Home
News

போச்சு.. புது ரூபத்தில் ChatGPT.. இனி சுந்தர் பிச்சையே நினைச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது!

சாட்ஜிபிடி-யால் கூகுள் போன்ற சேர்ச் எஞ்சினை ஒன்றுமே செய்ய முடியாது என்று முட்டுக்கொடுத்த எல்லோரும், வாயடைத்து போகும்படியான ஒரு புதிய ரூபத்தை எடுத்துள்ளது சாட் ஜிபிடி. மைக்ரோசாப்ட்டின் சாட்ஜிபிடி (ChatGPT), கூகுள் (Google) நிறுவனத்தின் அஸ்திவாரத்தை ஆட்டி பார்க்கிறது என்றாலும் கூட மிகையாகாது!

ஏனென்றால், மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் சாட்ஜிபிடி மூலம் இயங்கும் புதிய பிங் வெர்ஷனை (New Bing Version Powered by ChatGPT) அறிமுகம் செய்துள்ளது. அறியாதோர்களுக்கு பிங் என்பது மைக்ரோசாப்ட்டிற்கு சொந்தமான ஒரு சேர்ச் எஞ்சின் (Search Engine) ஆகும்!

Bing சேர்ச் உடன் இணைந்த ChatGPT.. பயன்படுத்துவது எப்படி?

Bing Search - நேற்றுவரை மாணிக்கம்,, இன்று முதல் பாட்ஷா!

பெரிய அளவிலான பயனர்களால் பயன்படுத்தப்படாத மைக்ரோசாப்ட்டின் பிங் சேர்ச் எஞ்சின், தற்போது சாட்ஜிபிடி-ஐ இயக்கும் அதே ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) தொழில்நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனால் இயக்கப்படுகிறது.

இதன் மூலம் பின் சேர்ச் பேஜ்ஜிற்கு கூட்டம் கூடுமென்றும், கூகுள் சேர்ச் பேஜ்ஜிற்கு செல்லும் பயனர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இனி நினைச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது!

சாட்ஜிபிடி என்கிற ஏஐ சாட்பாட்டிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் பார்ட் (Bard) என்கிற ஏஐ சாட்பாட்டை ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டது.

ஆனாலும் கூட, அது சாட்ஜிபிடி அளவிற்கு சிறப்பாக செயல்படுவது போல் தெரியவில்லை என்கிற கருத்துக்கள் நிலவுவதால் கூகுள் நிறுவனம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது!

Google மற்றும் பிற சேர்ச் எஞ்சின்களிலிருந்து இந்த புதிய Bing எந்த அளவு வேறுபடுகிறது?

வழக்கமாக, ஒரு குறிப்பிட்ட வார்த்தையை பற்றியோ அல்லது குறிப்பிட்ட விஷயத்தை பற்றியோ நீங்கள் கூகுள் சேர்ச் செய்தால், உங்களுக்கு என்னென்ன கிடைக்கும்? உங்கள் தேடலுக்கு பொருத்தமான அல்லது அது தொடர்புடைய லிங்க்களின் பட்டியல் (List of Links) கிடைக்கும். அப்படித்தானே?

ஆனால் புதிய பிங் சேர்ச் எஞ்சின், லிங்க்களின் பட்டியலை வழங்காமல் இன்டர்நெட் முழுவதும் உள்ள நம்பகமான ஆதாரங்களை ஒருங்கிணைத்து ஒரு சுருக்கமான பதிலை வழங்கும்!

அலெர்ட் ஆக இருக்கவும்.. இது அவ்வப்போது சொதப்பும்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கூற்றுப்படி, சாட்ஜிபிடி உதவியுடன் இயங்கும் புதிய பிங் வெர்ஷன், ஒரு ஆரம்பகால முன்னோட்டமாகும். இதை பயனர்கள் நன்றாக நினைவில் வைத்து கொள்ள வேண்டும்!

அதாவது, இது மிகவும் சுருக்கப்பட்ட இன்டர்நெட் கன்டென்ட்டை அடிப்படையாக கொண்ட பதில்களை வழங்கும் என்பதால், சில நேரங்களில் இது எதிர்பாராத ரிசல்ட் அல்லது தவறான ரிசல்ட்களை கூட காண்பிக்கலாம். எனவே இதை புத்திசாலித்தனமாக பயன்படுத்துமாறு மைக்ரோசாப்ட் பரிந்துரைத்துள்ளது!

தவறான ரிசல்ட்களை கொடுத்தால்.. புகார் அளிக்க முடியுமா?

முடியும்! புதிய பிங் சேர்ச்சில் தவறான அல்லது பொருத்தமற்ற கன்டென்ட்டை ரிசல்ட் ஆக பெற்றால், அது குறித்து கருத்து அல்லது புகார் தெரிவிக்க முடியும்!

அதை செய்ய, உங்களுக்கு கிடைத்த பதிலின் மேல் வலது மூலையில் உள்ள மெனுவை (Menu) கிளிக் செய்து, அதனுள் கிடைக்கும் பிளாக் ஐகானை (Flag icon) கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய ஒவ்வொரு பிங் சேர்ச் பேஜின் கீழ் வலதுபுறத்தில் உள்ள ஃபீட்பேக் பட்டனை (Feedback Button) பயன்படுத்தலாம்.

இந்த புதிய பிங் வெர்ஷன் இன்னும் உங்களுக்கு வந்து சேரவில்லையா?

மைக்ரோசாப்ட் எட்ஜ்ஜில் உள்ள பிங் சேர்ச் பேஜிற்கு சென்றால், புதிய பிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்கிற வாசகத்தின் கீழே ஜாயின் விஷ்லிஸ்ட் (Join Wishlist) என்கிற பட்டனை காண்பீர்கள். அதை கிளிக் செய்வதன் மூலம் காத்திருப்பு பட்டியலில் இணைவீர்கள்.

குறிப்பிட்ட காத்திருப்பு பட்டியலை கடந்ததும் உங்களுக்கு ஒரு இமெயில் அனுப்பப்படும். அது (பிங்.காம்) Bing.com வழியாக அணுக கிடைக்கும் புதிய பிங் வெர்ஷனுக்கான அணுகலை உங்களுக்கு வழங்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
New Bing Powered By ChatGPT is How Different From Google Search How to use it Properly
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X