Home
News

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்! பழையபடி ரூ.200-க்கு Airtel-ன் புது பேஸிக் ரீசார்ஜ்.. ஆனா Jio தான் வின்னர்!

கடந்த 2024 ஆம் ஆண்டில் செய்ததை போலவே இந்த ஆண்டும் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தத்தம் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை (Mobile Recharge Tariff Hike) உயர்த்தலாம் என்றும், இது ஜூன் அல்லது ஆகஸ்ட் 2025 இல் நடக்கலாம் என்றும் டெலிகாம் வல்லுநர்கள் கணித்து இருப்பதாக தகவல் வெளியாகி பகீர் கிளிப்பி இருந்தது. ஆனால் இதற்கு முற்றிலும் நேர்மாறாக பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஒரு வேலையை பார்த்துள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆனது அதன் ப்ரீபெய்ட் பிரிவின் கீழ் ரூ.189 க்கு புதிய பேஸிக் ரீசார்ஜ் (Airtel New Rs 189 Basic Recharge) ஒன்றை அறிமுகம் செய்து பட்ஜெட் வாசிகள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. ஏற்கனவே ஏர்டெல்லின் வலைத்தளம் மற்றும் ஏர்டெல் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த திட்டமானது - ஏர்டெல் நிறுவனம் மீண்டும் ரூ.200 க்குள் என்கிற பிரிவில் கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்துகிறது.

புது பேஸிக் ரீசார்ஜ்.. பழையபடி ரூ.200.. Airtel VS Jio.. எது பெஸ்ட்?

அதிக விலை கொண்ட டேட்டா பேக்குகளில் செலவு செய்ய விரும்பாமல் தங்கள் மொபைல் நம்பரை ஆக்டிவ் ஆக வைத்திருக்க விரும்புவோரை இலக்காக கொண்டுள்ள ஏர்டெல்லின் ரூ.189 ரீசார்ஜ் ஆனது 21 நாட்கள் என்கிற வேலிடிட்டி (21 Days Validity) உடன் வருகிறது. இந்த காலகட்டத்தில், வாடிக்கையாளர்கள் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1ஜிபி மொபைல் டேட்டா மற்றும் மொத்தம் 300 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை பெறுவார்கள்

அம்பானி விடுவாரா? இந்த புதிய திட்டத்தின் மூலம் ஏர்டெல் நிறுவனம் அதன் ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (Average revenue per user - ARPU) அதிகரிக்கலாம் மற்றும் குறைந்த அளவில் செலவு செய்யும் வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ளலாம் என்றும் நம்புகிறது. ஆனால் இது நடக்குமா? அம்பானி விடுவாரா.. அதாவது ஏர்டெல்லின் முக்கிய போட்டியாளர் ஆன ஜியோ (Jio) விடுமா?

ஜியோவிடமும் ரூ.200 க்குள் என்கிற பட்ஜெட்டில் பேசிக் ரீசார்ஜ் உள்ளது. ஒப்பீட்டளவில் இது ஏர்டெல்லின் புதிய ரூ.189 திட்டத்தை விட "பெட்டர்" ஆன நன்மைகளை வழங்குகிறது. அது 14 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.198 திட்டமாகும். 1 நாட்கள் அல்லது 1 வாரம் என்கிற அளவில் குறைவான வேலிடிட்டியை வழங்கினாலும் கூட ஏர்டெல்லின் ரூ.189-ஐ விட ரூ.9 அதிக விலை கொண்ட இந்த திட்டம் டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

கூடவே டெய்லி 100 எஸ்எம்எஸ்களையும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் வழங்குகிறது. அதாவது ஏர்டெல் 1ஜிபி டேட்டாவை வழங்க ஜியோவானது மொத்தம் 28ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் ஏர்டெல் வெறும் 300 எஸ்எம்எஸ்களை வழங்க ஜியோவானது மொத்தம் 1400 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. எப்படி பார்த்தாலும் ஜியோ தான் வெற்றியாளர்!

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஏர்டெல்லின் இந்த புதிய திட்டத்திற்கு போட்டியாக இதே விலைப்பிரிவின் கீழ் ஜியோ நிறுவனத்தின் புதிய ரீசார்ஜ் அறிமுகம் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் ஏர்டெல்லின் ரூ.189 ஆனது ஏற்கனவே இருக்கும் ரூ.199 உடன் அமர்கிறது. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ரூ.199 க்கு ஜியோவிடம் ஏற்கனவே ஒரு திட்டம் உள்ளது. ஆக ஏர்டெல்லை போலவே ரூ.190 க்குள் புதிய ஜியோ திட்டம் அறிமுகமாக சில வாய்ப்புகள் உள்ளன.

ஜியோவின் ரூ.199 திட்டமானது 18 நாட்கள் என்கிற வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த திட்டம் டெய்லி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடவே டெய்லி 100 எஸ்எம்எஸ்களையும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் வழங்குகிறது. ஏர்டெல்லின் ரூ.199 திட்டமானது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் மொத்தம் 3ஜிபி டேட்டா, டெய்லி 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Basic Recharge From Airtel Rs 189 Vs Jio Cheapest Plan Rs 198 Which Offers Best Benefits to Customers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X