BSNL-ன் புது ஆபர்.. இந்தியா முழுவதும் உள்ள கஸ்டமர்களுக்கு இலவச டேட்டா.. எத்தனை GB? பெறுவது எப்படி?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தனது ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு (Prepaid Customers) ஒரு புதிய இலவச சலுகையை அறிவித்து உள்ளது. இதன் கீழ் இந்தியா முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 3ஜிபி அளவிலான போனஸ் டேட்டாவை (3GB Bonus Data), அதாவது இலவச டேட்டாவை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
பிஎஸ்என்எல் வழங்கும் 3ஜிபி போனஸ் டேட்டாவை பெறுவது எப்படி? இதுவொரு பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் (BSNL SelfCare app) வழியாக மட்டுமே கிடைக்கும் ஒரு பிரத்யேக ஆபர் ஆகும். பிஎஸ்என்எல் வழங்கும் இந்த 3ஜிபி போனஸ் டேட்டாவை பெற பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் வழியாக, ரூ.499 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

நீங்கள் மற்ற ஆப்கள் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் போர்ட்டல் மூலமாகவோ ரூ.499-ஐ ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு இந்த இலவச பலன் கிடைக்காது. ஒருவேளை உங்களிடம் பிஎஸ்என்எல் சிம் கார்டு உள்ளது, பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் இல்லை என்றால், இதை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் வழியாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
ரூ.499 ப்ரீபெய்ட் திட்டமானது - பல காலமாக - இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் ஒரு பழைய திட்டமாகும். ஆகையால் பிஎஸ்என்எல்-ல் இந்த போனஸ் டேட்டா ஆபர் ஆனது குறிப்பிட்ட சில டெலிகாம் வட்டங்களில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் எனென்னன் நன்மைகள் கிடைக்கும்? இது ட்ரூலி அன்லிமிட்ட் வாய்ஸ் கால் நன்மையுடன் வருகிறது. இதனுடன், பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் கேமியம் பிரீமியம் ஆகிவைகள் கிடைக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும்.
அதாவது, இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் இணைக்கப்பட்ட மொத்த டேட்டா நன்மை 150 ஜிபி ஆகும். மேலும், பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் வழியாக இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 3ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும், இதன் மூலம் ரூ.499-ன் கீழ் உங்களுக்கு வழங்கப்படும் மொத்த டேட்டாவானது 153 ஜிபி ஆக அதிகரிக்கும்.
இந்த போனஸ் டேட்டா ஆபரை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 2வது தீபாவளி சலுகை என்றே கூறலாம். ஏனென்றால் நவம்பர் 7 ஆம் தேதி வரை கிடைக்கும் தீபாவளி தள்ளுபடி சலுகை ஒன்று ஏற்கனவே அணுக கிடைக்கிறது. இந்த சலுகையின் கீழ் ரூ.1999 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.100 தள்ளுபடியுடன் ரூ.1899 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த விலை மாற்றம் பிஎஸ்என்எல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரதிபலிக்கிறது.
முன்னரே குறிப்பிடப்படி இது ஒரு வரையறுக்கப்பட்ட கால சலுகை ஆகும். அதாவது இது நவம்பர் 7 ஆம் தேதி வரை மட்டுமே அணுக கிடைக்கும். அதன் பின்னர் ரூ.1999 திட்டமானது ஆனது அதன் அசல் விலைக்கே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இந்த திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இது ஒரு வருடாந்திர திட்டமாகும்; அதாவது 365 நாட்களுக்கு சர்வீஸ் வேலிடிட்டியை வழங்கும்.
இதன்கீழ் மொத்தம் 600ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், கேம்கள் மற்றும் ம்யூசிக் ஆகிய நன்மைகள் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக இது பட்ஜெட் வாசிகளுக்கான சிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமாகும். அதிக செலவுஇல்லாமல், மிகவும் மலிவான விலைக்கு 1 ஆண்டு முழுவதும் சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்து இருக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இதுவொரு நல்ல தேர்வாக இருக்கும்!


Click it and Unblock the Notifications