Home
News

Tecno Spark 9 அறிமுகம்: விலையை சொன்னா.. பல Redmi, Realme யூசர்கள் கதறுவாங்க!

சமீபத்தில் தான் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் ஒரு லேட்டஸ்ட் Redmi மாடலையோ அல்லது சற்றே பழைய Realme ஸ்மார்ட்போனையோ நீங்கள் வாங்கினீர்களா?

ஆம் என்றால் "ஐ யம் சாரி"! ஏனென்றால், இன்று (ஜூலை 18) இந்தியாவில் அறிமுகமான Tecno Spark 9 ஸ்மார்ட்போனின் விலையும், அம்சங்களும், உங்களில் சிலரை "அடச்சே! கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாமோ!" என்று யோசிக்க வைக்கலாம்.

காத்திருந்தவர்களுக்கு குட் நியூஸ்!

காத்திருந்தவர்களுக்கு குட் நியூஸ்!

அதுவே ரூ.10,000-ஐ கையில் வைத்துக்கொண்டு "ஒரு நல்ல போன் வரட்டும்; வாங்கலாம்!" என்று காத்திருப்பவரா நீங்கள்? ஆம் எனில், அதே டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன் - உங்களுக்கான ஒரு குட் நியூஸாக இருக்கலாம்!

அப்படி என்ன விலைக்கு தான் Tecno Spark 9 அறிமுகம் ஆகியுள்ளது? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல், எந்த இகாமர்ஸ் வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வரும்? என்கிற விவரங்கள் இதோ!

11ஜிபி ரேம்: இந்த விலையில் இதுவே முதல் முறை!

11ஜிபி ரேம்: இந்த விலையில் இதுவே முதல் முறை!

டெக்னோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக டெக்னோ ஸ்பார்க் 9 இன்று (ஜூலை 18) இந்தியாவில் அறிமுகமானது.

டெக்னோ நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் ரூ.9.499 என்கிற விலையில் 11ஜிபி Extended RAM உடன் வாங்க கிடைக்கும் முதல் ஸ்மார்ட்போன் இதுவே ஆகும்.

இது 6ஜிபி அளவிலான "வழக்கமான" ரேம் + 5ஜிபி அளவிலான விர்ச்சுவல் ரேம் என மொத்தம் 11ஜிபி அளவிலான ரேம்-ஐ வழங்குகிறது. புரியாதோர்களுக்கு விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) என்றால் ஸ்மார்ட்போனின் இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து கடனாக வாங்கப்படும் ரேம் ஆகும்.

இதில் RAM மட்டும் தான் கெத்து-ஆ? இல்லவே இல்ல!

இதில் RAM மட்டும் தான் கெத்து-ஆ? இல்லவே இல்ல!

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 SoC உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் HD+ ரெசல்யூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6 இன்ச் டிஸ்ப்ளேவையும் பேக் செய்கிறது.

128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்கும் இந்த Tecno Spark 9 ஆனது 13-மெகாபிக்சல் AI டூயல் ரியர் கேமரா செட்டப்பையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) கொண்டு இயங்குகிறது.

Tecno Spark 9 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை:

Tecno Spark 9 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை:

முன்னரே குறிப்பிட்டபடி இது ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன் ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கும்.

விற்பனையை பொறுத்தவரை, வருகிற ஜூலை 23 ஆம் தேதி தொடங்கும் அமேசான் பிரைம் டே சேல் 2022 இன் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட்போன் தன் முதல் விற்பனையை சந்திக்கும்.

இது இன்பினிட்டி பிளாக் மற்றும் ஸ்கை மிரர் என்கிற இரண்டு கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

டிஸ்பிளே, ப்ராசஸர் எல்லாம் எப்படி?

டிஸ்பிளே, ப்ராசஸர் எல்லாம் எப்படி?

முன்னரே குறிப்பிட்டபடி டெக்னோ ஸ்பார்க் 9 ஆனது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டி+ ரெசல்யூஷன் உடனான 6.6-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G37 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 5ஜிபி எக்ஸ்டென்டட் விர்ச்சுவல் ரேம் என மொத்தம் 11ஜிபி அளவிலான ரேம்-ஐ வழங்கும் திறனை பெற்றுள்ளது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 128ஜிபி-ஐ வழங்குகிறது.

கேமரா, பேட்டரி எல்லாம் எப்படி?

கேமரா, பேட்டரி எல்லாம் எப்படி?

கேமராக்களை பொறுத்தவரை, இத பட்ஜெட் விலை டெக்னோ ஸ்மார்ட்போன் ஆனது சதுர வடிவிலான கேமரா மாட்யூலில் 13 மெகாபிக்சல் AI டூயல் ரியர் கேமராக்களை பேக் செய்கிறது. இது LED ஃபிளாஷ் உடன் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, இது வாட்டர் டிராப் ஸ்டைல் ​​நாட்ச் வடிவமைப்பிற்குள் அதன் செல்பீ கேமராவை உட்பொதித்துள்ளது. இதன் கேமரா மாட்யூலில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் அடக்கம்!

கடைசியாக Tecno Spark 9 ஆனது 5,000mAh பேட்டரியை மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இது DTS எனேபிள்டு ஸ்பீக்கர் சிஸ்டம் உடனும் வருகிறது

ஜூலை 23 வாங்க கிடைக்கும் ஒரே ஸ்மார்ட்போன் இதுவல்ல!

ஜூலை 23 வாங்க கிடைக்கும் ஒரே ஸ்மார்ட்போன் இதுவல்ல!

முன்பே குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 23 ஆம் தேதியன்று தொடங்கும் Amazon Prime Day Sale 2022 இன் போது வாங்க கிடைக்கும்.

ஆனால் குறிப்பிட்ட நாளில் வாங்க கிடைக்கும் ஒரே ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் 9 மாடல் மட்டுமல்ல. அதே நாளில் வேறு சில புதிய ஸ்மார்ட்போன்களும் கூட தத்தம் முதல் விற்பனையை சந்திக்க உள்ளது.

அது என்னென்ன ஸ்மார்ட்போன்கள்?

அது என்னென்ன ஸ்மார்ட்போன்கள்?

01. சாம்சங் கேலக்சி எம்13 (Samsung Galaxy M13) - ரூ.11,999-க்கு வாங்க கிடைக்கும்.

02. சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி (Samsung Galaxy M13 5G) - ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கும்.

03. டெக்னோ கேமன் 19 நியோ (Tecno Camon 19 Neo) - ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.

இந்த பட்டியல் இன்னும் முடியவில்லை!

இந்த பட்டியல் இன்னும் முடியவில்லை!

மேற்கண்ட 3 ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து ஐக்யூ நியோ 6 (IQoo Neo 6) ஸ்மார்ட்போனின் புதிய கலர் ஆப்ஷனும் குறிப்பிட்ட நாளில் விற்பனைக்கு வரவுள்ளது.

மேலும் வருகிற ஜூலை 20 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ரெட்மி கே50ஐ 5ஜி (Redmi K50i 5G) ஸ்மார்ட்போனும் கூட ஜூலை 23 ஆம் தேதி அமேசான் வழியாக வாங்க கிடைக்கும்.

Photo Courtesy: Amazon India

Best Mobiles in India

English summary
New Budget Phone Under Rs 10000 Tecno Spark 9 Launched in India Check Price Specifications Sale Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X