BSNL புதிய OFFER.. அடுத்த 6 மாதத்திற்கு.. மாதந்தோறும் ரூ.1000 டிஸ்கவுண்ட்.. எந்த திட்டத்தில்?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஆனது 2025 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாத்தின் ஒரு பகுதியாக ரூ.1 க்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் 4ஜி பிளானை அறிமுகம் செய்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு சுதந்திர தின சிறப்பு சலுகையை அறிவித்து உள்ளது.
நீங்கள் ஒரு அதிவேக பிராட்பேண்ட் கனெக்ஷனை பெற யோசித்து கொண்டிருந்தால்.. பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திடம் இருந்து அதை பெற இதுவே சரியான நேரமாகும். ஏனென்றால் அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் 1 ஜிபிபிஎஸ் ஸ்பீட் திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு ரூ.6,000 தள்ளுபடியை வழங்குகிறது.

ரூ.1 க்கு கிடைக்கும் 4ஜி பிளானை போலவே இதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைக்கும் சலுகை ஆகும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த ரூ.6000 தள்ளுபடி ஆனது 2025 செப்டம்பர் 13 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். உண்மையில் இது போதுமான அளவு நல்ல காலம் ஆகும். சரி வாருங்கள் தள்ளுபடி குறித்த விவரங்களை பார்ப்போம்.
பிஎஸ்என்எல் 1 ஜிபிபிஎஸ் பிளான் மீதான தள்ளுபடி: பிஎஸ்என்எல்-ன் 1 ஜிபிபிஎஸ் பிளான் ஆனது ஃபைபர் ரூபி ஓடிடி (Fiber Ruby OTT) பிளான் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வழக்கமான செலவு ரூ.4,799 ஆகும். ஆனால் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை கிடைக்கும் சலுகை காலத்தின் கீழ், பயனர்கள் இந்த திட்டத்தை முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 தள்ளுபடியுடன் பெறலாம்.
அதாவது இந்த திட்டம் முதல் ஆறு மாதங்களுக்கு ரூ.4,799 க்கு பதிலாக ரூ.1000 தள்ளுபடியை பெற்று ரூ.3,799 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இப்படியாக உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 தள்ளுபடி என மொத்தம் 6 மாதங்களுக்கு ரூ.6000 தள்ளுபடி கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ஃபைபர் ரூபி ஓடிடி பிளானின் கீழ் கிடைக்கும் ஓடிடி நன்மைகள்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சூப்பர் பிளான், லயன்ஸ்கேட், ஷீமாரூமீ, ஹங்காமா மியூசிக் மற்றும் ஹங்காமா ப்ளே எஸ்விஓடி, சோனி லைவ் பிரீமியம், ஜீ5 பிரீமியம், வூட் செலக்ட், யூப்டிவி லைவ் மற்றும் பல.
பிஎஸ்என்எல் 1 ஜிபிபிஎஸ் பிளான் மீதான இந்த ரூ.6000 தள்ளுபடி ஆனது நாட்டில் எல்லா இடங்களிலும் கிடைக்காமல் போகலாம். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களிலும் மட்டுமே கிடைக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த சலுகையில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், கூடுதல் விவரங்களுக்கு பிஎஸ்என்எல்-ன் கஸ்டமர் கேர்-ஐ தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு செல்லலாம்.
பிஎஸ்என்எல் ரூ.1 ஆசாதி கா பிளான் (BSNL Azadi Ka Plan at Rs.1) விவங்கள்: இது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதிய பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சிறப்பு ரீசார்ஜ் திட்டம் ஆகும். வெறும் ரூ.1 என்கிற விலையின் கீழ் கிடைக்கும் இந்த திட்டம், தினமும் 2ஜிபி டேட்டா (Daily 2GB Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் (Daily 100 SMS) ஆகிய நன்மைகளை வழங்குகிறது.
இது அனைத்தும் 30 நாட்கள் செல்லுபடியாகும் (30 Days Validity) மற்றும் உங்களுக்கு இலவச பிஎஸ்என்எல் சிம் கார்டும் (Free BSNL SIM Card) கிடைக்கும். இந்த சலுகை 2025 ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். ஆர்வமுள்ள பயனர்கள் இந்த சலுகையை பெற தங்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது சில்லறை விற்பனையாளரை அணுகலாம்.


Click it and Unblock the Notifications








