பூமிக்கு மிக அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கருந்துளை! இது மற்ற கருந்துளை போல் இல்லை ஸ்பெஷல்!

|

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கருந்துளையைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய கருந்துளை கிட்டத்தட்டப் பூமிக்கு அடுத்த பக்கத்தில்தான் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உண்மையில், இந்த கருந்துளை பூமியிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது, இதனால் பூமிக்கு ஏதும் ஆபத்து உள்ளதா? இந்த கருந்துளை மட்டும் ஏன் மற்ற கருந்துளை போல் இல்லாமல் ஸ்பெஷல் என்று பார்க்கலாம்.

பூமிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளை

பூமிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளை

விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளாள் இந்த புதிய கருந்துளை பூமிக்கு மிக அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் கருந்துளை என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் இந்த கருந்துளை பூமியிலிருந்து எவ்வளவு அருகில் உள்ளது என்று தெரியுமா?

இந்த கருந்துளை எவ்வளவு அருகில் உள்ளது?

இந்த கருந்துளை எவ்வளவு அருகில் உள்ளது?

இந்த புதிய கருந்துளை பூமியிலிருந்து சுமார் 1000 ஒளி ஆண்டுகள் தொலைவில் தான் அமைந்துள்ளது. விண்வெளி கணக்கின்படி 1000 ஒளி ஆண்டுகள் என்பது மிகவும் அருகாமையில் தான் உள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். பூமிக்கு மிக அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் கருந்துளை, இந்த கருந்துளை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் அறிவிப்பு: அடுத்த 2மாதத்திற்கு இந்த சேவை இலவசம்.!ஏர்டெல் அறிவிப்பு: அடுத்த 2மாதத்திற்கு இந்த சேவை இலவசம்.!

HR 6819 அமைப்பில் ஒளிந்திருந்த கருந்துளை

HR 6819 அமைப்பில் ஒளிந்திருந்த கருந்துளை

இந்த புதிய கருந்துளை, விண்மீன் கூட்டத்தின் கான்ஸ்டலேஷன் டெலெஸ்கோப்பியம் (Constellation Telescopium) என்ற பிரிவின் கீழ் உள்ள HR 6819 எனப்படும் அமைப்பில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய கருந்துளையை ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தில் (ESO) வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரட்டை நட்சத்திர அமைப்புகள் பற்றிய ஆய்வின் ஒரு பகுதியாக HR 6819 அமைப்பைக் குழு ஆராய்ச்சி செய்த போது இந்த கருந்துளையைக் கண்டுபிடித்துள்ளனர்.

எதிர்பாராத விதமாக மூன்றாம் தரப்பு கருந்துளை

எதிர்பாராத விதமாக மூன்றாம் தரப்பு கருந்துளை

HR 6819 அமைப்பில் இரட்டை நட்சத்திர அமைப்புகளைத் தேடித்திரிந்த விஞ்ஞானிகள் எதிர்பாராத விதமாக மூன்றாம் தரப்பு கருந்துளை அமைப்பைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். இந்த கருந்துளை அமைப்பில், ஒரு நட்சத்திரம் கருந்துளையைச் சுற்றி வருகிறது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். இந்த அமைப்பில் உள்ள மற்ற நட்சத்திரங்கள் ஒன்றோடு மற்றொன்று ஜோடியைச் சுற்றி வருகிறது என்பதையும் உறுதிசெய்துள்ளனர்.

கருந்துளைகளை எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்று தெரியுமா?

கருந்துளைகளை எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்று தெரியுமா?

பொதுவாக விஞ்ஞானிகள் கருந்துளைகளை எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்று தெரியுமா? கருந்துளையைச் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசியால் சூழப்பட்டிருக்கும், இந்த வாயு மற்றும் தூசிகளைக் கருந்துளை உள் இழுக்கும் பொழுது ​​அதிக சக்தி கொண்ட சமிக்ஞைகளை உமிழ்கின்றன, இந்த சக்திவாய்ந்த சமிக்கை உமிழ்வுகளை தொலைநோக்கிகள் கண்டறிந்து கருந்துளை உள்ள இடத்தை சுட்டிக்காட்டுகின்றன, இப்படி தான் பொதுவாகக் கருந்துளைகள் கண்டுபிடிக்கப்படுகிறது.

இன்று விற்பனைக்கு வரும் Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன்.! விலை இவ்வளவு தான்.!இன்று விற்பனைக்கு வரும் Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன்.! விலை இவ்வளவு தான்.!

