புதிய ப்ளாக்பெரி 10 இயங்குதள போட்டோக்கள் கசிவு

Posted By: Karthikeyan
புதிய ப்ளாக்பெரி 10 இயங்குதள போட்டோக்கள் கசிவு

கனடாவைச் சேர்ந்த மொபைல் நிறுவனமான ரிம் ஒரு புதிய இயங்கு தளத்தை விரைவில் களமிறக்க இருக்கிறது. ப்ளாக்பெரி 10 அபீசியல் என்று அழைக்கப்படும் இந்த இயங்கு தளத்தை எதிபார்த்து ரிம்மின் ரசிகர்கள் தவமிருந்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த புதிய இயங்கு தளத்தில் வரும் ப்ளாக்பெரி 10 என்ற புதிய ஸ்மார்ட்போனின் படங்கள் இணைய தளங்களில் கசிந்திருக்கின்றன. இந்த படங்கள் நைஜீரியா நாட்டில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஏனெனில் அங்குதான் ரிம் நிறுவனமும் அதன் கூட்டணி நிறுவனமான வயர்லெஸ் கேரியர்சும் இந்த போனை ஏற்கனவே பரிசோதனை செய்து வந்தனர்.

எனவே அப்போது எடுத்த போட்டோக்கள் தற்போது இணைய தளங்களில் கசிந்திருக்கிறது என்று தெரிகிறது. இந்த படங்களை டுவிட்டரில் வெளியிட்ட டெக்சுப்லெக்ஸே சேர்ந்தவர்கள் இந்த புதிய இயங்கு தளம் மிக வேகமாக அதாவது 8 வினாடிகளில் பூட்டிங் ஆவதாகத் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இதைத் தவிர்த்து வேறு எந்த தகவலும் இந்த புதிய ப்ளாக்பெரி இயங்கு தளத்தைப் பற்றி இன்னும் வரவில்லை. ஆனாலும் ப்ளாக்பெரி ரசிகர்கள் மத்தியில் இந்த படங்கள் ஒரு பெரிய அலையை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot