புது TV சேவை.. இனி கேபிள் டிவி BSNL-க்கு மாறுது.. முதல் ஆட்டமே தமிழ்நாட்டுல.. JioTV-க்கு மேல இருக்கு திட்டம்!
தமிழ்நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த கேபிள் டிவி கஸ்டமர்களும் அப்படியே எப்டிடிஎச் சேவைக்கு (FTTH Service) மாறும்படி புது பிஎஸ்என்எல் லைவ் டிவி சேவை (New BSNL Live TV Service) களமிறங்கி இருக்கிறது. ஜியோ டிவிபிளஸ் ஆப் மூலம் இன்டர்நெட் இருந்தால் மட்டுமே டிவி சேனல்களை பார்க்க முடியும் என்றால், இந்த சேவையில் இன்டர்நெட் இல்லாமலேயே லைவ் டிவி சேனல்களை பார்க்க முடியும். இந்தியாவிலேயே முதல்முறையாக இப்படிப்பட்ட சேவை தமிழ்நாட்டில் வெளியாகிறது. இந்த பிஎஸ்என்எல் டிவி சேவை குறித்த முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மத்திய தொலைத்தொடர்பு துறையின் பிஎஸ்என்எல் நிறுவனம், புது அவதாரம் எடுத்ததுபோல இப்போது சேவைகளை கொடுக்க தொடங்கி இருக்கிறது. இன்டர்நெட் இல்லாமலேயே ஃபைபர்-டு-தி-ஹோம் -எப்டிடிஎச் (Fiber to the Home - FTTH) சேவை மூலம் லைவ் டிவி சேனல்களை வழங்க இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசத்தில் இந்த சேவைகள் முதலாவதாக கிடைக்க இருக்கிறது.

முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனமானது, ஜியோடிவிபிளஸ் (JioTV Plus) ஆப் மூலம் ஏற்கனவே லைவ் டிவி சேனல்களை வழங்கிவருகிறது. ஆனால், இதற்கு கஸ்டமர்களிடம் இன்டர்நெட் இருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த சேவை கிடைக்காது. ஆனால், இந்த பிஎஸ்என்எல் லைவ் டிவி சேவை மூலம் இன்டர்நெட் இல்லாமலும் டிவிகளை பார்க்காலம்.
அதாவது, பிஎஸ்என்எல் ஃபைபர்-டு-தி-ஹோம் சேவை பெற்றுவரும் கஸ்டமர்களுக்கு கூடுதலாக இந்த லைவ் டிவி சேவை வழங்கப்படுகிறது. ஆனால், ஃபைபர் மூலம் இன்டர்நெட் சேவை முடிந்துவிட்டாலும், கஸ்டமர்களுக்கு தொடர்ந்து லைவ் டிவி சேனல்களை சேவை கிடைக்கும். ஆகவே, இது ஜியோடிவி பிளஸ் சேவையை தூக்கி சாப்பிடும்படி இருக்கிறது.
ஏனென்றால், இன்டர்நெட் மூலம் டிவி சேனல்களை பார்க்கும்போது, ஸ்ட்ரீமிங் ஸ்பீடில் சிக்கல் இருக்கலாம். ஆனால், இந்த சேவையில் ஸ்பீடு குறைய வாய்ப்பே இல்லை. எந்தவித குறையும் இல்லாமல், லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ள முடியும். சொல்லப்போனால், இந்த சேவைகள் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே மோக்-டெஸ்ட் தொடங்கிவிட்டது.
தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசத்தில் இருக்கும் கஸ்டமர்களுக்கு ஏற்கனவே தொடங்கப்பட்ட மோக்-டெஸ்ட் முடிந்த பிறகு சேவைகள் வழங்கப்பட இருக்கிறது. இதை வணிக ரீதியாகவும் வழங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. ஆகவே, இப்போதைக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஃபைபர் சேவையை பெறும் கஸ்டமர்களுக்கு 500-க்கும் மேற்பட்ட இலவச டிவி சேனல்கள் கிடைக்கும்.
இந்த டிவி சேவையை பெறுவது எப்படி? தமிழ்நாட்டில் மோக்-டெஸ்ட் மட்டுமே தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, குறிப்பிட்ட கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த இலவச டிவி சேனல்களை சலுகை கிடைக்கும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எப்டிடிஎச் சேவை மூலம் ஃபைபர் டேட்டாவை பெற்று வரும் கஸ்டமர்கள் இந்த சேவையை கூடுதலாக பெற்று கொள்ளலாம்.
ஆனால், டிவி சேனல்களுக்கு எந்தவித கட்டணமும் இப்போது கிடையாது. இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த லைவ் டிவி சேவை மூலம் 500 பிரீமியம் சேனல்களை (500 Premium TV Channels) கஸ்டமர்கள் பார்த்து கொள்ள முடியும். இந்த சேவையை பெற வேண்டுமானால், பிஎஸ்என்எல் எப்டிடிஎச் கஸ்டமர்களிடம் ஆண்ட்ராய்டு 10 (Android 10) அல்லது அதற்குமேலான ஓஎஸ் கொண்டிருக்கும் ஸ்மார்ட் டிவியை இருக்க வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசத்துக்கு பிறகு இந்த பிஎஸ்என்எல் லைவ் டிவி (BSNL Live TV) சேவையானது, மற்ற மாநிலங்களிலும் தொடங்கப்பட இருக்கிறது. மத்திய அரசு இந்த சேவையை வழங்குவதால், இது அடிமட்ட விலைக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் இலவசமாகவும் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகும். இது கேபிள் டிவிக்கு மாற்றாகவும் வர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications