கைமாறிய காசு.. மாஸ்டர் பிளான்.. Jio Cinema ஆப்பை இழுத்து மூடும் அம்பானி.. ஏன்? இன்னும் எத்தனை நாட்களில்?
ஜியோ சினிமா ஆப்பை (Jio Cinema App) இலவசமாக பயன்படுத்துபவர்கள் மற்றும் ஜியோ சினிமா ஆப்பிற்காக சந்தா பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் ஆகிய அனைவருமே கூடிய விரைவில் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடும். ஏனென்றால் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ஓடிடி இயங்குதளம் ஆன ஜியோ சினிமா ஆப் ஆனது அடுத்து வரும் சில நாட்களில் ஷட்டவுன் (Shutdown) செய்யப்படலாம்; அதாவது மூடப்படலாம் என்பது போல் தெரிகிறது. ஏன்? என்ன நடந்தது? என்னென்ன நடக்க உள்ளது? இதோ விவரங்கள்:
ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ சினிமா தளத்தில் இலவச ஐபிஎல் ஸ்ட்ரீமிங்கை அறிவித்தபோது, அது ஒட்டுமொத்த ஓடிடி சந்தையையும் உலுக்கியது. இருப்பினும், வரும் நாட்களில் ஜியோசினிமா குறித்து முகேஷ் அம்பானி முக்கிய முடிவை எடுக்கலாம் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிஸ்னி (Reliance Industries and Disney) இடையேயான கையகப்படுத்தல் ஒப்பந்தம் (Acquisition deal) கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும், முகேஷ் அம்பானி, டிஸ்னி ஸ்டார் நெட்வொர்க் மற்றும் அதன் வணிகத்தை "முழுமையாக" கட்டுப்படுத்துவார் என்றும், இது ஜியோ சினிமா ஷட்டவுன் குறித்த சாத்தியமான முக்கிய முடிவை எடுக்க தூண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எக்கனாமிக் டைம்ஸ் (ET) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இடையேயான ஒப்பந்தம் முடிந்ததும், முகேஷ் அம்பானியின் நிறுவனம் அதன் ஓடிடி தளங்களை ஒருங்கிணைக்கலாம். அதாவது ஜியோ சினிமா ஆனது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உடன் இணைக்கப்படலாம். இதன் மூலம் ஜியோ சினிமா ஆப் ஆனது காணாமல் போகலாம் என்கிற யூகங்கள் மேலோங்கி உள்ளன.
8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னியின் இந்த இணைப்பு ஒப்பந்தமானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் நாட்டின் மிகப்பெரிய ஊடக நிறுவனத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால், இந்த இணைப்பின் மூலம், எச்பிஓ (HBO) கன்டென்ட் ஆனது மீண்டும் ஹாட்ஸ்டார் இயங்குதளத்திற்குச் செல்லும். ஒட்டுமொத்தமாக முகேஷ் அம்பானி மொத்த ஓடிடி சந்தையை கையகப்படுத்த உள்ளார் என்றே கூறலாம்.
மேலும் ஐபிஎல் போட்டிகள், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐசிசி போட்டிகள் ஆகிய அனைத்தும் இறுதியாக ஒரே தளத்தின் கீழ் இருக்கும். ஆனால் இதற்கான சந்தா விலைகள் எப்படி இருக்கும்? ஜியோ சினிமாவில் இப்போது இருப்பதை போலவே எல்லாமே.. மிகவும் மலிவான விலைக்கு அணுக கிடைக்குமா? அல்லது நெட்பிளிக்ஸ் போல மிகவும் உயர்ந்த விலை நிர்ணயம் கொண்ட ஓடிடி தளமாக மாறுமா? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அனைத்து கன்டென்ட்டையும் ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் அம்பானியின் இந்த நடவடிக்கை, கண்டிப்பாக சந்தையில் பெரும் பரபரப்பை உருவாக்கும். பல வகையான வணிகங்கள் தத்தம் விளம்பரங்களை அள்ளிவீசுவதற்கு இந்த தளத்தை ஒரு விருப்பமான தேர்வாக வைத்து கொள்ளலாம்.
ஸ்ட்ரீமிங்கின் செயல்திறன் மற்றும் தரம் காரணமாக வணிகங்கள் தத்தம் விளம்பரங்களை வழங்குவதற்கான சிறந்த தளங்களில் ஒன்றாக ஹாட்ஸ்டார் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி ஆகிய இரண்டு நிறுவங்களும் இணைவதற்கான சிசிஐ அனுமதியானது கடந்த ஆகஸ்ட் மாதமே கிடைத்துவிட்டது. 2025 ஜனவரிக்குள், முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனம் - ஒருங்கிணைந்த தளத்தை அமைக்கும் நடவடிக்கையை முடிக்க வேண்டும். முன்னரே குறிப்பிடப்படி - இதற்காக பெயர் மற்றும் லோகோ மாறுமா? பிளாட்ஃபார்ம் மறுபெயரிடப்படுமா என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. இருப்பினும், ஒன்று மட்டும் நிச்சயம் - அடுத்த சில மாதங்கில் ஜியோ சினிமாவை ஒரு தனித்த ஓடிடி தளமாக நாம் பார்க்க முடியாது!


Click it and Unblock the Notifications








