பழைய முறை முடிவுக்கு வந்தது.. குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்குவதில் புதிய விதி அமல்.. UIDAI அறிவிப்பு!
யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (Unique Identification Authority of India) தலைமை நிர்வாக அதிகாரி ஆன புவனேஷ் குமார், குழந்தைகளுக்கான ஆதார் அட்டை (Baal Aadhaar Card) வழங்குவதில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளார்.
0-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் சேர்க்கை (பால் ஆதார்) ஆனது இனி பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதன் மூலம், பெற்றோரின் மேற்பார்வை காரணமாக குழந்தைகளுக்கு இரண்டு ஆதார் எண்கள் (ஒன்று பயோமெட்ரிக்ஸ் இல்லாமல், மற்றொன்று பயோமெட்ரிக்ஸ் உடன்) வழங்கப்படும் பழைய முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த புதிய செயல்முறையின் கீழ் ஒரு குழந்தைக்கு பால் ஆதார் வழங்கப்பட்டவுடன், அவர்களின் பிறப்பு சான்றிதழ் ஏற்கனவே யுஐடிஏஐ அமைப்புடன் இணைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் மீண்டும் பெரியவர்களாக பதிவு செய்ய முடியாது. இதன் மூலம் இரண்டு ஆதார் முறை முடிவுக்கு வரும்என்பதில் சந்தேகே வேண்டாம்.
இந்த செயல்முறை ஆனது யாருமே இரண்டு முறை பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்கிறது. ஒருவேளை சரியான பிறந்த தேதி கிடைக்காத சந்தர்ப்பங்களில், அல்லது தாய்-தந்தை இல்லாதவர்களுக்கு - அவர்களுடைய பிறந்த ஆண்டு பதிவு செய்யப்படும் என்பதையும் புவனேஷ் குமார்உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்த செயல்முறை அடுத்த மூன்று மாதங்களில் முழுமையாக செயல்படும் என்றும், தானியங்கி இணைப்பும் (Automatic linkage) செயல்படுத்தப்படும் என்றும் புவனேஷ் குமார் கூறினார். இதற்கான 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள இந்திய பதிவாளர் ஜெனரல் (RGI) தரவுகளுடன் அதன் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் யுஐடிஏஐ ஈடுபட்டுள்ளது. இவற்றில், 25 மாநிலங்கள் ஏற்கனவே சிவில் பதிவு முறையில் (CRS) உள்ளன, மீதமுள்ள 11 மாநிலங்கள் தனித்தனியாக இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது, பால் ஆதார் கவரேஜ் ஆனது தேசிய அளவில் சுமார் 45% ஆக உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டமைப்பு ஆனது குழந்தைகளுக்கான ஆதார் சேர்க்கையை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோரின் ஒப்புதலுடன், பிறப்புச் சான்றிதழிலிருந்து உருவாக்கப்பட்ட குழந்தையின் ஆதார் எண்ணை - பயோமெட்ரிக் தரவு இல்லாமல் - இப்போது ஆர்ஜிஐ அல்லது மாநில பதிவாளர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
அறியாதோர்களுக்கு - பால் ஆதார் என்பது பெற்றோரின் ஆதாருடன் இணைக்கப்பட்ட 12 இலக்க எண் ஆகும், மேலும் குழந்தையின் பயோமெட்ரிக்ஸ் விவரங்களை பதிவு செய்யாமலேயே இது வழங்கப்படுகிறது. குழந்தையின் பிரபு சான்றிதழ் மற்றும் ஒரு பெற்றோரின் ஆதார் விவரங்களை ஆதார் பதிவு மையத்தில் வழங்குவதன் மூலம் இதை பெறலாம்
இதன்கீழ் - பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதி போன்ற அடிப்படை மக்கள்தொகை விவரங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும். மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி விருப்பத்திற்குரியது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம், 1969 இன் கீழ் தரவை ஒருங்கிணைப்பதன் மூலம், கடந்த காலங்களில் நகல் அல்லது மோசடிக்கு வழிவகுத்த இடைவெளிகளை நிரப்புவதே யுஐடிஏஐ-யின் நோக்கமாகும்.
டிஜிட்டல் அடையாள அமைப்பின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதே பெரிய குறிக்கோள் என்று புவனேஷ் குமார் வலியுறுத்தி உள்ளார். ஆதாரை பாதுகாப்பதும், ஆதார் சேர்க்கை ஆனது பாதுகாப்பாகவும், எளிமையாகவும், நகல் இல்லாததாகவும் இருப்பதை உறுதி செய்வதுமே எங்கள் நோக்கம் என்று கூறியுள்ளார்.
பால் ஆதார் நடைமுறையை ஆனது "வீண் செலவு" என்று தலைமை தணிக்கையாளரின் (Comptroller and Auditor General- CAG) விமர்சனத்திற்கு பதிலளித்த புவனேஷ் குமார், இந்த வயதினரின் சேர்க்கை ஆதார் சட்டத்தின் கீழ் கட்டாயமாகும் என்றும், சிஆர்எஸ் உடன் இணைக்கப்பட்டவுடன், பால் ஆதார் ஆனது டுப்ளிகேஷனுக்கு எதிரான ஃபுல்-ப்ரூஃப் (Fool-proof against Duplication) ஆக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications