Home
News

புது BSNL சேவை.. இனி மொபைல் இன்டர்நெட்.. சகலமும் அவங்க கையில.. மூலை முடுக்கிலும் முடிச்சு விட்டாச்சு!

மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் - பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited - BSNL) நிறுவனமானது, இந்தியாவில் ஒட்டுமொத்த மொபைல் கஸ்டமர்களையும் தட்டித் தூக்கும்படி புது சேவையை தொடங்கி இருக்கிறது. மொபைல் இன்டர்நெட் சேவையில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களை இனிமேல் தூக்கி சாப்பிட இருக்கிறது. நாட்டின் மூலை முடுக்கிலும் கிடைக்க இருக்கும் இந்த புது சேவையின் விவரங்கள் இதோ.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், மற்ற டெலிகாம் கஸ்டமர்களும் மூக்கில் விரல்வைக்கும்படி பிஎஸ்என்எல் 4ஜி சேவை (BSNL 4G Service), பிஎஸ்என்எல் லைவ் டிவி சேவை (New BSNL Live TV Service) இருக்கிறது. இப்போது, கூடுதலாக புது பிஎஸ்என்என் வை-பை ரோமிங் சேவை (New BSNL Wi-Fi Roaming Service) களமிறங்கி இருக்கிறது.

புது BSNL சேவை.. இனி மொபைல் இன்டர்நெட்.. சகலமும் அவங்க கையில.. எப்படி?

இந்த வை-பை சேவையானது, மற்ற டெலிகாம் நிறுவனங்கள் கொடுக்கும் சேவையை போலத்தானே என்று அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால், இந்த சேவை ஃபைபர்-டு-தி-ஹோம் - எப்டிடிஎச் (Fiber to the Home - FTTH) கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது. மற்ற நிறுவனங்கள் வழங்காத தொலைத்தூரப் பகுதிகளிலும் இந்த சேவை கிடைக்கும்.

அதாவது, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கஸ்டமர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே ஃபைபர் சேவையை கொடுக்கின்றன. ஆனால், பிஎஸ்என்என் அப்படி கிடையாது. மலை கிராமங்கள், தொலைத்தூரப் பகுதிகளிலும் ஃபைபர் சேவையை வழங்கி வருகிறது. இருப்பினும், அதில் வை-பை சேவையை வழங்காமல் இருந்து வந்தது.

இதனால், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே ஃபைபர் சேவையை (Fiber Service) பயன்படுத்த முடிந்தது. அதிலும், மொபைலில் அந்த சேவையை பயன்படுத்துவதும் சிரமாக இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலைமை தலைகீழாக மாறப்போகிறது. இனிமேல் பிஎஸ்என்எல் எப்டிடிஎச் கஸ்டமர்களுக்கு வை-பை ரோமிங் சேவை வழங்கப்பட இருக்கிறது.

இதன் மூலம் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் எளிதாக வை-பை டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இது ஃபைபர் சேவைகளை பல மடங்கு உயர்த்தும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆகவே, வரும் நாட்களில் வை-பை ரோமிங் சேவை மூலம் கோடிக்கணக்கான கஸ்டமர்கள் அதிவேக இன்டர்நெட்டை பயன்படுத்த போகின்றனர்.

இதே பிஎஸ்என்எல் ஃபைபர் கஸ்டமர்களுக்கு இலவச லைவ் டிவி சேவையும் வழங்கப்படுகிறது. இந்த சேவையானது இன்டர்நெட் இல்லாமலும் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் என்பதால், மற்ற நிறுவனங்கள் கனவிலும் நினைக்காதபடி இது இருக்கிறது. அதாவது, ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் பிராட்பேண்ட் சேவையில் டிவி சேனல்களையும் கொடுக்கின்றன.

ஆனால், இந்த டிவி சேனல்களை இன்டர்நெட் இருந்தால் மட்டுமே பார்த்து கொள்ள முடியும். முற்றிலும் இன்டர்நெட் சேவை மூலமே நேரலையில் டிவி சேனல்கள் கிடைக்கின்றன. ஆகவே, இன்டர்நெட் இல்லையென்றால், அந்த டிவி சேனல்களை பார்த்து கொள்ள முடியாது. ஆனால், பிஎஸ்என்எல்லில் அப்படி கிடையாது. இதற்கும் இன்டர்நெட்டுக்கும் தொடர்பில்லை.

பிஎஸ்என்எல் ஃபைபர் கஸ்டமர்கள் வழக்கமாக பயன்படுத்தும் பிராட்பேண்ட் டேட்டா முடிந்த பிறகும் டிவி சேனல்களின் சேவை தொடர்ந்து கிடைக்கும். இதற்கு கூடுதல் கட்டணங்கள் கிடையாது. இந்த டிவி சேனல்கள் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. இந்த லைவ் டிவி சேவையின் சோதனை ஓட்டம் தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசத்தில் தொடங்கிவிட்டது.

ஆகவே, இந்த மாநிலங்களில் இருக்கும் பிஎஸ்என்எல் ஃபைபர் கஸ்டமர்களுக்கு முதலில் லைவ் டிவி சேவைகள் கிடைக்க இருக்கிறது. இந்த மாநிலங்களின் கஸ்டமர்களுக்கும் அவர்களது ஃபைபர் திட்டங்களின் விலையிலேயே இந்த சேவைகள் கூடுதலாக வழங்கப்படுகிறது. அனைத்து கஸ்டமர்களுக்கும் கிடைக்காது, குறிப்பிட்ட கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
New BSNL Wi-Fi Roaming Service For Fiber Customer Mobile Users Access Broadband Anywhere in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X