இந்த 4 வங்கிகளில் அக்கவுண்ட் இருக்கா.. பிப்.15 முதல் பணம் அனுப்ப புது ரூல்ஸ், புது லிமிட், புது சார்ஜ்!
4 முக்கிய வங்கிகளில்.. பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதி முதலும் மற்றும் வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதி முதலும் - பேங்க் மற்றும் கார்டு தொடர்பான புதிய லிமிட், புதிய விதிகள் மற்றும் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. என்னென்ன வங்கிகளில்? என்னென்ன மாற்றங்கள் வரவுள்ளன? இதோ விவரங்கள்:
எஸ்பிஐ (SBI) என்கிற ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ( State Bank of India), ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank), எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) மற்றும் பிஎன்பி (PNB) பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) ஆகிய 4 வங்கிளில் தான் பிப்.15 முதல் புதிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன.

மேற்குறிப்பிட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்களின் அன்றாட பரிவர்த்தனைகள் (Transactions), கிரெடிட் கார்டு சலுகைகள் (credit card benefits) மற்றும் இணக்க தேவைகளில் (Compliance requirements) மாற்றங்கள் கொண்டுவரர்படை உள்ளன. கூடவே எஸ்பிஐ வங்கி ஆனது பிப்ரவரி 15, 2026 முதல் சில ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணங்களையும் (IMPS transactions service charges) மாற்றியமைக்க உள்ளது.
இதன்கீழ் - ரூ.25,000 க்கு மேல் மற்றும் ரூ.1 லட்சம் வரையிலான ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிமாற்றங்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 பிளஸ் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். ரூ.1 லட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.6 பிளஸ் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும், அதே நேரத்தில் ரூ.2 லட்சத்திற்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான பரிமாற்றங்களுக்கு ரூ.10 பிளஸ் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் பிப்ரவரி 1, 2026 முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் புக்மைஷோ (BookMyShow) வழியாக வழங்கப்படும் இலவச திரைப்பட சலுகையை ஐசிஐசிஐ வங்கி நிறுத்தும். மேலும் இந்த வங்கி அதன் பல பிரபலமான கார்டு வகைகளில் - போக்குவரத்து மற்றும் காப்பீட்டு செலவுகளுக்கான ரிவார்ட் பாயிண்ட்களை தொடர்ந்து சரிசெய்யும்.
எச்டிஎப்சி வங்கி ஆனது பிப்ரவரி 1, 2026 முதல் அதன் கிரெடிட் கார்டு திட்டத்தில் மாற்றங்களை அறிமுகப்படுத்தும். வங்கி அதன் இன்ஃபினியா மெட்டல் கிரெடிட் கார்டுக்கான ரிவார்ட் பாயிண்ட் மீட்பு விதிகளை திருத்தும், மாதத்திற்கு அதிகபட்சமாக ஐந்து முறை மட்டுமே மீட்புகளை கட்டுப்படுத்தும். பிப்ரவரி 1, 2026 முதல், உங்கள் இன்ஃபினியா கிரெடிட் கார்டில் உள்ள வெகுமதி புள்ளிகளை மாதத்திற்கு அதிகபட்சமாக ஐந்து முறை வரை மீட்டெடுக்கலாம் என்று எச்டிஎப்சி வங்கியின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ (RBI) வழிகாட்டுதல்களின்படி உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் ( Know Your Customer) என்ற விவரங்களை புதுப்பிக்குமாறு வாடிக்கையாளர்கள் வலியுறுத்தும் ஒரு எச்சரிக்கையை பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ளது. டிசம்பர் 31, 2025 வரை கேஒய்சி காலாவதியான வாடிக்கையாளர்கள் பிப்ரவரி 2, 2026 க்குள் புதுப்பிப்பை முடிக்குமாறு பிஎன்பி கேட்டு கொண்டுள்ளது, அவ்வாறு செய்ய தவறினால் அக்கவுண்ட் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்து உள்ளது.
இதேபோல புதிய பாஸ்டாக் விதிகளும் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும். இந்த புதிய விதிகளின் கீழ் பாஸ்டாக் அமைப்பு எளிமைப்படுத்தப்படும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நாளை முதல் அனைத்து புதிய பாஸ்டாக் வெளியீடுகளுக்கும் கார்களுக்கான (கார் / ஜீப் / வேன் வகை பாஸ்டாக்) உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள் (KYV) செயல்முறையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
செல்லுபடியாகும் வாகன ஆவணங்களை வைத்திருந்தாலும், பாஸ்டாக் செயல்படுத்தப்பட்ட பிறகு சிரமத்தையும், தாமதத்தையும் சந்தித்த லட்சக்கணக்கான சாலை பயனர்களுக்கு இந்த மாற்றம் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கார்களுக்கு வழங்கப்பட்ட பாஸ்டாக்-க்கு, கேஒய்வி இனி வழக்கமான தேவையாக, ஒரு கட்டாயமாக இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தளர்வான பாஸ்டாக், தவறான பாஸ்டாக் வழங்கல் அல்லது தவறாக பாஸ்டாக் பயன்படுத்துதல் தொடர்பான சிக்கல்கள் போன்ற புகார்கள் பெறப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே கேஒய்வி தேவைப்படும். எந்தவொரு புகாரும் இல்லாத நிலையில், ஏற்கனவே உள்ள கார் பாஸ்டாக்-க்கு கேஒய்வி தேவையில்லை என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








