Home
News

புது PF ரூல்ஸ்.. செட்டில்மென்ட் க்ளெயிம் செய்வதில் புதிய மாற்றம்.. 4 வகைகளாக பிரித்து EPFO அறிவிப்பு!

இபிஎஃப்ஓ (EPFO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation) ஆனது செட்டில்மென்ட் க்ளெயிமிங் (Settlement Claiming) தொடர்பான முக்கிய மாற்றம் ஒன்றை அறிவித்துள்ளது. அதென்ன மாற்றம்? இது யாருக்கெல்லாம் பொருந்தும்? இதோ விவரங்கள்:

குறிப்பிட்ட சில பணியாளர்கள் தங்கள் பிஸிக்கல் க்ளெயிம்களை கோர ஆதார் சீடிங் செய்ய தேவையில்லை என்று இபிஎஃப்ஓ அறிவித்துள்ளது. பொதுவாக செட்டில்மென்ட்-ஐ க்ளெயிம் செய்ய இபிஎஃப்ஓ ​​சந்தாதாரர்கள், தங்களுடைய யுஏஎன் (UAN - யுனிவர்சல் கணக்கு எண்) நம்பரை ஆதார் உடன் பதிவு செய்திருக்க வேண்டும்.

புது PF ரூல்ஸ்.. செட்டில்மென்ட் க்ளெயிம் செய்வதில் புதிய மாற்றம்!

இருப்பினும், இபிஎஃப்ஓ-வின் இந்த சமீபத்திய அறிவிப்பின் மூலம், ஓய்வூதிய அமைப்பு நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய மாற்றத்தின் கீழ் பின்வரும் 4 வகை தொழிலாளர்களும் யுஏஎன் உடன் ஆதார் விவரங்களை சீடிங் செய்யவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர்:

01. தங்கள் செய்ய வந்த வேலையை முடித்துவிட்டு, ஆதார் அட்டையை பெறாமலேயே இந்தியாவை விட்டு வெளியேறிய சர்வதேச தொழிலாளர்கள் (International workers).
02. வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்து ( Migrated to a foreign country) அங்கே குடியுரிமை (Citizenship) பெற்ற ஆதார் அட்டை இல்லாத இந்தியர்கள்.

03. பணியாளராக தகுதி பெற்ற நேபாள குடிமக்கள் மற்றும் பூட்டான் குடிமக்கள் மற்றும் இபிஎப் மற்றும் எம்பி சட்டத்தின் கீழ் உள்ள ஒரு ஸ்தாபனத்தில் பணிபுரியும் மற்றும் பட்டியலில் இருப்பவர்கள். இந்த உறுப்பினர்கள் இந்தியாவில் வசிக்கவில்லை, எனவே அவர்களிடம் ஆதார் இருக்காது.

04. ஆதார் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், பாஸ்போர்ட் (Passport) போன்ற மாற்று ஆவணங்கள் வழியாக சர்வதேச தொழிலாளர்களின் தேசியம் சரிபார்க்கப்பட வேண்டும் அல்லது பூடான் மற்றும் நேபாளத்தில் உள்ளவர்களுக்கான குடியுரிமை அடையாள சான்றிதழ் / ஆவணத்தை சரிபார்க்க பயன்படுத்தப்பட வேண்டும்.

இபிஎஃப்ஓ-வின் இந்த சமீபத்திய சுற்றறிக்கை வேறு என்ன கூறுகிறது? இபிஎஃப்ஓ அதன் சுற்றறிக்கையில், மேற்கண்ட வகையினர் விலக்கு கோரும் போது, சரிபார்ப்பிற்காக அவர்களின் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் இதற்காக ஆபிஸ்-இன்-சார்ஜ்ஜிடம் (office in-charge - OIC) அனுமதி பெற வேண்டும் மற்றும் இந்த நோக்கத்திற்காக ஒரு இ-ஆபிஸ் ஃபைல் (e-office file) பராமரிக்கப்பட வேண்டும்.

மேலும் அதிகாரிகள் இதுபோன்ற எல்லா நிகழ்வுகளிலும், வங்கி கணக்குகளையும் சரிபார்க்கலாம் மற்றும் மீதமுள்ள தொகை ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால், வேலை கொடுத்தோரிடம் இருந்து உறுதிப்படுத்தலை பெறலாம். எல்லாவற்றை விட முக்கியமாக ஈபிஎஃப்ஓ-வின் இந்த சுற்றறிக்கையின்படி, கோரப்படும் செட்டில்மென்ட்டிற்கான கிரெடிட் முறை ஆனது என்இஅஃப்டி (NEFT) ஆக இருக்க வேண்டும்.

கடந்த நவம்பர் மாத இறுதியில் இபிஎப்ஓ ஆனது டிஜிட்டல் சிக்னேச்சர் சான்றிதழ் (Digital Signature Certificate - DSC) மற்றும் இ-சைன் கோரிக்கைகளை (E-Sign requests) செயலாக்குவதற்கான புதிய விதிகளை வெளியிட்டு இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இபிஎப்ஓ-வின் புதிய விதிகளின்படி, டிஎஸ்சி (DSC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் டிஜிட்டல் சிக்னேச்சர் சர்ட்டிஃபிகேட்டின் பயன்பாடு ஆனது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

எம்பிளாயரிடம் (Employer) இருந்து குறைந்தபட்சம் ஒரு டிஎஸ்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட கையொப்பம் (Authorized signatory) இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த புதிய வழிகாட்டுதல்களுடன் இணங்குவதற்கான தீவிரத்தன்மையை அடிக்கோடிட்டு காட்டும் வகையில், டிஎஸ்இ அல்லது இ-சைன் ஐ தவறாக பயன்படுத்தினால், எம்பிளாயரக்ளும் மற்றும் அவர்களது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் (Employers and their authorized representatives) ஆகிய இருவரும் தான் கூட்டாக பொறுப்பாவார்கள் என்றும் இபிஎப்ஓ கூறியுள்ளது.

இபிஎப்ஓ-வின் இந்த புதிய வழிகாட்டுதல்கள் இணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் எஸ்டாபிளிஷ்மென்ட் தொடர்பான ஆவணங்களுக்கான (Establishment-related documents) அங்கீகார செயல்முறையை நெறிப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளன. இபிஎப்ஓ-வின் இ-சைன் பயன்பாடானது, இ-கவர்னென்ஸ் முன்முயற்சியின் (E-governance initiative) ஒரு பகுதியாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

More from GizBot

Best Mobiles in India

English summary
New Change in EPFO Settlement Claim These 4 Categories Workers Excluded From Aadhaar Seeding
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X