வீட்டு வாசலுக்கு வரும் BSNL SIM கார்டு.. இந்த ஆப் வழியாக ஆர்டர் செஞ்சா போதும்.. ஆனால் ஒரு டிவிஸ்டு!
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது சிம் கார்டு வழங்குதல் (SIM Card Distribution) தொடர்பான தனது சேவையில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை டெலிவரி (Home Delivery) செய்யும் புதிய வசதியை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த வசதியின்கீழ் ஒரு புதிய பிஎஸ்என்எல் சிம் கார்ட்டை ஆர்டர் செய்வது எப்படி? இந்த வசதி யாருக்கெல்லாம் கிடைக்கும்? உண்மையிலேயே இந்த வசதி பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நிறைய கஸ்டமர்களை சேர்க்க உதவுமா? இதோ விவரங்கள்:
வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டுகளை வழங்குவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் ப்ரூன் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதுவொன்றும் முற்றிலும் புதிய சேவையோ அல்லது வசதியோ அல்ல. தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள், தங்கள் வாடிக்கையாளர்களான சிம் கார்டுகளை ஹோம் டெலிவரி செய்யும் வசதியை ஏற்கனவே வழங்கி வருகின்றன தான். இருப்புனும் பிஎஸ்என்எல் நிறுவனமும் இதை தொடங்கியுள்ளது நல்ல விஷயம் தான்.

பிஎஸ்என்எல்-ன் இந்த சிம் கார்டு ஹோம் டெலிவரி வசதியானது தற்போது ப்ரீபெய்டு இணைப்புகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. உங்களுக்காக ஒரு சிம் கார்ட்டை ஆர்டர் செய்யலாம் பின்வரும் இணைய பக்கத்திற்கு செல்லலாம் - https://prune.co.in/mno-bsnl/ அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ப்ரூன் ஆப்பை டவுன்லோட் செய்து, அதன் வழியாக பிஎஸ்என்எல் சிம் கார்ட்டை ஆர்டர் செய்யலாம்.
இதற்காக நீங்கள் உங்களுடைய தொலைபேசி எண் மற்றும் டெலிவரி முகவரி போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களை உள்ளிட வேண்டி இருக்கும். அதன் பிறகு, உங்கள் வீட்டிற்கு புதிய பிஎஸ்என்எல் சிம் டெலிவரி செய்யப்படும். இருப்பினும் பிஎஸ்என்எல் இந்த வசதி நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படவில்லை.
தற்போது வரையிலாக குருகிராம் அல்லது காஜியாபாத்தில் (Gurugram and Ghaziabad) இருப்பவர்களால் மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து சிம் கார்ட்டை ஆர்டர் செய்ய முடியும். இந்த வசதி நாடு முழுவதும் கொண்டுவரப்படுமா அல்லது வேறு எங்கெல்லாம் விரிவாக்கப்படும் என்கிற எந்த விவரங்களும் இல்லை!
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த சிம் கார்டு ஹோம் டெலிவரி வசதியானது புதிய வாடிக்கையாளர்களை உதவுமா என்று கேட்டால்.. கடந்த பல ஆண்டுகளாகவே ஒவ்வொரு காலாண்டிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை இழந்து கொண்டே தான் வருகிறது. இதற்கு காரணம் - இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிம்களை வழங்காததால் அல்ல, தரம் தாழ்ந்த நெட்வொர்க் சேவைகளை வழங்குவதால் தான்.
பிஎஸ்என்எல் நிறுவனமானது ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் 4ஜி நெட்வொர்க்குகளை அறிமுகம் செய்ய வேண்டும். அதை தொடர்ந்து முடிந்த வேகத்தில் 5ஜி சேவையையும் அறிமுகம் செய்யவேண்டும்.
அதன் பிறகு தான், வீட்டு வாசலுக்கு வந்து சிம் கார்டுகளை டெலிவரி செய்வது மற்றும் பிற வசதிகள் எல்லாம்.. புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும்; அது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டுவரும். அது வரையிலாக பிஎஸ்என்எல் முன்னெடுக்கும் எந்தவொரு வசதியும் சலுகையும் 100% எடுபடாது என்பதே கசப்பான உண்மை!
பிஎஸ்என்எல் நிறுவனமானது 3,500-க்கும் மேற்பட்ட 4ஜி டவர்களை நிறுவியுள்ளது. இந்த எண்ணிக்கை 20,000 டவர்களை எட்டியவுடன் இந்தியா முழுவதும் முழு அளவிலான வணிக ரீதியிலான 4ஜி அறிமுகம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட 4ஜி நெட்வொர்க்கில் ஏற்பட்ட தொடர்ச்சியான சிக்கல்களின் விளைவாக பான்-இந்தியா அடிப்படையிலான 4ஜி வெளியீடு தாமதமாகி கொண்டே போகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆண்டின் இறுதிக்குள் பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகமாகி விடும் என்று நம்பப்பட்டது. ஆனால் இது அடுத்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் தான் நடக்கும் என்பது போல் தெரிகிறது. இதற்கு நேர்மாறாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது அதன் 5ஜி நெட்வொர்க் விரிவாக்கத்தை ஒரு வருடத்தில் "கிட்டத்தட்ட" முடித்துவிட்டது; அடுத்த சில வாரங்களில் விலை உயர்வையும் அறிவிக்கவுள்ளது போல் தெரிகிறது!


Click it and Unblock the Notifications








