Home
News

Jio, Airtel-ஐ வச்சி செய்யும் BSNL.. சரியான நேரத்தில் இன்னொரு தரமான ஆபர்! 8 திட்டங்களில் 1-ஐ ரீசார்ஜ் செய்தால்?

தற்போதைக்கு பிஎஸ்என்எல் (BSNL) தான் நாட்டிலேயே மிகவும் மலிவான விலைக்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடாபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற அனைத்து தனியார் டெலிகாம் நிறுவனங்களும் தத்தம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகளை உயர்த்தி விட்டன. இதன் விளைவாக, பட்ஜெட் வாசிகள் பலரும் பிஎஸ்என்எல்-க்கு 'ஜம்ப்' அடித்து வருகின்றன. இந்நிலைபாட்டில் மேலும் பல புதிய பயனர்களை தன்வசம் ஈர்க்கும் நோக்கத்தின் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் 8 திட்டங்கள் மீது ஸ்பெஷல் ஆபர் (Special Offer) ஒன்றை அறிவித்துள்ளது.

அதென்ன ஆபர்? பிஎஸ்என்எல் நிறுவனமானது எஸ்டிவி (STV) என்று சுருக்கமாக அழைக்கப்படும் அதன் ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்களை (Special tariff vouchers) ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள ரிவார்ட்ஸ் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் வழங்கும் இந்த ரிவார்ட்களுக்கு தகுதிபெற பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்டு மொபைல் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 எஸ்டிவி-களில் ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

BSNL: சரியான நேரத்தில் இன்னொரு தரமான ஆபர்!

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள பதிவின்படி, குறிப்பிட்ட 8 எஸ்டிவிக்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுகள் கிடைக்கும். இந்த வெகுமதி ரிஜினல் ம்யூசிக் ஆப் ஆன ஸிங்-ஐ (Zing) பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்

இந்த பிஎஸ்என்எல் ஸிங் ஆபர் (BSNL Zing Offer) ஆனது எந்தெந்த எஸ்டிவி-க்களின் கீழ் கிடைக்கும்? ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெகுமதிகளை வழங்கும் எஸ்டிவிக்கள் ரூ.118, ரூ.153, ரூ.199, ரூ.347, ரூ.599, ரூ.997, ரூ.1999 மற்றும் ரூ.2399 ஆகும். இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்த பிறகு, வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில்ஸிங் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் வெகுமதிக்கு தகுதி பெற்றவுடன், நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் பிஎஸ்என்எல் வழங்கும் வெகுமதியை பெறுவீர்கள்.

இது புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும், செயலற்ற வாடிக்கையாளர்களை ரீசார்ஜ் செய்ய தூண்டுவதற்காகவும், பிஎஸ்என்எல் வழங்கும் விளம்பர சலுகையாகும். ஒருவேளை நீங்களொரு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் இல்லை என்றால்.. இந்நிறுவனம் எந்த செலவும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக புதிய சிம் கார்டுகளை வழங்குகிறது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

4ஜி சிம் கார்டுகளை இலவசமாக வாங்கி மேற்கண்ட 8 வவுச்சர்களில் ஏதேனும் ஒன்றை ரீசார்ஜ் செய்து இந்த ஸ்பெஷல் ஆஃபருக்கு தகுதிபெறலாம். பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பான் இந்தியா அடிப்படையில் வெளியிடும் பணிகளில் ஈடுபட்டுள்ளது, மேலும் இந்நிறுவனம் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 1 லட்சம் 4ஜி தளங்கள் என்ற இலக்கை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

8 எஸ்டிவி திட்டங்கள் வழியாக ரூ.1 லட்சம் மதிப்பிலான ரிவார்ட்ஸ் என்கிற ஆபருக்கு முன்பாக பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் ஃபைபர் பேஸிக் திட்டத்தின் மீது வரையறுக்கப்பட்ட கால சலுகை ஒன்றையும் அறிவித்திருந்தது. இந்த புதிய சலுகையின் கீழ், சந்தாதாரர்கள் மாதத்திற்கு வெறும் ரூ.399 க்கு ஃபைபர் பேஸிக் திட்டத்தை பெறலாம். இந்த திட்டத்தின் வழக்கமான விலை ரூ.499 என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரூ.399-ன் நன்மைகளை பொறுத்தவரை, இதன் கீழ் 60எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் 3300ஜிபி டேட்டா கிடைக்கும். டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் 4எம்பிபிஎஸ் என்கிற ஃபேர் யூசேஜ் பாலிசி (FUP) ஸ்பீட் கிடைக்கும். இதுதவிர்த்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். ரூ499-ன் மேல் ரூ.100 தள்ளுபடி மட்டுமின்றி, பிஎஸ்என்எல்-ன் இந்த மான்சூன் டபுள் தமாகா ஆபரின் கீழ் ஃபைபர் பேஸிக் பிளான் ஆனது முதல் மாதத்தில் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது!

More from GizBot

Best Mobiles in India

English summary
New BSNL Offer Recharge these 8 STV Plans Download Zing App Get Rs 1 Lakh Worth Rewards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X