WhatsApp-க்கு வந்த Zoom Control.. இது எப்படி வேலை செய்யும்? இதனால் யூசர்களுக்கு என்ன பயன்?
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே வாட்ஸ்அப்பிற்கு வந்த புதிய அம்சங்கள் மற்றும் அப்டேட்கள் ஏராளம். ஆனால் மே தொடங்கியதும் அப்படி எதுவும் நடக்கவில்லை; வாட்ஸ்அப்பில் ஒரே மயான அமைதி நிலவியது. ஆனால் தற்போது மீண்டும் வாட்ஸ்அப் அடுக்அடுக்கான அப்டேட்களை வெளியிட தொடங்கியுள்ளது.
ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் (Status updates) பிரிவில் ப்ரைவேட்லி டேக் காண்டாக்ஸ் (Privately tag contacts) என்கிற அம்சம், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போட்டோக்களை எடிட்டிங் செய்யும் அம்சம் உட்பட ஏப்ரல் மாதத்தில் பல புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பிற்கு வந்தன. அந்த வரிசையில் கேமராவிற்கான புதிய ஜூம் கண்ட்ரோல் அம்சமும் வாட்ஸ்அப்பிற்கு வருகிறது.

பெயர் குறிப்பிடுவது போலவே, வாட்ஸ்அப்பில் கேமராவை பயன்படுத்தும் போது,இந்த அம்சம் ஜூம் அளவை சீராக சரிசெய்ய அனுமதிக்கும். கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி, இந்த புதிய அம்சம் ஐஓஎஸ்-க்கான லேட்டஸ்ட் பீட்டா வெர்ஷனை அப்டேட் செய்த சில பீட்டா டெஸ்டர்களுக்கு அணுக கிடைக்கிறது. வரும் நாட்களில் இது மேலும் பல யூசர்களுக்கு வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூம் கண்ட்ரோலை கொண்டுவருவதன் மூலம் கேமராவை செம்மைப்படுத்துவதில் வாட்ஸ்அப் கவனம் செலுத்துவதாக தெரிகிறது. இதன் மூலம் வாட்ஸ்அப் வழியாகவே பயனர்கள் தங்களுக்கு பிடித்த தருணங்களைப் படம்பிடித்து உடனடியாக பகிர்ந்துகொள்ள முடியும். முன்னரே குறிப்பிட்டபடி, இந்த அம்சம் ஐஓஎஸ் 24.9.10.75 அப்டேட் வழியாக பீட்டா டெஸ்டர்களுக்கு அணுக கிடைக்கிறது.
இந்த அம்சம் குறித்த ஸ்கிரீன்ஷாட் ஆனது, ஜூம் அளவை சீராக சரிசெய்யும் புதிய பட்டன் ஒன்றை காண முடிகிறது. நினைவூட்டும் வண்ணம், முந்தைய அப்டேட்களின் வழியாக, ரெக்கார்ட் செய்யும் போது ஜூம் அளவை மாற்ற விரும்பும் பயனர்கள் கேமரா பட்டனில் தங்கள் விரலை வைத்து மேலே அல்லது கீழே ஸ்வைப் செய்வதன் மூலம் அதை செய்ய முடியும் ஆதரவு வந்துசேர்ந்தது.
அதாவது பட்டன்களை அழுத்துவதற்கு பதிலாக, ஸ்க்ரீனை டச் செய்வதன் மூலம் ஜூமை சரிசெய்ய முடியும் என்பதால் இது இன்னும் எளிதானது. கேமராவிற்கான ஜூம் கண்ட்ரோல் பட்டன் ஆனது ரெக்கார்டிங்கிற்கு இடையூறு இல்லாமல் ஜூமிங் செய்வதை எளிதாக்குகிறது. இதன்மூலம் வாட்ஸ்அப் வழியாகவே புகைப்படம் மற்றும் வீடியோ கன்டென்ட்டை உருவாக்க நினைக்கும் பயனர்களுக்கு அதிக கட்டுப்பாடு வழங்குகிறது.
இதற்கு முன்னதாக காண்டாக்ட் லிஸ்ட்டில் யாரெல்லாம் சமீபத்தில் ஆன்லைனுக்கு வந்து சென்றனர் (Contacts Were Online Recently) என்கிற பட்டியலை வெளிப்படுத்தும் புதிய அம்சமும் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட்டது. அதாவது வாட்ஸ்அப் பிளாட்ஃபார்மில் மிகவும் சமீபத்தில் யார் எல்லாம் ஆக்டிவ் ஆக இருந்தார்கள் என்பதை நீங்கள் சரிபார்க்க விரும்பினால் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.
இதன்மூலம் யாருக்கு முதலில் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்பதையும் எளிமையாக தீர்மானிக்க முடியும். கடந்த மாதம், ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவின் (WhatsApp Android Beta) லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்த்தாஹ் பீட்டா டெஸ்டர்களுக்கு (Beta Tester) இந்த புதிய அம்சம் அணுக கிடைத்தது. இது விரைவில் இன்னும் அதிகமான பயனர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள பிரைவேட்லி டேக் காண்டாக்ஸ் அம்சத்தை பொறுத்தவரை, பெயர் குறிப்பிடுவது போலவே, இது ஸ்டேட்டஸ் அப்டேட்டில் தங்கள் காண்டாக்ட்ஸ்-ன் கீழ் உள்ள நபர்களை தனிப்பட்ட முறையில் டேக் செய்ய உதவும் ஒரு அம்சமாகும். இதுவும் பீட்டா டெஸ்டிங்கிற்கான ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே அணுக கிடைக்கிறது.
வாட்ஸ்அப்பில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போட்டோக்களை எடிட்டிங் செய்யும் அம்சத்தை பொறுத்தவரை, இது ஏஐ உதவுடன் போட்டோக்களின் பேக்கிரவுண்டை மாற்றுவது, மறுசீரமைப்புகளை செய்வது, இமேஜ் சைஸ்-ஐ எக்ஸ்பான்ட் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்வதன் மூலம் போட்டோக்களின் லுக்கை மேம்படுத்தும் ஒரு அம்சமாகும்.


Click it and Unblock the Notifications








