Home
News

பேஸிக் பிளானில் திருத்தம்.. Airtel கஸ்டமர்கள் கவனம்.. எதோ ஞாபகத்தில் பழைய பிளானை ரீசார்ஜ் செஞ்சிடாதீங்க!

சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் போஸ்ட்பெய்டு சேவையின் கீழ் கிடைக்கும் ஒரு என்ட்ரி லெவல் பிளானில் முக்கிய மாற்றங்களை செய்து உள்ளது. எனவே ஏர்டெல் போஸ்ட்பெய்டு பயனர்கள், இந்த திட்டத்தடை ரீசார்ஜ் செய்யும் போது கவனமாக இருக்கவும். என்ன திட்டம்? பழைய விலை என்ன? புதிய விலை என்ன? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ஏர்டெல் நிறுவனம் அதன் போஸ்ட்பெயிட் சேவையின் கீழ் உள்ள என்ட்ரி லெவல் இன்டர்நேஷனல் ரோமிங் (ஐஆர்) பேக்கில் (New Change in Airtel Postpaid Airtel International Roaming Entry Level Plan) ஒரு பெரிய திருத்தத்தை செய்துள்ளது. ரூ.649 மதிப்புள்ள பழைய ஐஆர் பேக்கை நீக்கிவிட்டு, உலகளவில் பயன்படுத்தக்கூடிய மற்றும் மேம்பட்ட டேட்டா நன்மைகளுடன் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பேஸிக் பிளானில் திருத்தம்.. Airtel கஸ்டமர்கள் கவனம்!

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏர்டெல் போஸ்ட்பெய்டு ஐஆர் பேக்கி விலை ரூ.648 ஆகும். 189 நாடுகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் இந்த திட்டம் அன்லிமிடெட் டேட்டாவுடன் தொகுக்கப்பட்டுள்ளது. அதாவது இதன்கீழ் 1ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும், அதன் பிறகு 80கேபிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்

வாய்ஸ் காலிங் நன்மைகளை பொறுத்தவரை, இதன் கீழ் 100 நிமிட அவுட்கோயிங் மற்றும் இன்கமிங் அழைப்புகள் (உள்ளூர் மற்றும் இந்தியாவிற்கு) கிடைக்கும. எஸ்எம்எஸ் நன்மைகளை பொறுத்தவரை இது இலவச இன்கமிங் எஸ்எம்எஸ், 10 அவுட்கோயிங் எஸ்எம்எஸ்களை வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாள் ஆகும். சர்வதேச ரோமிங்கில் இருக்கும்போது செய்யப்படும் சர்வதேச அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.45 கட்டணம் வசூலிக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ரீசார்ஜ் செய்ய கிடைத்த ரூ.649 என்ட்ரி லெவல் திட்டம் இப்போது கிடைக்கவில்லை. நினைவூட்டும் வண்ணம் இது 500எம்பி டேட்டாவை மட்டுமே வழங்கியது. எனவே ஏர்டெல் இப்போது அதன் பேஸிக் ஐஆர் பேக்கின் டேட்டா நன்மையை 1ஜிபி ஆக இரட்டிப்பாக்கியுள்ளது; அதே நேரத்தில் அன்லிமிடெட் எப்யுபி பயன்பாடும் உள்ளது. ஒட்டுமொத்தமாக இது "பெட்டர்" ஆன ஐஆர் பேக் ஆக மாறியுள்ளது!

முன்னதாக ஏர்டெல் நிறுவனம் அசாமில் உள்ள அதன் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்காக ஒரு புதிய மொபைல் + டிடிஎச் பிளானை (New Mobile + DTH Plan) அறிமுகப்படுத்தி இருந்தது. ரூ.450 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் கீழ் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஒரே ரீசார்ஜில் மொபைல் மற்றும் டிடிஎச் (டிஜிட்டல் டிவி) நன்மைகளை பெற முடிகிறது

சுவாரசியமாக இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி நன்மையும் (Unlimited 5G Benefit) கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.448 ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டம் அசாமில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்க்ளுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற பிராந்தியங்களில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

ஏர்டெல் ரூ.448 மொபைல் + டிடிஎச் ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்

டெய்லி டேட்டா ஒதுக்கீட்டை மீறிய பிறகு, இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். வழக்கமான ப்ரீபெய்ட் நன்மைகளுடன் சேர்த்து இந்த திட்டத்தில் டிடிஎச் நன்மைகளும் கிடைக்கும். இந்த திட்டத்தின் பயனர்கள், ஏர்டெல் டிஜிட்டல் டிவி (Airtel Digital TV) சந்தாவின் கீழ் 28 நாட்களுக்கு 250 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை அணுக முடியும்.

மற்ற கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (5ஜி நெட்வொர்க் பகுதிகளில் மட்டும் கிடைக்கும்), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்பில் உள்ள கன்டென்ட்களுக்கான இலவச அணுகல், மூன்று மாதங்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோட்யூன்ஸ் ஆகியவைகள் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Change in Airtel Postpaid International Roaming Service Now Entry Level Plan is Rs 648
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X