உடனே மாறுங்க.. "பழைய" BSNL கஸ்டமர்களுக்கு திடீர் அறிவிப்பு.. யார் எல்லாம் என்ன செய்ய வேண்டும்?
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு ஒரு திடீர் மெசேஜ் வந்துள்ளது. அது என்ன மெசேஜ்? பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் எதில் இருந்து எதற்கு மாற வேண்டும்? ஏன் மாற வேண்டும்? இதோ விவரங்கள்:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியான மை பிஎஸ்என்எல் ஆப்பை (My BSNL App) பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஆப் வழியாக ஒரு பாப்-அப் மெசேஜை (Pop-up Mesaage) பெற்றுள்ளனர். அந்த மெசேஜ் பிஎஸ்என்எல் சேவையில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றத்தை பற்றி பயனர்களுக்கு அறிவிக்கிறது.

அதே மெசேஜ் "அன்புள்ள வாடிக்கையாளர்களே, மென்மையான அனுபவத்திற்காக மை பிஎஸ்என்எல் ஆப் அம்சங்களை பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப் (BSNL Selfcare App) உடன் இணைக்கிறோம். உங்கள் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் அணுக பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப்பை பதிவிறக்கம் செய்யவும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது இனிமேல் மை பிஎஸ்என்எல் ஆப்பிற்கு எந்த வேலையும் இருக்காது என்பது போல் தெரிகிறது. மை பிஎஸ்என்எல் ஆப் வழியாக அணுக கிடைத்த அம்சங்களை தொடர்ந்து பயன்படுத்த விரும்பும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் புதிய பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப்பிற்கு உடனே மாற வேண்டும்.

பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு வெர்ஷன்களிலும்.. முறையே கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. இந்த திடீர் இணைப்பின் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற அனுபவத்தை (Unified and seamless experience) வழங்க முடியும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் நம்புகிறது!
பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப்பில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் அணுக கிடைக்கும் அனைத்து வகையான சேவைகளையும் (ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட், லேண்ட்லைன் மற்றும் ஃபைபர்-டு-தி-ஹோம்) நிர்வகிக்க முடியும். மேலும் இந்த ஆப் வழியாக டேட்டா பயன்பாட்டை (Data usage) கண்காணிக்க உதவும் புள்ளிவிவரங்களை காட்சிப்படுத்தும் டாஷ்போர்டுகளையும் (Dashboards) அணுக முடியும்.

மேலும் இந்த ஆப் வழியாக பில் செலுத்துதல் மற்றும் மொபைல் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்தல் போன்ற செயல்முறைகளையும் எளிதாக செய்யலாம். மேலும் பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பிஎஸ்என்எல் மொபைல் & லேண்ட்லைன் / எப்டிடிஎச் நம்பரை தங்கள் அக்கவுண்ட்டில் சேர்த்து அந்த எண் தொடர்பான பரிவர்த்தனைகளையும் நிர்வகிக்கலாம்.
எல்லாவற்றை விட முக்கியமாக, பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப் ஆனது ஆக்டிவ் ஆக உள்ள திட்டத்தின் காலாவதியாகும் தேதி குறித்தும் பயனர்களை எச்சரிக்கும். ஏப்ரல் 1 ஆம் தேதியோடு பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பல பாரத் ஃபைபர் திட்டங்களை திரும்ப பெறுகிறது (Withdrawn several Bharat Fiber plans) என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதனொரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் கீழ் - ஃபைபர் பேசிக் ஓடிடி (Fiber Basic OTT) மற்றும் ஃபைபர் பேசிக் சூப்பர் (Fiber Basic Super) என்கிற 2 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஃபைபர் பேஸிக் ஓடிடி திட்டமானது மாதம் ரூ.599 க்கும், ஃபைபர் பேஸிக் சூப்பர் திட்டமானது மாதம் ரூ.699 க்கும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.
ரூ.599 திட்டமானது 75எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை (Up to 75Mbps Speed) வழங்கும். இது ஃபேர் யூசேஜ் பாலிஸியின் (Fair Usage Policy - FUP) கீழ் மொத்தம் 4000ஜிபி அல்லது 4டிபி டேட்டாவை வழங்கும். மறுகையில் உள்ள ரூ.699 திட்டமானது 125எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை (Up to 125Mbps Speed) வழங்கும்.
இதுவும் ஃபேர் யூசேஜ் பாலிஸியின் கீழ் மொத்தம் 4000ஜிபி அல்லது 4டிபி டேட்டாவை வழங்கும். வேறுபாட்டை பொறுத்தவரை ரூ.599 ஆனது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சூப்பர் (Disney+ Hotstar Super) திட்டத்திற்கான இலவச சந்தாவை வழங்கும். மேலும் இரண்டுமே இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிட்ட் கால்களை வழங்கும்!


Click it and Unblock the Notifications