மிகவும் தனித்துவமான கருந்துளை

மிகவும் தனித்துவமான கருந்துளை

பொதுவாகக் கண்டுபிடிக்கப்படும் கருந்துளைகளைப் போன்று இந்த கருந்துளை இல்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த கருந்துளை அப்படிக் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல, இது மிகவும் தனித்துவமான கருந்துளை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளார். HR 6819 அமைப்பில் கண்டறியப்பட்ட இந்த கருந்துளை மற்ற கருந்துளைகளைப் போல் சமிக்கை உமிழ்வுகளை வெளிப்படுத்தாமல், தன்னை மறைக்கப்பட்ட ஒரு கருந்துளையாக மாற்றி அந்த அமைப்பில் மறைந்து இருந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முழுவதுமாக கருப்பு நிறத்தில் தோற்றம் அளிக்க இதுதான் காரணம்

முழுவதுமாக கருப்பு நிறத்தில் தோற்றம் அளிக்க இதுதான் காரணம்

இந்த கருந்துளை அவற்றைச் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசிகள் அடங்கிய உடனடி சூழலுடன் எந்தவித வன்முறையில் ஈடுபடாத முதல் நட்சத்திர-வெகுஜன கருந்துளைகளில் இது ஒன்றாகும் என்று ஈ.எஸ்.ஓ கூறுகிறது, இதனால் இந்த கருந்துளை உண்மையில் முழுவதுமாக கருப்பு நிறத்தில் தோற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார். விஞ்ஞானிகள் இந்த குறிப்பிட்ட கருந்துளை கண்டுபிடிப்பு, உண்மையில் இரண்டாவது அமைப்பை உறுதிப்படுத்த வழிவகுக்கும் என்று நம்புகிறார்கள்.

சூரியனை விட 4 மடங்கு வெகுஜனத்தைக் கொண்ட பொருள்

சூரியனை விட 4 மடங்கு வெகுஜனத்தைக் கொண்ட பொருள்

தற்பொழுது, இந்த கருந்துளையின் இருப்பை மட்டுமே காண முடிந்துள்ளது, இதன் வெகுஜனத்தின் கணக்கீடுகள் அமைப்பின் உள் ஜோடியில் உள்ள நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையைப் படிப்பதன் மூலம் மட்டுமே கணக்கு செய்ய முடியும். சூரியனை விட 4 மடங்கு வெகுஜனத்தைக் கொண்ட ஒரு கண்ணுக்குத் தெரியாத பொருள் கருந்துளையாக மட்டுமே இருக்க முடியும் என்று ஆய்வுக்குத் தலைமை நிர்வாகி ESO விஞ்ஞானி தாமஸ் ரிவினியஸ் கூறியுள்ளார்.

ஒரு மாதத்திற்கு 10,000 ஜிபி டேட்டா: ஜியோ அதிரடி அறிவிப்பு., விலை என்ன தெரியுமா?ஒரு மாதத்திற்கு 10,000 ஜிபி டேட்டா: ஜியோ அதிரடி அறிவிப்பு., விலை என்ன தெரியுமா?

L-1 அமைப்பில் கருந்துளை இருக்கா வாய்ப்பு

L-1 அமைப்பில் கருந்துளை இருக்கா வாய்ப்பு

இதேபோல், பூமியிலிருந்து அடுத்து நெருக்கமாக இருக்கும் L-1 என்று அழைக்கப்படும் மற்றொரு அமைப்பிலும் இதுபோன்ற கருந்துளைகள் மூன்று மடங்கு பெரியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் உறுதியாகக் கூற எங்களுக்குக் கூடுதல் ஆய்வுகள் தேவை" என்று ESO இன் முதுகலை ஆசிரியரும், தாளின் இணை ஆசிரியருமான மரியான் ஹெய்டா கூறுகிறார்.

 பல சாத்தியமான கருந்துளைகளைக் கண்டுபிடிக்க வாய்ப்பு

பல சாத்தியமான கருந்துளைகளைக் கண்டுபிடிக்க வாய்ப்பு

L-1 அமைப்பு பூமியிலிருந்து சற்று தொலைவில் தான் உள்ளது, ஆனால் வானியல் அடிப்படையில் இந்த சற்று தொலைவு ஒளி ஆண்டுகள் உண்மையில் இன்னும் நெருக்கமாகத் தான் உள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த அமைப்புகளில் இன்னும் பல சாத்தியமான கருந்துளைகளைக் கண்டுபிடித்து ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். இதன் மூலம், புதிய நட்சத்திரங்கள் பற்றி அறிய வழிவகுத்து, அவை எவ்வாறு உருவாகின என்பது குறித்து சில புரிதல்களை விளக்கக்கூடும் என்ற நம்புகின்றனர்.

Newd Source:bbc.com

Best Mobiles in India

English summary
New Black Hole Has Been Discovered Almost Near To Earth : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X