அதிக விலையுள்ள ரூ.299 பேக்கிற்கு மேம்படுத்துவதற்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, இது அதன் சந்தாதாரர்களை அதிக மதிப்புள்ள பேக்குகளுக்கு இடம்பெயர வைக்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கலாம்.

ஒருவேளை நீங்கள் புதிய ஜியோ போஸ்ட்பெய்ட் இணைப்பை பெற விரும்பினால், இந்த சேவைக்கான பேஸிக் பிளான் இப்போது ரூ.349 முதல் தொடங்குகிறது. ரூ.349 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை இது 30 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ரூ.349 திட்டத்தின் கீழ் ஜியோடிவி, ஜியோசினிமா (பிரீமியம் சந்தா அல்ல) மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வாடிக்கையாளர்கள், ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையையும் (Jio Unlimited 5G Data) பெறுவார்கள்.

வெளிப்படையாகவே ரூ.299 போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் ஒப்பிடுகையில் ரூ.349 திட்டமிட்டு அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா பலனை வழங்குவதால், இது இன்னும் சிறந்த மதிப்பை வழங்குவதாக தெரிகிறது. ரூ.349 திட்டம் தவிர, ஜியோ நிறுவனத்திடம் ரூ.449, ரூ.649, ரூ.749 மற்றும் ரூ.1549 மதிப்பிலான போஸ்ட்பெய்ட் திட்டங்களும் உள்ளன

குறிப்பாக ரூ.749 மற்றும் ரூ.1549 ஆகிய இரண்டு திட்டங்களும், நெட்பிளிக்ஸ் பேஸிக் திட்டம் மற்றும் அமேசான் பிரைம் லைட் (2 மாதங்களுக்கு செல்லுபடியாகும்) போன்ற பிரபலமான ஓடிடி ஆப்களுக்கான இலவச அணுகலுடன் வருகின்றன. மேலும் இந்த திட்டங்கள் அனைத்துமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மைகள், எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகின்றன.

சமீபத்தில் ஜியோ நிறுவனம், 2025 புத்தாண்டிற்காக தான் அறிவித்த புதிய ரூ.2025 திட்டமானது (Jio Rs 2025 Plan) ஜனவரி 31 ஆம் தேதியோடு ரீசார்ஜ் செய்ய கிடைக்காது என்று அறிவித்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த 2025 நியூ இயர் ஆஃபர் பிளான் ஆனது ஜனவரி 11 ஆம் தேதியோடு நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது; தற்போது இது 2025 ஜனவரி மாதம் இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜியோவின் ரூ.2025 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது 200 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 2.5 ஜிபி டேட்டா, ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல்கள் ஆகிய நன்மைகளை வழங்கும் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர் மற்றும் சில தள்ளுபடி கூப்பன்களையும் வழங்குகிறது.

தள்ளுபடி கூப்பன்களை பொறுத்தவரை ரூ.2999 அல்லது அதற்கு மேல் ஷாப்பிங் செய்யும் போது ஏஜியோ (Ajio) வழங்கும் ரூ.500 தள்ளுபடி கூப்பன் கிடைக்கும். விமான பயணங்களை முன்பதிவு செய்ய ஈஸ்மைட்ரிப்பில் (EaseMyTrip) இருந்து ரூ.1500 தள்ளுபடி சலுகை கிடைக்கும். ஸ்விக்கியில் (Swiggy) குறைந்தபட்சம் ரூ.499 மற்றும் அதற்கு மேலான மதிப்பு கொண்ட ஆர்டர்களை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.150 தள்ளுபடியும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Change in Jio Postpaid Service Rs 199 Plan Users Shifted Automatically To Rs 299 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X