RBI அதிரடி.. புது சேவிங்ஸ் அக்கவுண்ட் ரூல்ஸ்.. லோ பேலன்ஸ், ஏடிஎம் சார்ஜ் உட்பட ஒரே நேரத்தில் 5 மாற்றங்கள்!
ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது வணிக வங்கிகளால் வழங்கப்படும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புத்தொகை (Basic Savings Bank Deposit - BSBD) அக்கவுண்ட்ளுக்கான கட்டமைப்பில் பல முக்கிய திருத்தங்கள் / மாற்றங்கள் / புதிய விதிகளை அறிவித்துள்ளது.
ஆர்பிஐ-யின் புதிய விதிகள் ஆனது குறைந்த மதிப்புள்ள வைப்புத்தொகைதாரர்களுக்கு (Low-value deposit holders) அதிக எளிமை மற்றும் அணுகலை உறுதி செய்யும் நோக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிகள் - ஒவ்வொரு பேஸிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட்டி அக்கவுண்ட்ட்டிற்கும் வழங்க வேண்டிய குறைந்தபட்ச வசதிகளின் தொகுப்பை விரிவுபடுத்துகின்றன.

திருத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், பிஎஸ்பிடி அக்கவுண்ட்களில் என்னென்ன மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன?
1. வரம்பற்ற மாதாந்திர டெப்பாசிட்டிளை (Unlimited monthly deposits) செய்யலாம்
2. வழங்கல் கட்டணம் அல்லது புதுப்பித்தல் கட்டணம் (Issuance or renewal fees) இல்லாமல் இலவச ஏடிஎம் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்பாடு
3. வருடத்திற்கு குறைந்தது 25 செக் லீவ்ஸ் கொண்ட காசோலை புத்தகங்கள் (Cheque-books)
4. இணையம் மற்றும் மொபைல் வங்கி (Internet and mobile banking) சேவை
5. ஒரு பாஸ்புக் அல்லது மாதாந்திர அறிக்கை (Passbook or a monthly statement)
மேற்கண்ட திருத்தங்களுடன் சேர்த்து ஏடிஎம்மற்றும் வங்கிகளுக்கு இடையேயான ஏடிஎம் பரிவர்த்தனைகள் உட்பட, வங்கிகள் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 4 இலவச பணம் எடுப்புகளை அனுமதிக்க வேண்டும். மேலும் யுபிஐ (UPI), ஐஎம்பிஎஸ் (IMPS), என்இஎப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஸ் (RTGS) போன்ற டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகள் இந்த ஒதுக்கீட்டிற்கான பணம் எடுப்புகளாக கணக்கிடப்படாது, இதனால் பயனர்கள் டிஜிட்டல் செயல்பாட்டிற்கு அபராதம் விதிக்கப்பட மாட்டார்கள்.
தற்போதுள்ள பிஎஸ்பிடி வாடிக்கையாளர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதிகளை கோரலாம், அதே நேரத்தில் வழக்கமான செபிங்ஸ் அக்கவுண்ட்களை வைத்திருப்பவர்கள் ஏற்கனவே மற்றொரு வங்கியில் ஒன்றை பராமரிக்கவில்லை என்றால், அவற்றை பிஎஸ்பிடி அக்கவுண்ட்களாக மாற்றலாம். மேற்கண்ட திருத்தங்கள் எல்லாமே ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும், இருப்பினும் வங்கிகள் திருத்தப்பட்ட கட்டமைப்பை முன்னதாகவே ஏற்றுக்கொள்ளலாம்.
பேங்கிங் தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை, ஜிஎஸ்டிஎன் (GSTN) என்கிற சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் (Goods and Services Tax Network) ஆனது, யுபிஐ (UPI), கிரெடிட் கார்டு (Credit Card) மற்றும் டெபிட் கார்டு (Debit Card / ATM Card) முறைகள் மூலம் ஜிஎஸ்டி பணம் செலுத்த அனுமதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் ஆந்திர பிரதேசத்தையும் சேர்த்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இது நாடு தழுவிய அளவில் - சரக்கு மற்றும் சேவை வரி ஆட்சியின் கீழ் 28 மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டதன் நிறைவை குறிக்கிறது. இந்த பட்டியலில் கூடிய விரைவில் யூனியன் பிரதேசங்களும் ஒருங்கிணைக்கப்படும் என்று ஜிஎஸ்டிஎன் கூறியுள்ளது; அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த பட்டியலில் ஆந்திரப் பிரதேசத்தையும் சேர்ப்பதன் மூலமும், ஜிஎஸ்டி தளத்தில் வேகமான, பாதுகாப்பான மற்றும் பயனர் நட்பான டிஜிட்டல் கட்டண முறைகளை ஒருங்கிணைப்பதன் மூலமும் - இந்திய அரசாங்கம் ஆனது பணமில்லா வரி இணக்கத்தையும் ஊக்குவிப்பதோடு சேர்த்து பலருடைய வணிகத்தை எளிதாக்கி உள்ளது.
இந்த வசதியின் கீழ், ஜிஎஸ்டி பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோர் இப்போது நெட் பேங்கிங் அல்லது மேனுவல் சலான் பதிவேற்றங்களை நம்பி இருக்காமல், ஜிஎஸ்டி போர்டல் மூலம் நேரடியாக தங்கள் வரிகளை செலுத்தலாம். இந்த புதிய இன்டர்பேஸில் யுபிஐ ஆப்கள் அல்லது ரூபே (Rupay), விசா (Visa), மாட்ஸர்கார்டு (MasterCard) மற்றும் டைனர்ஸ் கிளப் (Diners Club) போன்ற முக்கிய கார்டு நெட்வொர்க்குகள் மூலம் உடனடி செயலாக்கத்தை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








