Home
News

Jio, Airtel கதை முடிந்தது! சரியான நேரத்துல தரமான OFFER-ஐ இறக்கிய BSNL.. ரூ.399 க்கு 3300GB அன்லிமிடெட் பிளான்!

இந்தியாவில் உள்ள முக்கிய டெலிகாம் ஆப்ரேட்டர்கள் (ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா) அனைத்துமே.. தத்தம் ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்களின் விலைகளை கடுமையாக உயர்த்தி உள்ள நிலைப்பாட்டில்.. அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஒரு தரமான வேலையை பார்த்து உள்ளது. ஏற்கனவே ஜியோ மற்றும் ஏர்டெல்லை பாய்காட் செய்துவிட்டு பிஎஸ்என்எல் சேவையில் இணையுங்கள் என்கிற பிரச்சாரம் சமூக ஊடங்களில் தொடங்கி உள்ள வேளையில்.. பிஎஸ்என்எல் செய்துள்ள இந்த வேலை உண்மையிலேயே பாராட்டுக்கு உரியது தான்!

பிஎஸ்என்எல் நிறுவனம் அப்படி என்ன செய்தது? போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலை உயர்வால் அவதிப்படும் இந்திய மக்களை தன்வசம் ஈர்க்கும் நோக்கத்தின் கீழ், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ஹை-ஸ்பீட் இண்டர்நெட் சேவையின் கீழ் மான்சூன் டபுள் தமாகா ஆபர் (Monsoon Double Bonanza Offer) என்கிற லிமிடெட்-டைம் ஆபர் (Limited-Time Offer) ஒன்றை அறிவித்துள்ளது.

Jio, Airtel கதை முடிந்தது! சரியான நேரத்துல தரமான OFFER-ஐ இறக்கிய BSNL!

பிஎஸ்என்எல்-ன் இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகை அதன் ஃபைபர் பேஸிக் திட்டத்தின் மீது கிடைக்கிறது. இந்த புதிய சலுகையின் கீழ், சந்தாதாரர்கள் இப்போது மாதத்திற்கு வெறும் ரூ.399 ஃபைபர் பேஸிக் திட்டத்தை பெறலாம். அறியாதோர்களுக்கு இந்த திட்டத்தின் வழக்கமான விலை ரூ.499 ஆகும். அதாவது இந்த திட்டம் ரூ.100 விலை குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிஎஸ்என்எல்-ன் இந்த மான்சூன் டபுள் தமாகா ஆபரின்கீழ் ஃபைபர் பேஸிக் பிளான் ஆனது முதல் மாதத்தில் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். இந்த சலுகை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பாரத் ஃபைபர் (FTTH) சேவையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தேவைகளுக்கு ஏற்ற அதிவேக இணைய இணைப்பை வழங்கும் சேவையாகும்.

தற்போதைய இண்டர்நெட் கனெக்ஷனை மாற்ற அல்லது அப்கிரேட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த லிமிடெட்-டைம் ஆபரை பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதால், விரைவாக செயல்படவும். இந்த சலுகை எப்போது முடிவடையும் என்கிற தேதி அல்லது காலம் பற்றி பிஎஸ்என்எல் எதையும் குறிப்பிடவில்லை

ஃபைபர் பேஸிக் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த சலுகையின் கீழ், பிஎஸ்என்எல் ஃபைபர் பேஸிக் திட்டத்தின் விலை முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.399 க்கு கிடைக்கும், அதன் பிறகு வழக்கமான விலையான ரூ.499 க்கு கிடைக்கும்.

நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டம் 3300ஜிபி டேட்டா வரையிலாக 60எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடை வழங்கும். அதன் பின்னர் 4எம்பிபிஎஸ் என்கிற ஃபேர் யூசேஜ் பாலிசி (FUP) ஸ்பீட் கிடைக்கும். இதுதவிர்த்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இந்த சலுகையை பெறுவது எப்படி? பிஎஸ்என்எல்-ன் இந்த மான்சூன் டபுள் தமாகா சலுகையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப் வழியாக 1800-4444 என்ற எண்ணுக்கு 'ஹாய்' என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம் இந்த சலுகையை பெறலாம். பிஎஸ்என்எல்-ன் இந்த நடவடிக்கை பிராட்பேண்ட் சந்தையில் அதிகரித்து வரும் போட்டியின் மத்தியில் வருகிறது, கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் இதுபோன்ற சந்தாதாரர்களை ஈர்க்கும் சலுகைகள் பிஎஸ்என்எல்-க்கு இன்னும் பலத்தை தரலாம்.

பார்தி ஏர்டெல் நிறுவனமும் கூட புதிய கஸ்டமர்களை ஈர்க்க தனது எக்ஸ்ட்ரீம் பைபர் சேவையின் கீழ் 2 வகையான இலவசங்களை வழங்குகிறது. ஒன்று - இலவச வைஃபை ரூட்டர் (Free Wi-Fi router); இரண்டாவது - இலவச இன்ஸ்டாலேஷன் (Free installation). இவ்விரு இலவசங்களையும் பெற வாடிக்கையாளர்கள் அரையாண்டு திட்டம் அல்லது வருடாந்திர திட்டத்தை (Semi-annual plan or Annual plan) தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

அப்போது தான் நிறுவனத்திடமிருந்து இலவச வைஃபை ரூட்டரை பெறுவதற்கும், இலவச நிறுவலுக்கும் தகுதியுடையவர்கள் ஆவீர்கள். மலிவு விலையில் மற்றும் உயர்தர இண்டர்நெட் அனுபவத்தை வழங்கும் பிராட்பேண்ட் கனெக்ஷனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஏர்டெல் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New BSNL Offer Monsoon Double Bonanza on Fiber Basic Plan How to Avail
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X